அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது. ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 9 ரூபாவினால் குறைத்துள்ளது (புதிய விலை 229 ரூபாய்), ஒரு கிலோகிராம் கோதுமை மா 14 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. (புதிய விலை 265 ரூபாய்) ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூடு 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது (புதிய விலை 495 ரூபாய்) ஒருகிலோகிராம் பெரிய வெங்கிகாயம் 43 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. (புதிய விலை 255 ரூபாவாகும்)
Author: admin
சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4 ஆயிரம் இலங்கை தாதியர்கள் வேலைக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது. இந்தநிலையில் இங்குள்ள அடிப்படை செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் 10 அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வௌிநாட்டு பயணத் தடை விதித்தது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணத்தை பயன்படுத்தி GI குழாய்களை கொள்வனவு செய்து, வேறு தேவைகளுக்கு பயன்படுத்திய சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகையை கையளித்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளர் சந்திரபால லியனகே, முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது. குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தலா 20,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை, 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர். இவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தார். இந்த வழக்கு பெப்ரவரி முதலாம்…
துருக்கியில் இன்று (23) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனா். தலைநகர் அங்கராவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.0ஆகப் பதிவாகியுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் பீதியடைந்தனா். எனினும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 268 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
அர்ஜென்டினாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் செவ்வாய்கிழமை (22) சவுதி அரேபியாவில் தேசிய அணி வெற்றி பெற்றதையடுத்து அந்நாட்டில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் புதன்கிழமை கொண்டாட்ட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அணியின் வெற்றியை விடுமுறையுடன் கொண்டாட பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அளித்த ஆலோசனைக்கு மன்னர் சல்மான் ஒப்புதல் அளித்துள்ளார். அனைத்து கல்வி நிலைகளிலும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரச அச்சகத்தின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவதில் காணப்படும் சிக்கலை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நெருக்கடி தொடர்பில் தமது ஊழியர்கள் பல மாதங்களாக கலந்துரையாடிய போதிலும் இதுவரை தீர்வு கிட்டவில்லை என அச்சக தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பாடசாலை ஆசிரியைகள் சிலர், சேலைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிரியர் பணியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், பாடசாலைக்கு வருகை தரும் போது, ஆசிரியர்கள் பாரம்பரியமாக பின்பற்றும் நடைமுறைகளை குறித்த ஆசிரியைகள் ஏன் கடைப்பிடிக்க தவறினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அறிக்கையை வழங்குமாறு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில், இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் திலக்ஸன் (வயது 19) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞரும் அவரது நண்பர்கள் சிலரும் இணைந்து வல்லை பாலத்தில் நேற்று (22) மாலை தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர். அதன் போது இளைஞன் பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்துள்ள நிலையில், இளைஞரைத் தேடும் பணியில் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று (23) காலை கடற்படையினரின் சுழியோடிகளால் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட பி 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு´ என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அதிகார சபைக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று (22) மாலை கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது. கடல் பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிக்கும் வகையில் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தக் கப்பல் அமெரிக்க கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டது. விசேட கடற்படை வாகனத் தொடரணியில் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடற்படையினரின் விசேட மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். கப்பலை, அதிகார சபைக்கு கையளிப்பதற்கான பத்திரத்தை கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவிடம் ஜனாதிபதி கையளித்தார்.
மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார்-யாழ் பிரதான வீதி வெள்ளங்குளம் வீதித் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை மறித்து சோதனையிட்டதில் லொறியில் இருந்து சுமார் 24 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 12 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் போது வவுனியாவை சேர்ந்த 37 மற்றும் 45 வயதான இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.