மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் செல்ல முற்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேசாலை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் செல்ல முற்பட்டதாக பேசாலைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெரியவர்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் என சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மன்னார் நீதவான் ஏ.எச்.ஹைபத்துல்லாஹ் அவர்கள் மூவரையும் தலா 50,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Author: admin
அரசுக்கு எதிர்ப்பு வெளியிட்டு எதிர்வரும் 28’ ம் திகதி, நாடு தழுவிய ரீதியில் ஹர்த்தால் நடைமுறைப்படுத்த தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. நாட்டின் அரச தனியார் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு அரசுக்கு எதிரான மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறுவிப்பு வெளியிடப்படும் என தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர் வஸந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அதிரடியான தீர்மானமொன்றை எடுத்துள்ளார். நீண்டநேர கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு கூட்டுத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலம் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார். இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆறு மாதங்களிற்கு இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பதற்கான யோசனையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முன்வைத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதமரின் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை ஆறு மாதங்களிற்கு ஏற்படுத்துவதற்கான யோசனையை முன்னாள் ஜனாதிபதி முன்வைத்துள்ளார். நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். கடிதமொன்றில் தனது யோசனைகளை தெரியப்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர் தீர்வுகளை காண்பதற்கும் கூடியவிரைவில் நாட்டிற்கு தீர்வுகளை முன்வைப்பதற்காகவும் இணைந்து செயற்படுவதற்கு எங்களி;;ற்கு உள்ள கடப்பாட்டினை நாங்கள் புறக்கணிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நான் பலகலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் ஆழ்ந்த யோசனைக்கு பின்னர்-காலிமுகத்திடலில் உள்ள இளைஞர்கள் பெரியவர்களின் கோரிக்கைகளை-மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் பல துறை தலைவர்களின் கோரிக்கைகளை கருத்தில்கொள்ளும் முன்மொழிவை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது யோசனைகளை முன்வைக்கும் முன்னர் தான் யாருடன் கலந்துரையாடினார் என்பதை முன்னாள் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. இளைஞர்கள்…
போராட்டக்காரர்கள் குழு ஒன்று அமைச்சர் டி. பி. ஹேரத்தின் வீட்டை முற்றுகையிடும் முயற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாரியபொலவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று நேற்று (24) மாலை இவ்வாறு முயற்சித்ததையடுத்து, பொலிஸார் தலையிட்டு அதனைத் தடுத்ததாக தெரிய வருகிறது. வாரியபொல, எலவிட்டிகம பிரதேசத்தில் இவரது வீடு அமைந்துள்ளது. அப்போது இராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என்றும், அந்த வீட்டுக்குச் செல்லும் பாதையை பொலிஸார் மறித்ததாகவும் தகவல் வெளியானது. எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வீட்டிற்கு முன்னால் சுமார் ஒரு மணி நேரம் கோஷங்களை எழுப்பினர், பின்னர் கலைந்து சென்றனர்.
நாட்டின் மூன்று பகுதிகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெலியத்த, வெல்லம்பிட்டிய மற்றும் கட்டான பிரதேசங்களில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன. பெலியத்த, தாராபெரிய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவர் இனந்தெரியாத ஒருவரால் நேற்று (23) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலையை செய்த சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள பேக்கரிக்குள் வைத்து 37 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். பேக்கரியின் முன்னாள் ஊழியர் ஒருவரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொஸ்லந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மற்றுமொரு வாள்வெட்டுச் சம்பவம் கட்டான சமுர்திகம…
270க்கும் அதிகமானவர்களை பலிகொண்ட உயிர்த்தஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவையும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தனவையும் கைதுசெய்வது தொடர்பில் சிஐடியினர் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் ஆராய்ந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் மீது கடும் தாக்கத்தை செலுத்தும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட 60 பேருடன் வத்திக்கானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தகலல்கள் வெளியாகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச நடவடிக்கைகளை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியையும் தேசிய புலனாய்வு துறையின் முன்னாள் இயக்குநரையும் தாக்குதலை தவறினார்கள் என்ற அடிப்படையில் கைதுசெய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வாரம் நான் யாழ்ப்பாணம் செல்கின்றேன்-அந்த பகுதிக்கு அமெரிக்கா எவ்வாறு தொடர்ந்தும் ஆதரவளிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காகவும், வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்து கவனத்தை செலுத்தும் மாற்றத்தை ஏற்படுத்த முயல்பவர்களுடன் பேசுவதற்காகவும்,ஜனநாயகம் மனித உரிமைகள் மற்றும் அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய ஆட்சி முறை குறித்த எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் வெளிப்படுத்துவதற்காகவும் ஆகும். – அமெரிக்க தூதுவர்-
மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடிக்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களை பெறும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. பிரதமராக மகிந்த ராஜபக்ச நீடிக்கவேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்தும் நோக்கிலேயே கையெழுத்துக்களை பெறும் முயற்சி இடம்பெற்றுள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது – ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் – சமீபத்தில் கட்சியிலிருந்து விலகிச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் இந்த ஆவணத்தில் கையெழுத்திடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவர்கள் இன்று ஜனாதிபதியிடம் அந்த ஆவணத்தை வழங்க திட்டமிட்டிருந்தனர். எனினும் 50க்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே அதில் கைச்சாத்திட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்தராஜபக்சவை பிரதமராக நீடிக்க செய்வதற்கு பசில் ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.