நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகளை அறிந்தவர்கள் முன்வருமாறு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் தனது கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என அறிவித்துள்ள நிலையில், அதன் நிலைமையிலிருந்து மீள்வது எப்படி என்பதை எவரேனும் அரசாங்கத்திற்கு கற்பிக்க முடியுமானால் அது அவர்களுக்கு இவ்வுலகில் புகழையும் மறுமையில் ஆசீர்வாதத்தையும் கொண்டுவரும் என்று அமைச்சர் கூறினார். இலங்கை அரசு இறையாண்மை பத்திரங்களை வழங்கி வாங்கிய கடனில் ஒரு பகுதியை செலுத்தவில்லை என்று கூறி அமெரிக்க அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அவ்வாறான ஒரு வழக்கை எதிர்கொள்ளும் நிபுணத்துவம் இலங்கைக்கு இல்லை என்றும் அவர் கூறினார். எனவே, Clifford and Sons என்ற நிறுவனத்திடம் சட்ட ஆலோசனை வழங்கும் பொறுப்பை அரசு ஒப்படைத்து, நெருக்கடியில் இருந்து நம்மை விடுவிப்பதற்கான அமைப்பைத் தயாரிக்க Lazard என்ற நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Author: admin
ஸ்கொட்ரெயில் ஊழியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் பரவலான இடையூறு ஏற்படும் என ஸ்கொட்ரெயில் எச்சரித்துள்ளது. ஓட்டுநர் அல்லாத ரயில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சமீபத்திய ஊதிய சலுகையை ஆர்.எம்.டி. தொழிற்சங்கம் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்புத் தொழிலாளி, நிலைய ஊழியர்கள், நடத்துனர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிய மாட்டார்கள். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட நியாயமான சலுகைக்காகப் போராடும் போது, இதுபோன்ற கடினமான விடயங்களை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என ஆர்.எம்.டி. வேண்டுகோள் விடுத்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்கொட்ரெயிலால் சமர்ப்பிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட சலுகையை உறுப்பினர்கள் ஏற்க பரிந்துரைக்க மாட்டார்கள் என்று ஆர்.எம்.டி. கூறியபோது வேலைநிறுத்தம் வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அவுஸ்ரேலிய அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது. பெர்த் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அலெக்ஸ் ஹெல்ஸ் 84 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நாதன் எலீஸ் 3 விக்கெட்டுகளையும் கேன் ரிச்சட்சன், டேனில் சேம்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டொயினிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 208 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியால், 20 ஓவர்கள்…
இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தேயிலை 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 557.38 ஆக இருந்த நிலையில், தற்போது சராசரியாக 1,599.49 ஆக விற்கப்பட்டதாக சிலோன் டீ நிறுவனம் கூறியுள்ளது. இதுவே கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு கிலோகிராம் 1,508.21 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் செப்டெம்பர் மாதம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. 2021 ஆம் ஆண்டு 621.1 ஆக இருந்த குறைந்த ரக தேயிலை செப்டம்பர் மாதத்தில் ஒரு கிலோகிராம் 1,706க்கும் நடுத்தர ரக தேயிலை, 1,336.9 க்கு விற்பனை செய்ய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையுள்ள உயர் ரகங்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு கிலோகிராமுக்கு 557.3 ஆக இருந்த நிலையில் சராசரியாக ஒரு கிலோவுக்கு 1,448.1 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று…
மத்திய வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 22பேர் உயிரிழந்தனர் மற்றும் கனமழையால் ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெனிசுவேலாவில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமானது. இது சமீபத்திய மாதங்களில் வரலாற்று மழை அளவைக் கண்டது. 1999ஆம் ஆண்டில், கராகஸின் வடக்கே உள்ள வர்காஸ் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் சுமார் 10,000பேர் உயிரிழந்தனர். கனமழையால் சான்டோஸ் மிச்செலினா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் லாஸ் தெஜேரியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அவற்றின் 5 கால்வாய்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அரகுவா என்ற மத்திய மாகாணத்தின் வடக்கே நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ, அவசரகால நிலையை பிறப்பித்து உட்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு முகமைகளை சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு…
அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போது அவர் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒன்றிணைந்து நிற்போம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் நேற்று முனதினம் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ சமகால அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்தோம். ஜனாதிபதி கோட்டாபயவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம், இந்த நாட்டை வழிநடத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் போது பின்னால் இருந்த ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என கூறியதன் பின்னர் மகிந்த சுதாரித்துக் கொண்டார். அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் செய்யும் வேலைத்திட்டம் என மாற்றி பேச ஆரம்பித்துள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இன்றைய தினம் (10) அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். இதன்படி இன்றைய தினம் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இன்றைய தினம் வழமைப்போல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வங்கிகளுக்கு மாத்திரம் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் திகதி திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்த போட்டோக்களை அதிகம் வெளியிட்டிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டு போட்டோவுடன் விக்னேஷ் சிவன் அறிவித்து இருக்கிறார். அவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கலாம் என தெரிகிறது.
“மீலாத் வசந்தம்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான மீலாதுன் நபி தின நிகழ்வுகள் சாய்ந்தமருது பெரிய ஜும்மா பள்ளிவாசலினதும் சக்கூர் இளைஞர் பேரவையின் அனுசரணையுடனும் மீலாத் நிகழ்வுகள் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது. அதன் இறுதி நிகழ்வாக மவ்லீத் தமாம மஜ்லிஸும் அதனைத் தொடர்ந்து பல நிகழ்வுகளும் இடம்பெற்றது. ( எஸ்.எம்.எம்.றம்ஸான்)
ஈரானில் அரச தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த தருணத்தில் சைபர் தாக்குதலை அரச எதிர்ப்பாளர்கள் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் அதியுயர் தலைவர் அல் கமேனி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது இந்த இணையத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு அந்த செய்தி ஒளிபரப்புக்கு பதிலாக ஈரானின் அதியுயர் தலைவர் அல் கமேனியின் உருவத்தையும், சமீப காலங்களில் அரசின் நடவடிக்கைகளால் இறந்த பெண்களின் படத்தையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட காணொளியொன்று ஒளிபரப்பாகியுள்ளது. ஈரானில் பொலிஸ் காவலில் இருந்த குர்திஷ் சிறுமி உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் போராட்டங்கள் நடைபெற்று வருவதுடன், இந்த நடவடிக்கையும் போராட்டக்காரர்களால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.