எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வுகாண கோரி நாட்டின் பல பகுதிகளிலும் பிரதான வீதிகளை மறித்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய, ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை, மத்துகம, அவிசாவளை ஆகிய பகுதிகளில் இவ்வாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், போராட்டங்கள் காரணமாக ரம்புக்கனை நோக்கி பயணிக்கும் புகையிரத சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
Author: admin
நேற்றைய தினம் சுற்றாடல் அமைச்சு வழங்கப்பட்ட நசீர் அஹமட் அவர்களுக்கு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட பகுதியில் இவ்வாறான பதாதை ஒன்று காட்சிப்பட்டுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான அரசாங்கம் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாசாக்களை பலவந்தமாக எரித்தனர். பின்னர் ஊடக சந்திப்பு ஒன்றில் 181 ஜனாசா பெட்டிகள் மாத்திரமே எரிக்கப்பட்டன என சர்ச்சைக்குரிய கருத்தினையும் இந்த ஆட்சிக்கு ஆதரவாக முன்வைத்தார்.
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதன் மூலமாக, தற்போதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் காண்போம்“ என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளை உடனடியாக சமாளிக்க வேண்டிய தீர்மானங்களை கையாள்வதே சிறந்தது எனவும் 20 ஆம் திருத்தத்தை நீக்கி 19 ஆம் திருத்தத்தை கொண்டுவருவதே இப்போது தீர்வாக அமையும் எனவும் பிரதான எதிர்க்கட்சி உற்பட கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான உறுப்பினர்களது நிலைப்பாடாக அமைந்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம், நேற்று (18) கூடிய வேளையில் இந்த விடயங்கள் ஆராயப்பட்டிருந்தன. “அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்ப்பலை அதிகரித்து செல்கின்றது, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பும் கிடைக்கவில்லை. எனவே, இவ்வாறானதொரு நிலைமையில், தற்காலிக ஏற்பாடுகளை செய்து நிலைமைகளை கையாள்வதை விடவும் அரசியல் அமைப்பினை முழுமையாக மாற்றி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் நடவடிக்கைகளை எடுக்க முடியுமென்றால் அதுவே சிறந்த…
நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டலினா ஜேர்ஜிவா இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலையான தீர்வுகளை அடைவதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை தூதுக்குழு சாதகமாக பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பிரதிநிதிகள் இன்று முதல் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர். வரும் 24 ஆம் திகதி வரை வாஷிங்டனில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இலங்கைக்கான கடன் சலுகையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் தூதுக்குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலி முகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை தெரிவிக்கவும், வலுசேர்க்கவும் இரண்டாவது நாளாக இன்றும் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் தொடர்கின்றது. ஜனநாயகத்துக்கான மக்கள் குரல் எனும் தொனிப்பொருளின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த நிலையில், இன்றைய போராட்டத்தில் கோ கோட்டா ஹோம், மலையக மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுமை உள்ள அரசாங்கம் உருவாக வேண்டும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மனசாட்சியோடு நடந்துக் கொள்ள வேண்டும், விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தினர். அத்தோடு, கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தின் போது ஹட்டன் மல்லியப்பு சந்தியில்…
CEYPETCO இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. பெட்ரோல் ஆக்டேன் 92 – ரூ. 338 பெட்ரோல் ஆக்டேன் 95 – ரூ. 373 ஆட்டோ டீசல் – ரூ. 289 சூப்பர் டீசல் – ரூ 329
300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம், நாளை மறுதினம் (20) முதல் ஒரு வார காலத்துக்கு நாடு முழுவதும் ஹர்த்தாலை அனுஷ்டிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, நாளைமறுதினம் முதல் இம்மாதம் 28ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் சியல்கோட் பகுதியில் இலங்கை பொறியியலாளரான பிரியந்த குமார அடித்துப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 6 பேருக்கு பாகிஸ்தானின் லாகூரிலுள்ள நீதிமன்றம், மரணதண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. மேலும், குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை. இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். இன்று சிரேஷ்ட நிலை பாராமல் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளேன். அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பு ஆகும். அமைச்சர் என்ற முறையில் கூடுதல் சலுகைகள் எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதையே நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். மேலும், உங்கள் கீழ் உள்ள நிறுவனங்களை ஊழலற்ற, மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்களாக மாற்றுங்கள். பல அரச நிறுவனங்கள் இன்று கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. அவை சரி செய்யப்படுவது மிகவும்…
தில்லி அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட மேலும் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தில்லி அணியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. ரிஷப் பந்த் தலைமையிலான தில்லி கேபிடல்ஸ் அணி, வரும் புதன் அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக புணேவில் விளையாடவுள்ளது. கடந்த வாரம் தில்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபர்ஹர்ட், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் தற்போது தில்லி அணியில் மேலும் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெளிநாட்டு வீரர் மற்றும் பணியாளர் என இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளைக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளது தில்லி அணி. இதனால் தற்போது தில்லி வீரர்கள் அவரவர் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். பயிற்சியும் ரத்தாகியுள்ளது. இன்று புணேவுக்கு தில்லி அணி வீரர்கள் செல்வதாக இருந்த நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான தில்லி அணியின் அடுத்த ஆட்டம் நடைபெறுமா என்கிற…