2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டத்திற்கான விண்ணப்பதாரர்களால் பெறப்பட்ட தவறான செய்திகள், பதிவு செய்வதற்கான உலகளாவிய கோரிக்கையின் காரணமாக இருப்பதாக அமெரிக்க தூதரகம் இன்று (12) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க dvprogram.state.gov ஐ அணுகும் போது தவறான செய்திகள் வந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. “பதிவு செய்வதற்கான உலகளாவிய தேவை காரணமாக தவறுகள் உள்ளன. தயவுசெய்து பொறுமையாக இருங்கள், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்” என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மேலும் கூறியுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் அக்டோபர் 05, 2022 அன்று விண்ணப்பங்களுக்காக திறக்கப்பட்டது. பன்முகத்தன்மை விசா திட்டம் 2024 க்கான விண்ணப்பங்கள் நவம்பர் 08, 2022 இரவு 10.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பன்முகத்தன்மை விசா திட்டம் 2024 க்கான காகித உள்ளீடுகளை அனுமதிக்காது மற்றும் அதன் இணையதளம் https://dvprogram.state.gov வழியாக…
Author: admin
நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 60 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் வரையில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் ஆயிரத்து 152 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதன்படி, இதுவரை 59 ஆயிரத்து 317 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வருடம் குறித்த காலப்பகுதியில் 19 ஆயிரத்து 912 டெங்கு நோயாளர்களே பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடம் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதேவேளை கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது நிலவும் டெங்கு பரவலைக் கருத்திற்கொண்டு 36 பிரிவுகளை அதிக அபாய வலயங்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் எமது பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் இன்று தங்கப்பதக்கங்கள் பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனர். 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 80 மீற்றத் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் செல்வன் MM. றிஹான் அவர்களும், 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 80 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் செல்வி MN. பாத்திமா சஜா அவர்களும் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்து, 6 வருடங்களின் பின்னர் தனி நபர் நிகழ்ச்சிகளில் பதக்கம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனர். இதற்கு முன்னர் பாடசாலை வரலாற்றிலேயே முதன் முறையாக, அஞ்சலோட்டப்போட்டியில் 14 வயதுக்குட்பட்ட அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிகளுக்குக் காரணமான மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர் UL. ஷிபான், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாகிய MAM. றியால், AWM.…
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பான விசாரணை கோரி இலங்கை ஆசிரியர் சங்கம், கல்வியமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து கல்வியமைச்சின் செயலாளருக்கு, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது – தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்துடன் இணைந்து, வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை மாணவர்களுக்கான வினாத்தாள்களை பெறுவதுடன் அதனை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கும் அனுமதித்து வருகின்றார். தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளதுடன் அந்த நிறுவனத்துக்காக ஆசிரியர், அதிபர்களைப் பயன்படுத்தி பரீட்சைகளை நடத்துதல் மற்றும் வினாத்தாள்களை திருத்துதல் என்பன தவறான செயற்பாடாகும். இந் நிறுவனத்தின் வினாத்தாள் திருத்துவது தொடர்பாகவோ பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுவது தொடர்பாகவோ ஆசிரியர் அதிபர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படாமல், வடமாகாண கல்விப் பணிப்பாளர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இச்செயற்பாட்டில் ஈடுபடுவது பாரிய பிரச்சினையாகும். குறித்த நிறுவனத்தின் பழைய…
வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றினை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று (12) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, புதிய பேருந்து நிலையம் முன்பாக வாடகை ஓட்டத்திற்காக தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினை நேற்றுமுன்தினம் மாலை (11) நபரொருவர் எடுத்துச் செல்வதை அவதானித்த பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதி, முச்சக்கர வண்டி உரிமையாளருக்கு குறித்த முச்சக்கர வண்டியை ஒருவர் எடுத்துச் செல்வதை தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்து, அதன் உரிமையாளரும், அருகில் நின்றோரும் குறித்த நபரை விரட்டிச் சென்று வவுனியா நீதிமன்றத்திற்கு அண்மித்ததாக மடக்கிப் பிடித்ததுடன், வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசாரிடம் மடக்கிப் பிடித்த குறித்த நபரை ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கொழும்பு, தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பகிர்ந்து கொண்ட தகவலைத் தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய தாமரைக் கோபுரத் திட்டத்தின் செலவு விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கையின் அடிப்படையில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா இந்த தகவல்களை பெற்றுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்கள், தாமரை கோபுரத்தின் 2021 டிசம்பர் 31 வரையிலான காலத்துக்குரிய மொத்த செலவை உள்ளடக்கியுள்ளது. அந்த தகவல்களுக்கமைய, 113,600,000 அமெரிக்க டொலர்கள் கட்டுமான செலவினங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. அத்துடன், ஆலோசனைக் கட்டணமாக 33 கோடியே 74 இலட்சத்து 85 ஆயிரத்து 20 ரூபாவும், கடன் உறுதி மற்றும் நிர்வாகக் கட்டணங்களுக்காக 22 கோடியே 23 இலட்சத்து 69 ஆயிரத்து 357 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்குதல் ஆகிய…
இன்று முதல் கரையோர மார்க்க ரயில் சேவையின் நேர அட்டவணையில் ஏற்படுத்தவிருந்த திருத்தம் பிற்போடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் சில ரயில்கள் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவோ அல்லது உரிய நேரத்திற்கு முன்னரோ பயணத்தை ஆரம்பிக்கும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று தெரிவித்தது. எனினும் இது அலுவலக ரயில்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும். 400 கோடி இந்திய ரூபா வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. திரைப்படம் வெற்றி கரமமாக ஓடி கொண்டிருப்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. முந்தைய தமிழ் படங்களின் வசூலை பொன்னியின் செல்வன் முறியடித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. உலக அளவில் அதிக வசூல் குவித்த பெரிய வெற்றி படமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டுப் பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இது நடைமுறைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எப்படியிருப்பினும், இந்தக் கடிதம் கிடைத்த சில மணித்தியாலங்களில் அந்த பதவியை நிராகரித்து ஜனாதிபதிக்கு பதில் கடிதம் அனுப்ப முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த கடிதத்தில், அவர் அலுவலக வசதிகளையோ அல்லது தனக்கென ஒதுக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் மறுத்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
தான் சம்பந்தப்பட்ட செய்தியொன்றை வெளியிடுவதற்காக அரச ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் அதற்கு மறுநாளே தாம் ஊடகத்துறை அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். செய்தியொன்றை வெளியிடுவதற்காகதுறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அரச தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அழுத்தம் கொடுத்ததாக பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்து அமைச்சர், அமைச்சின் செயலாளருக்கோ, தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கோ, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கோ அல்லது லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவருக்கு அல்லது அதிகாரிக்கோ ஒரு வார்த்தையாயினும் அது தொடர்பில் கூறியிருந்தால், அதனை எவராயினும் நிரூபித்தால் தாம்…