லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் 12 தசம் 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் ரூபாய் 300 வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Author: admin
தம்புத்தேகம தனியார் வங்கி ஒன்றின் முன்னால் இடம்பெற்ற கொள்ளையை தடுத்து, இரு கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த சார்ஜெண்ட் புத்திக குமார (42313), பொலிஸ் உப பரிசோதகராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு பொலிஸ் பரிசு நிதியத்திலிருந்து ரூ. 25 இலட்சம் பணம் மற்றும் பொலிஸ் வீரப் பதக்கமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி தம்புத்தேகமவிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணம் வைப்பிலிடச் சென்ற வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ரூபா 2 கோடி 23 இலட்சம் பணத்தை ஆயுத முனையில் கொள்ளையிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட இருவர், மடக்கிப்பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கெளரவிக்கப்பட்டுள்ளார். புத்திக குமாரவை கௌரவிக்கும் வகையில், பொலிஸ் மாஅதிபரினால் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு பதவியுயர்த்தும் கடிதம் மற்றும் ரூ. 25 இலட்சம் பணப்பரிசு, பொலிஸ் வீரப் பதக்கம் ஆகியவற்றை வழங்கி வைக்கும் வைபவம் இன்று (03) இடம்பெற்றிருந்தது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…
எரிசக்தி துறையில் முதலீடு செய்ய அவுஸ்திரேலியா பரிசீலித்து வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸை கொழும்பில் சந்தித்துள்ளார். இதன்போது உள்நாட்டு சவால்களைச் சமாளிக்க அண்மையில் வழங்கப்பட்ட உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் தமது நன்றியை தெரிவித்துள்ளார். இதன்போது ஆற்றல் மற்றும் கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அவுஸ்திரேலிய நிறுவனங்களின் முதலீடுகள் குறித்தும் அவர் கருத்துக்களை பரிமாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள 4 வீடுகளை உடைத்து அங்கிருந்து 17 இலச்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட 23 வயதுடைய இளைஞன் ஒருவரை ஹரோயின் போதைப் பொருளுடன் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்துள்ளதாகவும் திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள 4 வீடுகளில் பெறுமதியான பொருடக்கள் தங்க ஆபரணங்கள் திருட்டு போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். இந்த நிலையில் நாவலடி பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து ரைஸ்குக்கர் ஒன்று, தங்க ஆபரணமும். பிறைந்து றைச்சேனை பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி ஒன்று, ரைஸ்குக்கர் 20 ஆயிரம் ரூபா பணமும், செம்மண்ஓடை பிரதேசத்தில் வீடு ஒன்றின் கதவை உடைத்து காஸ்சிலிண்டர் ஒன்று, மணிக்கூடு, 20 ஆயிரம் ரூபா பணமும். நாவலடி பகுதியில் கையடக்க தொலைபேசியான அப்பிள் போன்…
கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சை திகதியை பிற்போட்டால் 10ஆயிரம் பாடசாலைகளை ஒரு மாத காலத்துக்கு மூடவேண்டிய நிலைமை ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், க.பொ.த உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்படுத்தினால் 10ஆயிரம் பாடசாலைகள் ஒரு மாதகாலத்துக்கு மூடவேண்டி ஏற்படுகின்றது. மாணவர்களுக்கு ஏற்கனவே பாடசாலை நாட்கள் குறைவாகவே காணப்படுகின்றன. ஒரு மாதத்துக்கு பாடசாலைகளை மூடிவிடுவதால் மாணவர்களின் பாடத்தவணைகளை உரிய காலத்துக்கு முடித்துக் கொள்ள முடியாமல் போகின்றது. அதேநேரம் பாடசாலை நேர அட்டவணைக்கும், பரீட்சை நேர அட்டவணைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது. அத்துடன் உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போடுவதனால் அடுத்து இடம்பெற ஏற்பாடாகி இருக்கின்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்த முடியாமல் போகின்றது. இவ்வாறு சென்றால் ஒரு நிலைமைக்கு கொண்டுவர முடியாமல் போகும். கோவிட் தொற்று காரணமாக அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டிருந்தன,…
இந்த வார காலப்பகுதியில் கோதுமை மாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் மூலம் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 250 ரூபாவினால் குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் கையிருப்பு இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அதற்கான அனுமதி இந்த வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவுடன் கூடிய சுமார் 100 கொள்கலன்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தில் இருப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். துருக்கி மற்றும் டுபாயில் இருந்து அண்மையில் கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்த அவர், ஏற்றுமதியில் ஏற்பட்ட தாமதம் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது. பாராளுமன்றத்தில் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வர்த்தக அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு காரணம் அதன்பின் நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளே என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வலவாஹெங்குணவெவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பியினரே நாட்டை சீரழித்த வன்முறை அலையை கட்டவிழ்த்துவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரஹத் மகிந்த தேரர் காலமானதன் 2282வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மிஹிந்தலை விகாரையில் சமய நிகழ்வுகளை தொடர்ந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சாதாரண மக்கள் போசாக்கின்மையால் அவதியுறும் வேளையில் ஆட்சியாளர்கள் ஆடம்பர சுகங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை அழிப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நபர்கள் தேசபக்தர்களாக இருக்க முயற்சிப்பதாகவும் மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் அவர்களை நிராகரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மோசடி செய்பவர்களை பாதுகாக்க அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதை விடுத்து மக்களை உயர்த்தி பாதுகாப்பது நாட்டின் பாதுகாவலர் என்ற வகையில் ஜனாதிபதியின்…
சக மாணவர்களின் பகலுணவை திருடி உண்ணும் மாணவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பகலுணவை கொண்டுவரும் மாணவர்கள், பகலுணவை கொண்டுவருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். குருணாக்கல்லில் உள்ள பிரசித்திப் பெற்ற பாடசாலையில் தரம்-10லேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என அறியமுடிகின்றது. இதனால், சாப்பாடு கொண்டு வரும் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். கடந்த சில வாரங்களாக இவ்வாறு பகலுணவு திருடப்படுவதாகவும், தங்களுடைய புத்தகப் பையில் வைக்கப்பட்டிருக்கும் சாப்பாடும் திருடப்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், சிலர் பாடசாலைக்கு பகலுணவை கொண்டு வருவதை விரும்பவில்லை என்றும் அறியமுடிகின்றது. சாப்பாட்டை களவெடுத்தும் உண்ணும் மாணவர்களுக்கு எதிராக மனிதாபிமானத்தை கவனத்தில் கொண்டு, எவ்விதமான நடவடிக்கைக்கு எடுக்க முடியாதுள்ளது என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட, கெர்சான் பகுதியில் உக்ரைன் படையினர் முன்னேற்றம் கண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் மிகக் கடுமையான போர் முனைகளில் ஒன்றாக திகழும் தெற்கே அமைந்துள்ள கெர்சான் பிராந்தியத்தில் கெர்ஷெனிவ்கா பகுதியிலுள்ள திசைக்காட்டி கம்பத்தில் உக்ரைன் தேசியக் கொடி பறக்கும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதேவேளை, தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மூலோபாய நகரமான கெர்சனின் வடகிழக்கே டினீப்பர் ஆற்றின் மீது உக்ரைனிய துருப்புக்கள், ரஷ்ய நிலைகளை தாக்கியுள்ளன. இந்த முன்னேற்றம் ரஷ்ய இராணுவம் மற்றும் பிராந்தியத்தில் ரஷ்யாவால் நிறுவப்பட்ட அதிகாரிகளால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, கெர்சான் பகுதியில் உக்ரைன் படையினர் ‘சற்று ஆழமாக’ முன்னேறியுள்ளதாக அந்தப் பிராந்தியத்தில் ரஷ்ய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி கிரில் ஸ்ட்ரெமூசோவ் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், அந்தப் பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் பாதுகாப்பு இயந்திரங்கள் சரியான முறையில் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் 3 லிட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவனை, அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை உத்தரவிட்டார். குறித்த மாணவன் 3 லிட்டர் கசிப்பு மற்றும் 16 லிட்டர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இருந்தான். கைது செய்யப்பட்ட சிறுவனை விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.