70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நாடு தழுவிய ரீதியில் உள்ள இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். மேற்படி சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் தலவாக்கலை மல்லியப்பு கோவில் சந்தி பகுதியில் ஆரம்பமான பேரணி, தலவாக்கலை நகரை வந்தடைந்து, அங்கு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சம்பள உயர்வு மற்றும் தொழில்சார் சலுகைகளை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறு சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2019 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நேற்றுடன் (30.09.2022) காலாவதியானது, இந்நிலையில் தற்போதைய வாழ்க்கைச் சுமைக்கேற்ப 70 வீத சம்பள உயர்வு வேண்டுமென இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் வலியுறுத்துகின்றது. எனினும், 24 வீத சம்பள உயர்வை மூன்று கட்டங்களாக வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் முன்வந்துள்ளது. இதனை ஏற்க மறுத்தே, தமது கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என வலியுறுத்தி…
Author: admin
இவ்வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) ஆண்களுக்கான ரி20 உலகக் கிண்ண இலங்கை தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ கிரிக்கெட் ஜெர்சி இன்ங (30) அறிமுகப்படுத்தப்பட்டது. தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தி நிறுவனமான MAS Holdings நிறுவனம் இதனை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தது. MAS Holdings நிறுவனத்தின் தலைவர் மஹேஷ் அமலியன் மற்றும் MAS இன் பிரதான நிறைவேற்று அதிகாரி செலான் குணதிலக ஆகியோரால், இலங்கை ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அணித் தலைவர் தசுன் ஷானக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா ஆகியோரிடம் இந்த புதிய சீருடை கையளிக்கப்பட்டது. இந்த ஜெர்சியை வடிவமைத்து உற்பத்தி செய்த MAS Active நிறுவனம், இன்று (30) அதன் கட்டுநாயக்க Nirmaana – MAS Active அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது அதனை உத்தியோகபூர்வமாக கையளித்தது. MAS நிறுவனம் 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கெட்…
கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்த சிறுவர், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாடசாலை அதிகாரிகளிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலைகளில் முறைசாரா வகையில் நிதி அறவிடுவதை தடைசெய்து 2015/5 சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் பெற்றோர்கள் இருக்கும் நிலையில், தேவையற்ற சுமைகளை அவர்கள் மீது சுமத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவர் குறிப்பாக அதிபர்கள் இவற்றை செயற்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சுற்றுலாத்துறையில் ஹோட்டல், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள பிரதான இடங்களாகும் என இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரியந்த திலகரத்ன தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், சூரிய கல திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தினால், அதற்கான ஹோட்டல் மேற்கூரைகளை வழங்க தயாராக உள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக, சில நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் குறைக்கவும் ஏற்கெனவே பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் வரி மூலம் பெறப்படும் யூரியா உர இருப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன தெரிவித்தார். முதல் கட்டமாக ஒரு விவசாயிக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோ யூரியா உரம் வழங்கப்படும் என கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. குருநாகல், அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கே உரம் முதலில் விநியோகிக்கப்படவுள்ளன.
பல தொழிற்சங்கங்களில் உள்ள ரயில் தொழிலாளர்கள் ஒரே நாளில் வெளிநடப்பு செய்வதால், பிரித்தானியாவின் பெரும் பகுதிகளில் உள்ள ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. லண்டன் மற்றும் எடின்பர்க், பிரைட்டன் மற்றும் நியூகேஸில் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இடையே ரயில்கள் எதுவும் இயங்கவில்லை. ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் அஸ்லெஃப், பேச்சுவார்த்தைக்கு உறுதியளித்தார். இதற்கிடையில், ரோயல் மெயில் தொழிலாளர்களின் இரண்டு நாட்களில் இது இரண்டாவது நடவடிக்கையாகும். தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் இதை இந்த ஆண்டின் மிகப்பெரிய வேலைநிறுத்தம் என்று அழைத்தது. ஒரே நாளில் ரயில் தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்வது இதுவே முதல் முறையாகும். மேலும் சுமார் 54,000 உறுப்பினர்கள் இதில் ஈடுபடுவார்கள், எனவே முந்தைய வேலைநிறுத்த நாட்களைக் காட்டிலும் சேவைகள் அதிகம் பாதிக்கப்படும். நெட்வொர்க்கின் பெரிய பகுதிகள் 10 சேவைகளில் ஒன்று மட்டுமே இயங்கும். பின்னர் தொடங்கி வழக்கத்தை விட முன்னதாக முடிவடையும் வரை முழுமையாக நிறுத்தப்படும்.
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின் எரிபொருள் விலைகள் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் மாற்றியமைக்கப்பட உள்ளன. கடந்த ஜூலை மாதம் 17 ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் அமுலுக்கு வந்த விலை சூத்திரத்தின் படி இந்த எரிபொருள் விலை இன்று திருத்தம் செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைக்கப்பட்ட போதிலும், கடந்த நான்கு முறை எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. உலக பொருளாதார மந்தநிலை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட உலக சந்தையில் எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது. எரிபொருளின் விலை லிட்டருக்கு 125 ரூபாவினால் குறைக்கப்படலாம் என எதிர்கட்சியொன்றில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்க தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசிக்கும் ஹெக்டர் கொப்பேகடுவ வீதியில் அமைந்துள்ள வீட்டை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி அலுவலகத்திற்கு கோரிக்கை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கோரிக்கை கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்து வந்த விஜேராம இல்லத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்தவுடன் அவர் அங்கு செல்வார் என தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் ஹெக்டர் கொப்பேகடுவ வீதியில் அமைந்துள்ள வீட்டை தனக்கு வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, ஒக்டோபர் 1 ஆம் திகதி அனைத்து விலங்கியல் பூங்காக்களையும் சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்குமாறு தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதனால் இன்று அனைத்து உயிரியல் பூங்காக்களுக்கும் இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் இலவசமாக நுழைவதை உறுதி செய்ய விலங்கியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தைகள் தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, விலங்கியல் பூங்காவில் விலங்குகளைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்க பல கல்வித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று, இலங்கை குழந்தைகள் தினம் மற்றும் சர்வதேச முதியோர் தினம் ஆகிய இரண்டையும் கொண்டாடுகிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
கொழும்பில் பல இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக நியமித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி சரத் பொன்சேகா மற்றும் சட்டத்தரணி சுதத் விக்கிரமரத்ன ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். சட்டமா அதிபர், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அரச இரகசியச் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ் அவ்வாறான உத்தரவை பிறப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு தமது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றில் தீர்ப்பளிக்குமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு உத்தரவிடுமாறும், மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் வழங்கப்படும்…