வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வெல்லவ புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு புகையிரதம் ஒன்று தடம் புரண்டது. இதன்காரணமாக வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்திருந்தது. இவ்வாறு தடம் புரண்ட ரயில் பெட்டிகள் இன்று(புதன்கிழமை) அதிகாலை தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Author: admin
கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார். இவரது செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. ஆகவே இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகள் மேய்ச்சல் நிலங்கள் என இதுவரை வர்த்தமானி வெளியிடப்படவில்லை. வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்தியுள்ளார். இந்த மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் முறையாக செயற்படவில்லை. நாட்டில் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பால் உற்பத்தி தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்து செல்கிறது. பால் உற்பத்தியாளர்கள் மேய்ச்சல் நிலம் இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். மயிலடுத்துறை பகுதியில் அத்துமீறிய வகையில் ஒரு தரப்பினர் கூடாரமிட்டுள்ளார்கள். இச்செயற்பாடுகளுக்கு…
2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை இலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் (SLC) வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் துபாயில் பாகிஸ்தானை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் 2022 ஆண்களுக்கான ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இலங்கை வென்றது. இந்நிலையில், இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனக குறித்த கிண்ணத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளதான இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை இதுவரை 6 ஆசிய கோப்பை கோப்பைகளை வென்றுள்ளது. 2022 கோப்பையுடன், 1986, 1997, 2004, 2008 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான ஆசிய கோப்பைகளையும் இலங்கை வென்றுள்ளது. குறித்த அனைத்து ஆசிய கோப்பை கோப்பைகளும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கொழும்பு 07 இல் உள்ள Maitland Crescent இல் உள்ள அதன் அருங்காட்சியகம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் மாலை 5.00…
கார் ஒன்று பின் பக்கமாக சென்று விபத்துக்குள்ளான CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து பத்தரமுல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, குறித்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியின் நித்திரைக் கலக்கமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் போது குறித்த காரின் பின்னால் சென்ற முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியுள்ளன. மேலும், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட விதம் CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் தங்கள் தலைமுறையின் எதிர்காலத்தைப் எண்ணி அஞ்சுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. 16 முதல் 25 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (49 சதவீதம்) எதிர்காலத்தைப் பற்றிய தினசரி கவலையை உணர்ந்தனர். அதே நேரத்தில் 59 சதவீத பேர் தங்கள் தலைமுறையின் எதிர்காலத்தைப் பற்றி அஞ்சுகின்றனர். தி பிரின்ஸ் அறக்கட்டளையின் ஆராய்ச்சி இதை வெளிப்படுத்தியது. தொண்டு நிறுவனத்தின் ‘கிளாஸ் ஒஃப் கொவிட்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது தொற்றுநோயால் இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நல்வாழ்வு எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கப்பட்டது. இளவரசர் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியான ஜொனாதன் டவுன்சென்ட், ‘வணிகங்கள், அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இளைஞர்களுக்கு ஒரு நேர்மறையான எதிர்காலத்தை உருவாக்க உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியா முழுவதிலும் உள்ள 2,002 இளைஞர்களிடம் தொற்றுநோய்க்குப் பிறகு தங்கள் வாழ்க்கை மற்றும் தொழில்…
அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள போதிலும் மீன் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் கிடைக்கப்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கடற்றொழில் துறை பாதிக்கப்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தின் தலையீடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட மீன் மீதான தடை நீக்கப்பட்டதன் பின்னர், இலங்கையில் மீன் ஏற்றுமதி கணிசமான அளவு அதிகரித்த போதிலும் அது மீண்டும் தேக்கமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். இதன் காரணமாக மீன்பிடித் தொழில் தொடர்பான ஏனைய வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தினார். எனவே, இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். எரிபொருள் விலை தொடர்பில் மீனவர்களுக்கு அரசாங்கம் சற்று நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இந்நாட்டு மீனவர்களுக்கு ஏற்பட்ட…
சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அறவிடப்பட்டமையை தொடர்ந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவுக்கான விலையை 13 ரூபாவால் அதிகரித்துள்ளன. இதனால் வெதுப்பக உற்பத்தி பொருட்களில் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்தார். இதற்கமைய பாண் ஒரு இறாத்தலின் விலை மேலும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பால் மாவின் விலை நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. அதன்படி 400 கிலோகிராம் உள்நாட்டு பால்மா பக்கெட்டின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி 400 கிலோகிராம் உள்நாட்டு பால்மா பக்கெட்டின் புதிய விலை 950 ரூபாவாக காணப்படுகின்றது. அத்துடன் 1 கிலோகிராம் உள்நாட்டு பால்மா பக்கெட்டின் விலை 230 ரூபாவினால் அதிகரிக்கப்படவள்ளது. இதன்படி அதன் புதிய விலை 2350 ரூபாவாக காணப்படுகின்றது. உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள் குறித்த விடயத்தினை தெரிவித்தள்ளனர்
அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், ஜனவரி 2023 முதல் அரச துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமைக்கும் சுற்றறிக்கையை வெளியிடவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டபடி, அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக மாற்றியமைக்கப்படவுள்ளது.
தீபாவளியை கொண்டாடும் பெருந்தோட்ட மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விடுத்துள்ள இன்று விசேட கோரிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளியை கொண்டாடும் முகமாக சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகங்களினால் 5000 ரூபாய் முற் கொடுப்பனவுத் தொகை சில காலமாக வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தொகை போதுமானதாக இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எனவே,அரசின் தலையீட்டின் பேரில்,தீபாவளி பண்டிகையை கொண்டாடும் முகமாக, குறைந்தபட்சம்,15,000 ரூபாவேனும் முற்பணமாகக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.