ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. அவர்களுக்கான கொடுப்பனவுகளை ஓராண்டுக்கும் மேலாக அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குறித்த அமைப்பு முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது. தாமதமான கொடுப்பனவுகள் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Author: admin
“எவரையும் கைவிடாதீர்கள்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்துக்கு இன்று (12) வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அவற்றுள் 624, 714 விண்ணப்பங்கள் இன்று (12) வரை தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 341 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள நலன்புரி உதவித் தகவல் அலகுகள் மூலம் அனைத்து விண்ணப்பங்களும் உடனடியாக இத்தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்படும். இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான முன்னோடி திட்டம் அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலகங்களை மையமாகக் கொண்டு இடம்பெற்றதுடன், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. தற்போது நலன்புரித்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் அல்லது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 3.3 மில்லியன் குடும்பங்களுக்கு மேலதிகமாக, 600,000 குடும்பங்கள் கொவிட் இரண்டாம் அலை மற்றும்…
9 வயது சிறுமியை சித்திரவதை செய்த 29 வயதுடைய பெண் ஒருவரை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். கடுவெல பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி தனக்கு நேர்ந்த சித்திரவதை குறித்து கல்லூரியின் சமையல்காரரிடம் கூறியதையடுத்து, அவர் இது தொடர்பில் வகுப்பாசிரியைக்கு அறியப்படுத்தியுள்ளார். பின்னர், ஆசிரியை வழங்கிய அறிவிப்பின் பேரில் அதிபர், குறித்த சிறுமியுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் சிறுமியின் தந்தையின் இரண்டாவது மனைவி என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய பெண்ணுக்கு முந்தைய திருமணத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமான பெண் அதிகாலை 4 மணியளவில் சிறுமியை எழுப்பி தேங்காய் உரிக்கவும், காய்கறிகளை வெட்டவும், பானைகளை கழுவவும், குழந்தை மற்றும் அப்பெண்ணின் ஆடைகளை கழுவவும் உத்தரவிட்டுள்ளார். ஒருமுறை வேலை தவறினால் அந்த சிறுமியை மரத்தில் கட்டி வைத்து…
எதிர்வரும் காலத்தில் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடமும் வரி அறவிடும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஊடக மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (12.10.2022) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர், ”எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இலங்கையில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு வரி கோப்பு திறக்கப்படும். அவர்களின் வருமானத்துக்கு ஏற்ப வரி விதிக்கப்படும் தனியார் சேனலிங் செய்யும் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு நடத்தும் டியூசன் ஆசிரியர்கள் ஆகியோர் பெரும் தொகை வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்ற போதிலும் அவர்கள் இதுவரை வரி செலுத்துவதில்லை. எனவே அவர்களையும் வரி செலுத்தும் வலையமைப்புக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கூடுதல் வருமானத்தைப் பெறுவோரிடம் நேரடி வரி அறவிடப்படாத…
பேஸ்புக் வளைதளத்தை நிர்வாகிக்கும் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா இணைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் பிரஜைகள் ரஷ்யர்களுக்கு எதிராக வெளியிடும் வன்முறைத் தகவல்களை பேஸ்புக் அனுமதிக்கிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு குறித்த பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனத்திற்கு மொஸ்கோ நீதிமன்றம் விதித்து இருந்த தடையை மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்ய அரசாங்கம் இணைத்துள்ளது.
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்த மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு பரிசில்களை வழங்குவதாக கூறி சமூக ஊடகங்கள் ஊடாக 11,627,175 ரூபாவை தனது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளார். இதன்படி பணமோசடி சட்டம், குற்றவியல் துஷ்பிரயோகம், குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அங்கொட-ஹிம்புட்டான பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (12) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாஞ்சோலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினரின் உடல் நிலை தேறி வருவதாகவும், வைத்தியரின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.
மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக 1,000 மெற்றிக் தொன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையிலான 73 வருட நட்புறவை கருத்திற்கொண்டு குறித்த நன்கொடை அரிசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளது. மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவுக்குப் பின்னர் இரண்டு நாட்களில் புதிய மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பின்னர் பல ஆரவாரங்களுக்கு மத்தியில், மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. முன்னதாக, ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா 1953இல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.