உலகில் அதிக பாதுகாப்புச் செலவீனங்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 10வது இடத்தைப் பிடித்துள்ளதாக நிதியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரியந்துள்ளது. உலகிலேயே பாதுகாப்புக்காக அரசாங்க நிதியில் அதிகம் செலவிடும் நாடு வடகொரியா எனவும் இதன்போது தெரியவந்துள்ளது. அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் தங்கள் அரசாங்க செலவில் அதிக சதவீதத்தை பாதுகாப்புக்காக ஒதுக்கியுள்ளன. இவ்வளவு பெரிய பாதுகாப்பு செலவினங்களைக் கொண்ட இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு எதிர்மறை 9 வீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, அத்தாண்டில் நாட்டின் அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் சுமார் 200,000 தொழிலாளர்கள் வேலை இழப்பர் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே அதிக சதவீத அரச ஊழியர்களைக் கொண்ட நாடாகவும் இலங்கை திகழ்கிறது என்பதும் அந்த அறிக்கை காட்டும் மற்றுமொரு விசேட விடயமாகும். இலங்கை பணியாளர்களில் 18 சதவீதமானோரர் அரச ஊழியர்களாகும்.…
Author: admin
வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது. இதையடுத்து, வாகனங்களின் விலை சடுதியாக உயர்ந்தது. பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்தன. இந்த நிலையில், தற்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிக வட்டி வீதங்கள், பணவீக்கத்தின் அதிகரிப்பு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணிகள் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்களின் விலைகளை குறைக்க உதவியுள்ளன. கடந்த மாதம் 09 மில்லியன் ரூபாவுக்கு விற்பனையான ஹொண்டா வெசல் 2015 வகை வாகனம் இந்த மாதம் 7.5 மில்லியன் ரூபாவுக்கு விற்பனையானது. மேலும் 7.2 மில்லியன் ரூபாவாக இருந்த டொயோட்டா விட்ஸ் 2017 வகை வாகனம் 6.5 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது. 2008 டொயோட்டா அலியன் கிட்டத்தட்ட 7.5 மில்லியன் ரூபாவுக்கு விற்கப்பட்டது. ஆனால், இப்போது 06 மில்லியன் ரூபாவுக்கு விற்கப்படுகிறது. 2020 மார்ச் மாதம் வாகன இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி…
பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்தி செயற்பட்டுவந்த நபரொருவரை கொஸ்கம பொலிஸார் களுஅக்கல, வக பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். தனது மாந்திரீகம் எப்போதும் பிழைக்காது என்று முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பிரகாரம் பெண்ணொருவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று, போதை பானத்தைக் கொடுத்து, நிர்வாணமாக்கி, புகைப்படம் எடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தன்னை விட்டு பிரிந்து வாழும் கணவனை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மாந்திரீகம் செய்ய விரும்புவதாக கூறியதையடுத்து சந்தேக நபருக்கு அந்த பெண்ணின் தொலைபேசி இலக்கம் கிடைத்துள்ளது. குறித்த பெண்ணை பூஜை ஒன்றில் கலந்து கொள்ளுமாறு கூறிவிட்டு சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல், கும்புக்கெட்டே பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இது தொடர்பான பூஜையை நடத்த…
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக தாக்கி உள்ளார்கள். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று மாலை தொடங்கிய என்கவுண்டர் நள்ளிரவு வரை நீடித்தது. இதையும் படியுங்கள்: குஜராத்தில் இன்று 2-வது நாள் பயணம்: பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் பாதுகாப்பு படை வீரர்கள் இன்று காலை நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி நடை பெற்று வருகிறது. அந்த பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்று தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தான் சோபியான்…
இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் திறன் கொண்ட இளைஞர்கள் எதிர்காலத்தில் ருமேனியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் இணைவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என இலங்கைக்கான ருமேனிய தூதுவர் விக்டர் சியுஜ்டியா தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (07) அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே இலங்கைக்கான ருமேனிய தூதுவர் இதனைத் தெரிவித்தார். பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் ருமேனியாவில் அதிகளவில் முதலீடு செய்து வருவதாகவும், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த திறமையான தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் விக்டர் சியுஜ்டியா கூறினார். பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் ரோமானிய நிறுவனங்களில் ஐடி நிபுணர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைகள் இருக்கலாம் என்றார். உயர்கல்வித் துறையில் ஒத்துழைப்பைப் பற்றி விவாதிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் ஒரு பரிமாற்ற விஜயத்தின் கீழ், இலங்கை கல்வியாளர்கள் குழு விரைவில் ருமேனியாவுக்குச் செல்லவுள்ளதாக தூதுவர் சியுஜ்டியா தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய…
நாட்டை அழித்த ராஜபக்சக்களைக் கூண்டோடு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். தனது அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்காக இளைஞர்களிடம் அனுதாபம் தேடும் முயற்சியில் நாமல் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. மேலும் தெரிவித்துள்ளதாவது, “ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஒரே காரணத்துக்காக இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது அன்று அந்தக் கைதுக்கு எதிராகக் குரல் கொடுக்க வக்கில்லாத நாமல் ராஜபக்ச, இன்று, சிறையிலுள்ள இளைஞர்களைச் சமூகமயப்படுத்த வேண்டும் என்று கூறுவது வெட்கக்கேடானது. ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தை பின்னால் இருந்து எவரும் வழிநடத்தவில்லை. இளைஞர்களும் மக்களும் தாமாகவே முன்வந்து போராடினார்கள். நாட்டைக் காக்கப் போராடியவர்களைக் கைது செய்யாமல் நாட்டை அழித்த ராஜபக்சக்களைத்தான் கூண்டோடு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மக்களின் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ‘ரணில் -…
இலங்கை இராணுவத்தின் 372 அதிகாரிகளும், 7,127 இதர நிலைகளில் உள்ளவர்களுக்கும் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதியின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியினால் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 05 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாகவும், 23 கேணல்கள் பிரிகேடியர் தரமாகவும், 28 லெப்டினன் கேணல்கள் கேர்ணலாகவும், 35 மேஜர்கள் லெப்டினன்ட் கேர்ணல் தரத்திற்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வாறு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று அறிவித்தனர். இந்த அறிவிப்பை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டிருந்தார். குழந்தை பெற்றுக் கொண்ட நயன்தாரா-விக்னேஷ் சிவன் அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இருந்தும் ரசிகர்கள், வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை…
ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். இலங்கைக்கு வருகைத்தரவுள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார்.