வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பிரதேசத்திற்கு இன்று (18) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறித்த பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலிலும் அதனை அண்டிய வடக்கு அந்தமான் கடற்பிராந்தியத்திலும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (19) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாட்டின் வடக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் 2 தொடக்கம் 3 மீட்டர் வரை கடல் அலைகள்…
Author: admin
முல்லைத்தீவு, துணுக்காய், பாண்டியன்குளம் பிரதேச மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட ‘கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத் திட்டத்தை’ வேறு மாவட்டங்களுக்கு திசை திருப்பாமல், மீண்டும் அதே பிரதேசத்தில் ஆராம்பிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். இந்தப் பிரச்சினை சம்பந்தமாக, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் கொண்டுவந்த பிரேரணை தொடர்பில் உரையாற்றிய ரிஷாட் எம்.பி மேலும் கூறியதாவது, “கரும்புள்ளியான் குடிநீர் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான கேள்விமனுக்கள் 2022.01.12ஆம் திகதி பத்திரிகைகளில் கோரப்பட்டது. அத்துடன், உலக வங்கியின் மேற்படி திட்டம், இந்தப் பிரதேச மக்களுக்காக கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டது. இதனால், இந்தப் பிரதேச மக்கள் தமக்கு விமோசனம் கிடைக்குமென மகிழ்ச்சியில் இருந்தபோதும், இன்றுவரை அது ஆரம்பிக்கப்படவில்லை. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதுடன், சிறுநீரக நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்…
பிரேசிலைச் சேர்ந்த மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ் என்ற மோடல் அழகி தனது 40 வயது காதலரான ஜோர்டான் லோம்பார்டியுடன் பிரேசிலியாவில் உள்ள பார்க்வே ஹோட்டலில் தங்கி இருந்தார். இதன்போது மார்செல்லா மது போதையில் இருந்த நிலையில்,. அதிகாலை, அவர்களுக்குள் சண்டை ஏறபட்டுள்ளது. அப்போது லோம்பார்டியிடம் இருந்து கைத்துப்பாக்கியைப் பறித்த மார்செல்லா, அவரை சுட்டுவிட்டு அங்கிருந்து நிர்வாணமாக தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில். படுகாயமடைந்த காதலர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது நிர்வாணமாக தப்பிச்சென்ற மார்செல்லா ஹோட்டலின் வாயிலில் காதலரின் கார் சாரதியை தாக்கியதோடு பாடசாலை பஸ்ஸின் சாரதியையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டீல் 677 வீடுகள் அமைத்து தருவதாக தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிப்புரியும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற மலையக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பு பிரச்சினைகள் குறித்து இம்மாதம் 16ஆம் திகதி இ.தொ.காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் முதலமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டுசென்றார். இதனையடுத்து, இந்தவிடயம் குறித்து முழுமையாக ஆராய்ந்து உரிய தீர்வு வழங்குவதாக தமிழக முதல்வர் செந்தில் தொண்டமானிடம் சாதகமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, இன்று TENTEA நிறுவனத்தின் கீழ் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டீல் 677 வீடுகள் அமைத்து தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், புலம்பெயர்ந்த மலையக மக்கள் சார்பாக இ.தொ.கா. தமிழக முதலமைச்சருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளது.
கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கொரியாவின் சைமோல் மன்றம் வழங்கி வரும் உதவிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார். சைமோல் மன்றத்தின் தலைவர் லீ சூங் (Lee Seung) மற்றும் மன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சைமோல் மன்றம் இலங்கையில் மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று (17) பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்தனர். தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி சியோல் நகரில் இலங்கையர் ஒருவர் உட்பட மேலும் பலரின் உயிரிழப்புக்கும் மற்றும் பலர் காயமடைவதற்கும் காரணமான அனர்த்தம் தொடர்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார். கொவிட்-19 தொற்றுநோய் நிலைமைகளின் போது கொரிய அரசாங்கம் மற்றும் மக்கள் வழங்கிய உதவிக்காக பிரதமர் அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) மற்றும் ஏனைய…
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணி தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவை சந்தித்தது. கூட்டணி பிரதி தலைவர் வெ. இராதாகிருஷ்ணன், எம்பி உதயகுமார் ஆகியோர் கூட்டணி தலைவர் மனோ கணேசனுடன் கலந்துக்கொண்டனர். ஐ.நா சபையின் சார்பாக இலங்கையின் ஐநா நிரந்தர பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் அதிகாரிகள் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவுடன் கலந்துகொண்டனர். இந்திய வம்சாவளி மலையக தமிழரது அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், ஐநா உலக உணவு திட்டம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகள், உணவின்மை மற்றும் வறுமை ஆகியவற்றால் பின்தங்கிய நலிவுற்ற மக்களாக கணக்கெடுத்து அடையாளப்படுத்தியுள்ள பெருந்தோட்ட மக்கள் மற்றும் நகர பாமர மக்கள் தொடர்புகளிலும் ஐநா அதிகாரிகளுக்கு விளக்கி கூறப்பட்டன. இச்சந்திப்பின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி தொகுத்துள்ள, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம், பணிப்பாளர்…
முகநூல் மற்றும் இணையதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலமாக பணம் திருடும் திட்டமிட்ட மோசடி இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட மூவர் (16) கண்டியில் கணினி குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி, தலாத்துஓயா மற்றும் மதவாச்சிப் பிரதேசங்களில் வசிக்கும் இவர்கள், 25 மற்றும் 30 வயதுடையவர்களென குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவிக்கின்றது. முகநூல் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் விளம்பரங்களைப் பார்த்து, அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு அழைப்பது தான் இவர்களின் வேலையாகும். அவர்கள் இதற்காக தங்கள் பெயரிலுள்ள சிம் கார்டுகளை பயன்படுத்துவதில்லை. இவர்கள் முதலில் அந்த விளம்பரங்களில் உள்ள பொருட்களை யாருக்கும் விற்க வேண்டாம் நாங்களே வாங்குவதாகக் கூறுவர். “அந்த விளம்பரங்களிலுள்ள பொருளை யாருக்கும் விற்க வேண்டாம் நான் அதை வாங்குகிறேன் எனக்கு கொஞ்சம் பணம் போதாது ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த எனக்கு ஒரு வாரம் அவகாசம்…
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா. தலைமையகத்திற்கு அருகாமையில் உள்ள பௌத்தலோக மாவத்தையில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு, மாணவர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2022 ஜனவரி முதல் இன்று வரை டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 54,083 ஆக அதிகரித்துள்ளதாகவும் , நாட்டில் 25 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பகுதிகள், அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து 42 வீத டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டம் 5 வீதம், கண்டி மாவட்டத்தில் இருந்து 10வீதம், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 8 வீதம், பதுளை மாவட்டத்தில் இருந்து 4 வீத நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், பிலியந்தலை, ஹோமாகம, பிடகோட்டே, கொத்தடுவ, பியகம, திவுலப்பிட்டிய, கட்டான, மஹர, மீரிகம, களுத்துறை, ஹாரிஸ்பத்துவ, வத்தேகம, , மஹவெவ, மற்றும் வரக்காபொல பிரதேசங்களில் உயர் அபாய நிலைகள் குறைந்துள்ளதுடன், நீர்கொழும்பு, பாணந்துறை, யட்டிநுவர, கரந்தெனிய, மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகள் அதிக…
மினுவாங்கொடை இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொடை – பொல்வத்தையில் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப்படையினருக்கும், அடையாளம் தெரியாத குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.