இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டுக்கு ஜப்பான் உதவவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டுக்கு ஜப்பான் உதவவுள்ளதுடன் கடன் இணக்கப்பாட்டு மாநாட்டுக்கு தலைமை தாங்குவதற்கும் ஜப்பான் இணக்கம் :தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Author: admin
கரையோரப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் என கனிய வள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்குவதற்கு போதிய மண்ணெண்ணெய் இருப்பு இல்லை என அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மினுவங்கொடை கமங்கெதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, துப்பாக்கி பிரயோகத்தில் ஒரே குடும்பத்தை மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மினுவங்கொடை பொலிஸார் மேலதிக் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் இறுதி நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து விரைவில் தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சிக்கு சென்ற குழு ஒரு கருத்தையும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய கட்சிகள் மற்றொரு கருத்தையும் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளன. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முதன்முதலில் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாற்றமான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்தநிலையிலே பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த தொழில்களில் ஆசிரியர் தொழில் முதன்மையானது என்பதையும் உலகம் மற்றும் மனிதகுலம் வாழ்வதற்கு வழிகாட்டும் வழிகாட்டி ஆசிரியர் என்பதையும் இது காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்துள்ள அறிவிப்பில், கல்வி மறுமலர்ச்சியின் இதயமாகத் திகழும் ஆசிரியர்களுக்கு தேசம் மரியாதை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (06) நடைபெறவுள்ளது. இதேவேளை, இலங்கை தொடர்பிலான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று(06) சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதிகாரமிக்க சில நாடுகள் இணைந்து இந்தப் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று(05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பான தீர்மானத்தை தயாரித்துள்ளன. இதேவேளை, குறித்த பிரேரணைக்கு இலங்கை தனது ஆட்சேபனையை முன்வைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ச்சியாக விலையேற்றங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்ட போதும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன. அத்துடன் எரிவாயு மற்றும் எரிபொருள் என்பவற்றின் விலைகள் அதிகரிக்கும் போது மிகப்பெரிய தொகை அதிகரிக்கின்ற போதும் குறைக்கப்படும் போது சிறிய அளவிலான தொகையே குறைக்கப்படுவதால் உணவுகளின் விலையை குறைக்க முடியாது என உணவுப் பொருள் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக மக்கள் இவை அனைத்தையும் சமாளித்தேயாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
“மிக வேகமாக அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரமும் சமூகமும் போராட்டக்காரர்கள் எனப்படுபவர்களால் நாசமாக்கப்பட்டுள்ளது.”என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “நாட்டைக் கட்டியெழுப்பும் வெற்றிகரமான வேலைத்திட்டத்தை அழித்த போராட்டக்காரர்களே இந்தப் பொருளாதார அழிவுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். கடந்த அரசின் போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து திட்டங்களும் கோவிட் தொற்று மற்றும் ரஷ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டது.”என கூறியுள்ளார்.
இந்த வருடம் நாள் ஒன்றில் அதிகூடிய வருமானத்தை ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தினத்தில் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஈட்டியுள்ளது. இதன்படி, 50 இலட்சத்து 80,377 ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. இதற்கு இணையாக ஏனைய சகல மிருகக்காட்சிசாலைகளிலும் நாள் ஒன்றில் அதிகூடிய வருமானம் ஈட்ட முடிந்ததாக விவசாய, வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏனைய மிருகக்காட்சிசாலைகளின் வருமானம் பின்னவல யானைகள் சரணாலயம்- 9 இலட்சத்து 47,000 ரூபா பின்னவல மிருகக்காட்சிசாலை- 9 இலட்சத்து 49,200 ரூபா ரிதியகம சஃபாரி பூங்கா- 8 இலட்சத்து 56,000 ரூபா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிப்பதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களினால் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளதாக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது இத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களை பொறுப்பு கூறவைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்பதுடன், அவர்களை பிணை எடுப்பதாகவே அமைத்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த அறிக்கையில், ‘இலங்கை தொடர்பான ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் பெப்ரவரி 2017இல், தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக கையாளப்பட்ட இலங்கை இராணுவ கற்பழிப்பு முகாம்கள் பற்றிய விபரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது. மேலும்,…