மலேசியாவில் தொழில்வாய்ப்பினை வழங்குவதாக உறுதியளித்து, பெருமளவிலான பணத்தை பெற்று, அவ்வாறான நபர்களை மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலைக்காக செல்வதைத் தவிர்க்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது, மலேசியாவிலுள்ள சட்டத்தின்படி, நாட்டிற்குள் நுழைந்த பின்னர் சுற்றுலா விசாவை வேலை விசாவாக மாற்ற முடியாது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வேண்டுகோளுக்கு இணங்க, 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மலேசிய அரசாங்கம் இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Author: admin
சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் ஹோமாகம, பிடிபன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்படும் போது குறித்த நபரிடமிருந்து 5.3 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 24 வயதான இவர் பிட்டிபன-தெற்கு பகுதியைச் சேர்ந்தவராவார். அவர் பல்லன்சேன சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறையிலிருந்து தப்பியோடியவர் நீதிமன்ற அழைப்பாணை தவிர்த்துவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட வழக்குகள் தொடர்பில் அவரைக் கைது செய்வதற்கு இரண்டு பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மடட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவாவான் நேற்று (04) உத்தரவிட்டார். காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக தெரிவித்து சம்பவதினமான 2ம் திகதி ஞாயிற்றுகிழமை அப்பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் வைத்து பாலியால் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் குறித்த இளைஞனை கைது செய்து செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவாவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 18 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கொட்டகலை – திம்புளைபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் ,சிறுத்தைப்புலி ஒன்று இன்று காலை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உணவு தேடி இந்த பகுதிக்கு வரும் வழியில் இவ்வாறு வீட்டின் பின்பகுதிக்கு இறங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை கண்ட வீட்டாளர்களும், பிரதேசவாசிகளும் திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன், நுவரெலியா வனஜீவராசிகள் காரியாலயத்திற்கும் அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதிகாரிகள் வரும் வரை, அப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக உயர்த்தியதன் காரணமாக ஏற்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவும் கல்வித்தரத்தை உயர்த்தவும் 2023 இல் 8,000 புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு 8,000 ஆசிரியர்கள் ஓய்வுபெறவுள்ளதாகவும், இந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். கல்வி அமைச்சு ஏற்கனவே விண்ணப்பங்களை கோரியுள்ளதாகவும், திறன் பரீட்சையின் அடிப்படையில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
தொலைபேசி நிறுவனங்கள் இன்று (5) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தை அதிகரித்துள்ளன. இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் விரிவான தகவல்களை வெளியிட உள்ளன.
முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உறவு வலுப்படுத்த திருகோணமலையில் புதிய முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘பள்ளிவாசல் சுற்றுப்பயணம்’ என குறிப்பிடப்படும் இந்த தனித்துவமான சர்வ மத நிகழ்வு, இன்று (புதன்கிழமை) திருகோணமலை அனுராதபுர சந்தியில் அமைந்துள்ள அல்ஹீலூர் ஜீம்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. குறித்த சுற்றுப்பயணத்தில் உறவு ரீதியான வரவேற்பு, ஒழுங்கு படுத்தப்பட்ட பள்ளிவாசல் தரிசிப்பு, வணக்க வழிபாடுகளை நேரடியாக காண்பித்தல், இஸ்லாம் பற்றிய தவறான அபிப்பிராயங்களை தெளிவுபடுத்தல், முஸ்லிம்களின் கட்டடக்கலை வரலாறு, ஆன்மீக விழுமியங்கள் போன்றவற்றை அறிந்து கொள்தல், சுவரொட்டி கண்காட்சி என்பன இடம் பெற்றன. இன்றைய ஆரம்ப நிகழ்வில் மும்மத தலைவர்கள், அரச அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், பங்கேற்றதோடு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துக்கொண்டிருந்தனர். இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக அனைத்து மதம் மற்றும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அத்துடன் இந்த விடயத்தை பலரும் வரவேற்றுள்ளனர்.
இந்தியாவின் உத்திரகாண்டப்பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பஸ்ஸில் 50 பேர் பயணித்திருந்த நிலையில் 25 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். இதேவேளை 21 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரகின்றமை குறிப்பிடதக்கது.
முல்லைத்தீவு நகரில் மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்னெடுக்கப்படும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு மிக்க குறைவான ஆதரவே கிடைக்கும், அதற்கான இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையுடன் இணங்கப்போவதில்லை என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உண்மைகளை கண்டறியும் பொறிமுறை அவசியம் எனவும், அது உள்ளக பொறிமுறையாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், உண்மைகளை கண்டறியும் விதமாக உள்ளக பொறிமுறையை உருவாக்குவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் இது குறித்த பொறிமுறை ஒன்றினை உருவாக்க அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர், பயங்கரவாதத்தடைச் சட்டத்தில் தேவையான மாற்றங்களை செய்துள்ளதாகவும், இச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 200க்கும் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இம்முறை பிரேரணையில் பொருளாதார குற்றங்கள் குறித்து தெரிவித்துள்ள போதிலும், பொருளாதார விடயங்களை சுட்டிக்காட்டும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை என தெரிவித்த அமைச்சர், இலங்கைக்கு எதிராக மேலும் மேலும் குற்றங்களை…