இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையிட்டு நினைவு முத்திரையுடன் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற திருமதி சுசந்திகா ஜயசிங்கவின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரையும் வெளியிடப்பட்டது. ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன, முத்திரையையும் முதல் நாள் கடித உறையையும் சுசந்திகாவிடம் வழங்கிய போது, அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷத சில்வா, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Author: admin
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு செய்ய வேண்டிய மிக அத்தியாவசியமான விடயங்கள் குறித்து உலக வங்கி கருத்து வெளியிட்டுள்ளது. அதற்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் வலுவான பொருளாதார சீர்திருத்த திட்டம் அவசியம் என்று உலக வங்கி தனது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது முக்கியம் என்றும் அறிக்கை கூறுகிறது.
இலங்கையில் 22வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசியல்வாதிகள் நாட்டை நேசிப்பதால்தான் பிரித்தானியா போன்ற அரசியல் சாசனம் இல்லாத நாடுகள் முன்னேறி வருகின்றன என்றும் சுட்டிக்காட்டினார். ஊழல் அரசியல்வாதிகளால் ஊழல் அரசியல் கலாசாரம் பாதுகாக்கப்படுகிறது என்றும் ஊழல் அரசியல் கலாசாரத்தால், ஊழல் அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தினால் நாட்டின் வறுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகள், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார். மருந்துகளை இறக்குமதி செய்யும் போது கவனமாக ஒழுங்குபடுத்தும் முகவர் நிலையங்கள் நடைமுறையில் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, குறித்தமருந்துகள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையில், சுகாதார அமைச்சகம் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து விநியோகப் பிரிவு ஆகியவற்றிலும் இந்த விடயம் குறித்து விசாரணை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளினால் வழங்கப்பட்ட மருந்து நன்கொடைகளும் பரிசோதிக்கப்பட்டன. எனினும் இலங்கையில் குறித்த மருந்துக்கள் கிடைக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகளின் தயாரிப்புகளால் கம்பியாவில் 66 குழந்தை…
யாழ். தெல்லிப்பளை, அம்பனை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த 34 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். அம்பனையிலுள்ள தமது தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவு கொண்டு சென்ற வேளையிலேயே இளைஞர் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
பொலன்னறுவையில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட பொலிஸ் அதிரடிப்படையின் அறலகங்வில முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய நேற்று மாலை பொலன்னறுவை பொலிஸ் பிரிவிலுள்ள அறுணசிரிநிவாச பராக்கிரமசமுத்திர பகுதி வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது புதையல் தோண்டிக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் சிலவற்றையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20,48 வயதுடய பொலன்னறுவை பராக்கிரமசமுத்ர மற்றும் மாவனல்ல பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கைப்பற்றிய பொருட்களுடன் விசேட அதிரடிப்படையினர் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் பொலன்னறுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடொன்றிலிருந்து காணாமற்போன குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நேற்று மதியம், வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற குழந்தை கை, கால்கள் கட்டப்பட்டு உரப் பையில் சுற்றப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள குழந்தை ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தையின் வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் உள்ள முட்புதரில் குழந்தை சுற்றப்பட்டிருந்த உரப்பை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பெற்றோருக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி விசாரணை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை கடத்தியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். ‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ், சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பயனடையும் குடும்பங்கள் அல்லது தனிநபர்கள், மானியங்களை எதிர்பார்த்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அரசாங்க உதவியை எதிர்பார்க்கும் நபர்கள் ஆகியோருக்கு இந்த சலுகைகள் கிடைக்கும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யோசனை 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, வட அயர்லாந்து, வடக்கு மெசடோனியா, ஜெர்மனி, மலாவி, மண்டினீக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகள் இணைந்து முன்வைத்த பிரேரணைக்கு -ஆதரவாக 20 வாக்குகளும் ,எதிராக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்தியா,சீனா உள்ளிட்ட ,20 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் அதனை தடுக்கும் வேலைத்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் . சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாடசாலைகளுக்குள் ஐஸ் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும், கொழும்பில் உள்ள பாடசாலைகளில் இருந்து அதனை தடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலையை உயர்த்தும் வேலைத்திட்டம் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் திரு.சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘குரு பிரதிபா பிரபா’ நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.