வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு, வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கண்டனம் வெளியிட்டுள்ளது. வடமராட்சியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை இந்த கண்டனத்தை பதிவு செய்தார். எதிர்வரும் 9ஆம் திகதி இந்த தாக்குதலுக்கு நல்ல பதில் தருவதாக அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்கள் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், வடக்கு மாகாணம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படுமென எச்சரித்தார். இதேவேளை மண்ணெண்ணெய் விநியோகம் வாரத்திற்கு ஒரு தடவை மாத்திரம் 29 லிட்டர் வழங்கப்படுவதாகவும் அது ஒரு நாளுக்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
Author: admin
எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று சகல முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் மீலாத் விழா ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளத. மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டே சுற்று நிருபத்தின் ஊடாக இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளத. முன்னதாக இது தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், கல்வி அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
வாழ்க்கையை கொண்டு நடாத்த சிரமம் எனக் கூறி, கசிப்பு தயாரித்து விற்றுவந்த அதிபரை பதவி நீக்கியதுடன், அவர் குறித்த விசாரணைகளை உடன் மேற்கொண்டு அறிக்கைடிசமர்ப்பிக்கும்படி, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இன்று உத்தரவிட்டுள்ளார். கசிப்பு பாவனை மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பதுளை மாவட்ட அரச பாடசாலை அதிபர் ஒருவர் குறித்த தகவல், பொலிசாருக்கு கிடைக்கவே குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் இரண்டு போத்தல் கசிப்புடன், குறித்த அதிபரை கைது செய்தனர்.. இந்நிலையில் குறித்த அதிபர் விசாரணைக்குற்படுத்தப்பட்ட போது தமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்த பொருளாதார வசதியின்மையினால், கசிப்பு தயாரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக, அந்த அதிபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெலவிற்கு கிடைத்த அறிவிப்பையடுத்து, அவர் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு, தமக்கு அறிக்கை உடன் சமர்ப்பிக்கும்படி, வலயக்கல்விப பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட பிரதான 09 வங்கிகளின் வலிமைத்தன்மையை பரிசீலிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதானிகளுடன் கடந்த நான்காம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. தற்போது வங்கி கடன்களுக்காக விதிக்கப்படுகின்ற அதிக வட்டிவீதங்களுக்கு அமைய கடன்களில் ஏற்பட்டுள்ள பிரதிகூலங்கள் மற்றும் அனுகூலங்கள் தொடர்பில் இந்த பரிசீலனை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக வங்கிகளில் மேற்கொள்ளப்படும் வெளிப்புற கணக்காய்வினை போன்று அல்லாது மாறுப்பட்ட முறையில் இந்த கணக்காய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்திற்காக பல நிதித்துறை சீர்திருத்தங்கள், வலுவான மற்றும் போதுமான மூலதனமயமாக்கப்பட்ட வங்கி அமைப்பை நிறுவுதல் மற்றும் திருத்தப்பட்ட வங்கிச் சட்டம் உட்பட பல நிபந்தனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமையவே இந்த பரிசீலனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதேவேளை, அரச மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து அரசாங்கம்…
இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, 40 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அதிரடியாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து 250 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 40 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதனால் தென்னாபிரிக்க அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த…
அர்ஜென்டினாவில் இடம்பெற்ற காற்பந்து போட்டியிலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது கச்சா எண்ணெய் கப்பலும் கடந்த பத்து நாட்களில் இலங்கை கடற்பரப்பிற்கு வந்துள்ளது. ஆனால் அந்நிய செலாவணி பிரச்சினையால், இருப்புக்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதால், எரிபொருள் விநியோகத்தை நிலையான முறையில் மேற்கொள்ள முடியும். எனவே எரிபொருள் தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இறந்துபோன சிறுவனின் உடலை இவர்கள் தற்போது குடியிருக்கும் தற்காலிக கொட்டகைக்கு அருகே சில மீட்டர்கள் தொலைவில் பாறை போன்ற கடினமான தரையில் குழி தோண்டி புதைத்திருக்கின்றனர். புதிதாக அந்த பகுதியில் கொட்டகைகளை அமைக்கும் மக்களால் அவ்வளவு எளிதில் அந்த சமாதியை கண்டுபிடிக்க முடியாது.
கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் பேரில் இஸ்லாம் பாட நூல் விநியோகம் நிறுத்தப்பட்டமை மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடநூல்கள் மீளப் பெறப்பட்டமையால் முஸ்லிம் பாடசாலை மாணவர்களின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், 11 மாதங்களாக மாணவர்களின் இஸ்லாம் பாட கல்வி போதித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி உரிமை திட்டமிடப்பட்டு மறுக்கப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதிக்கான மையத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயீல், சட்டத்தரணி ஜிப்ரியா இர்ஷாத் ஊடாக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிக்கான மையத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் இலங்கையின் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகத்தினால் தரம் 6,7,10 மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுடைய இஸ்லாம் பாடநூல் விநியோகத்தை உடன் நிறுத்துமாறும், ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை மீளப்பெறுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.…
மினுவங்கொடை முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்காவது சந்தேக நபர் நேற்றைய தினம் கிரிவுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் தந்தை மற்றும் அவரின் புதல்வர்கள் இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அவர்கள் உயிரிழந்திருந்தனர். துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில், மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் இரு குடும்பங்களுக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டம் பறக்கவிடுவது தொடர்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு உருவான பிரச்சினை இதுவரை நீடிப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நால்வர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற முக்கொலையுடன் இதுவரை 7 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.