Author: admin

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இருதரப்பு கடன் வழங்குனர்களை ஒருங்கிணைத்து இந்தக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி சுஞ்சி சுட்டிக்காட்டுகிறார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் 56 ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்கால கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு கடன் தரவுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவது அவசியம் என்று ஜப்பானிய நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக வங்கி முறைமைக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் விரிவான பகுப்பாய்வை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கானா நாட்டு ஜனாதிபதி நானா அட்டோ அக்குபோ – அட்டோவையும் லண்டனில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை மற்றும் கானாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. அத்துடன், ருவண்டா ஜனாதிபதி பவுல் ககமேவையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து, கலந்துரையாடியுள்ளார். இதன்போது இலங்கை மற்றும் ருவண்டா நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டதோடு, குறிப்பாக விவசாயம் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

Read More

வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, அவரது பையில் 84 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 600 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேகநபர் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

Read More

பராமரிப்பு பணிகள் காரணமாக எதிர்வரும் 08ம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எந்திரகோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் சகல பக்க வீதிகளிலும் மே8 ஆம் திகதி நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டமையினால் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

Read More

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி இரண்டு அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பரல் பிரண்ட் கச்சா எண்ணெய் 72 டொலரராக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 75 டொலரை தாண்டியுள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 79 அமெரிக்க டொலராக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக நாடு முழுவதும் உள்ள பல முக்கிய ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தனகலு ஓயா, களனி, நில்வளவை, களு மற்றும் ஜின் கங்கைகளின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 67 வீதத்தில் நிரம்பியுள்ளன. எனினும், மழைவீழ்ச்சியின் தரவுகளின்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த முக்கிய ஆறுகளும் வெள்ள மட்டத்தை எட்டும் அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். கடல் நிலை பேருவளையிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல்…

Read More

சைபர் கிரைம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் முடிவு செய்துள்ளது. அந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் தெரிந்தோ தெரியாமலோ கணினி குற்றத்தில் ஈடுபட்டால் சட்டத்தின் மூலமான பாதுகாப்பு மற்றும் சட்டத்தினால் வழங்கப்படும் தண்டனைகள் குறித்து தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார். காலத்தின் அவசியமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வாசலில் இருக்கும் மாணவர்கள் அதனால் ஆபத்திலும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனை கருத்திற்கொண்டே மாணவர்களுக்கு சைபர் கிரைம் குறித்து கல்வி கற்பிக்க தீர்மானித்ததாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.

Read More

நீண்ட காலமாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இருந்து ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி விற்பனை செய்யும் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்த வைத்தியசாலை ஊழியர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னர், இன்று (06) காலை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 2020ஆம் ஆண்டு முதல் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இவர்கள் திருடிய ஒக்சிஜன் சிலிண்டர்களின் எண்ணிக்கை 210 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட ஒக்சிஜன் சிலிண்டரை பல்வேறு நபர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தது பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் நேற்று (05) லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துகளை கூறிய ஜனாதிபதி, அவருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இச் சந்திப்பில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையில் வலியுறுத்தினார். டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரினார். இம்மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ‘Fireside Chat’நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க கலந்துகொண்டார். ‘Fireside Chat’ நிகழ்வானது பொதுநலவாய மாநாட்டிற்கு அமைவான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் மேடையாகும். இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கானா நாட்டு ஜனாதிபதி நானா எட்டோ அக்குபோ…

Read More