இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதிகள் 3569 இலங்கையர்கள் தென் கொரியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர். உற்பத்தி துறைக்காக 2795 பேரும் மீன்பிடித்துறைக்கு 724 பேரும் கட்டுமாணத்துறைக்கு 49 பேரும் விவசாயத்துறைக்கு இருவரும் பயணமாகியுள்ளனர். இலங்கை தென்கொரியாவுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள இராஜதந்திர ஒப்பந்தத்துக்கு அமைய, மேலும் இலங்கையர்களை தென்கொரியா பணியாளர்களாக இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் அந்த ஒப்பந்தம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு கிடைத்தவுடன் இலங்கைப் பணியாளர்களை தென்கொரியாவுக்கு அனுப்பும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றையதினம் பறக்கும் படையணியினர் (Flying Squad ) வைத்தியசாலைக்கு திடீரென விஜயம் செய்து பரிசோதித்துள்ளனர். குறித்த சோதனை நடவடிக்கையில் கொழும்பிலிருந்து சென்ற பறக்கும் படையணியினர் வைத்தியசாலையிலுள்ள தாதியர், வைத்தியர், பொதுமக்கள், பணியாளர்கள், தாதிய பரிபாலகரின் கையொப்பமடங்கிய முக்கிய ஆவணங்களை பரிசோதித்துள்ளனர். ஆனால் பறக்கும் படையணியினர் நேற்றையதினம் குறித்த வைத்தியசாலையில் சோதனை செய்ய வந்தபோதும் கடமைக்கு வரவேண்டிய தாதிய பரிபாலகர் நேற்றையதினம் இரவு நேர கடமைக்கு வரல்லை எனவும் தெரியவந்துள்ளது. அத்தோடு வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதிய பரிபாலகர் கடமையை சரிவர செய்வதில்லை எனவும் , இரவு 10 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு செல்வதும் குறிப்பிடத்தக்கது .
இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் விரைவில் திருமணம் செய்துகொள்ளும் இளைஞர்களுக்காகவும், உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காகவும் சமையல் பாடநெறி ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. குறித்த நிறுவனத்தின் தலைவர் சிரந்த பீரிஸ் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நிலவியுள்ள பொருளாதார நெருக்கடியில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையினால் இளைஞர் யுவதிகள் தங்களுக்கு தேவையான உணவினை தாமே தயாரித்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் வெளிநாடுகளுக்கு உயர் கற்கை நெறிகளுக்காக செல்லவிருப்பவர்களுக்கும் இந்த பாடநெறி மிகவும் உறுதுணையாக அமையும் என அந்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதியில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது வேன் மோதிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கண்டி முல்கம்பலா பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. துரதிஷ்டவசமாக இந்த விபத்தில் வீதியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி ஹீரஸ்ஸகல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் அவரது சகோதரர் மற்றும் தாயார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகிறது. அதன்படி, இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 1 பவுண் (24 கரட் ) தங்கத்தின் விலையானது 176,600 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, 1 பவுண் (22 கரட் ) தங்கத்தின் விலையானது 161,950 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 21 கரட் (1 பவுண் தங்கத்தின் விலையானது 154,600 ரூபாவாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் காலாவதியாகவுள்ள பைசர் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இவ்வாறு காலாவதியாகும் நிலையில் கையிறுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் 31 ம் திகதியுடன் குறித்த பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் இவ்வாறு தடுப்பூசிகள் கையிறுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரான இருமல் சிரப்பை குடித்த 66 காம்பியா குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களில் பல்வேறு விதமான அத்தியாவசிய மருந்துகள் தயாரிக்கப்படும் நிலையில் அவை உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவ்வாறாக காம்பியா நாட்டிற்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான இருமல் சிரப்பை குடித்த 66 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வகத்தில் இருமல் சிரப்பை ஆராய்ந்தபோது, அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக டை எதிலின் க்ளைகால் மற்றும் எத்திலின் க்ளைகால் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup, Magrip N Cold Syrup என்ற இந்த 4 சிரப்புகளிலும் வேதியியல் பொருட்கள் நிர்ணயித்த அளவை விட அதிகமாக கலந்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த சிரப்புகளை ஹரியானாவை சேர்ந்த மெய்டன்…
வவுனியா-ஹொரோவ்பதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த மோட்டார் சைக்கிளில் தீ பரவியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (06) முற்பகல் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை செலுத்தும் போது தீ பரவியதையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்தவர் அவ்விடத்தை விட்டு வெளியேறினர். எவ்வாறாயினும், அப்போது எரிபொருள் பம்பின் மறுபுறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை திடீரென அந்த இடத்திலிருந்து அகற்ற முற்பட்டுள்ளனர். அப்போதும் முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் செலுத்தப்பட்டு, எரிபொருள் குழாய் இருக்கும்போதே வாகனத்தை அவ்விடத்திலிருந்து அகற்ற முற்பட்டதால் பெரும் விபத்து ஏற்படவிருந்தது. எனினும், விரைந்து செயற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. விழாவின் முதலாவது அமர்வு பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது. இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி சனிக்கிழமை வரை மூன்று நாட்களில் எட்டு அமர்வுகளாக இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது. இந்த விழாவில் 2 ஆயிரத்து 378 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
துருக்கியிலிருந்து கீரிசுக்கு 2 படகுகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தப்பி சென்ற போது ஏற்பட்ட கடும் சூறாவளி காற்றினால் 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. இதையடுத்து, படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று 30 பேரை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில், 15 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும். மேலும், காணாமல் போன பலரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..