அனைத்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் நாளை வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதன்படி நாளைய தினம் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன்படி *நாளை வழமை போன்று 5200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்* என அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் சுமார் 1,500 தூரப் பேருந்துகள் உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Author: admin
🔥 *Breaking News* 🔥 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இன்று பிற்பகல் முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன், கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 8,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
பேருந்துகள் இயக்குவதை இன்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில் இடைநிறுத்தவுள்ளதாக இலங்கையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பணிப்புறக்கணிப்பானது *இன்று நள்ளிரவு முதல் நாளைய தினம் நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும்* என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். நாளை மட்டுமல்ல *எரிபொருள் இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியாது என்பதால் அடுத்த சில நாட்களிலும் பேருந்துகள் சேவையில் ஈடுபடாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாக* அவர் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளையதினம் வெள்ளிக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. சகல பகுதிகளிலும் கடைகளை மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்குமாறு அனைவரிடமும் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. நாளையதினம் ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கத்திற்கு *4 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாகவும் , அதன் பின்னரும் பதவி விலகவில்லை எனில் 11 ஆம் திகதி முதல் தொடர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.*
அரசாங்கத்திலிருக்கும் உறுப்பினர்களுடன் இணைந்து இந்த இடைக்கால அரசாங்கத்தினை அமைக்க நாங்கள் எப்போதும் தயார் இல்லை எனவும், அவ்வாறு இது சாத்தியமானால் “புதிய போத்தலில் அடைக்கப்பட்ட பழைய சாராயம்” போன்றதாக அது அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று இடைக்கால அரசாங்கத்திற்குரிய ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீக்கி புதிதாக அமைத்தாலும் எதையும் செய்ய முடியாத அரசாங்கமாகவே அது அமையும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் அரசுக்கு எதிராக நாளை மறுதினம் 6 ஆம் திகதி வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இன்று இணைந்த தொழிற்சங்கத் தின் ஏற்பாட்டில் தொழிற்ச்சங்கங்கள், பொது அமைப்புகள் கூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் 6 ஆம் திகதி அனைத்து கடைகள் மூடப்பட்டும் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது இருக்கவும் முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடாமலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்கள், வங்கிகள், பல்கலைக்கழகம், ஆசிரியர் சங்கங்கள் தமது கடமையில் இருந்து விலகியிருக்கவும் தீர்மானித்துள்ளனர். இதேவேளை 6 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1,102 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 17,405 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 8,936 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியிருந்ததாகவும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் அடையாளம் காணப்பட்ட 207 நோயாளர்களில் கொழும்பு மாவட்டத்தில் 121 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 121 பேரும், காலி மாவட்டத்தில் 112 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 103 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி சபாநாயகர் நியமனம் இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ராஜினாமா செய்ததை அடுத்து பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாகியுள்ளது. அதன்படி இன்று பிரதி சபாநாயகரை நியமிப்பதற்கு நேற்று (04) நடைபெற்ற கட்சித் தலைமைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது. பிரதி சபாநாயகர் பதவிக்கு பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவை நியமிக்க அரசாங்க கட்சி குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரின் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இன்று காலை இடம்பெறும் குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, 11 சுயேட்சை உறுப்பினர்களும் பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக, அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அவர் குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரினால் நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதி மற்றும் நீதி அமைச்சு பதவிகளுக்கு மேலதிகமாக அவருக்கு, இந்த இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
போலி விசாக்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட ஐந்து இலங்கையர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் ஓய்வறையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் தனது 14 மற்றும் 18 வயதுடைய மகள்களுடன் டோகா கட்டாரின் ஊடாக இத்தாலிக்குச் செல்வதற்காக நேற்று இரவு விமான நிலையத்துக்கு வந்துள்ளார். அவர்களின் விசா ஆவணங்கள் தொடர்பான சந்தேகம் காரணமாக, அந்தப் பெண் மற்றும் அவரது மகள்கள் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பின்னர், மாரவிலயைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட மற்றொரு குடும்பம் விமான நிலையத்துக்கு வந்து டுபாய் வழியாக இத்தாலிக்குச் செல்ல முயன்றது. 35 வயதுடைய தாயின் பயண ஆவணங்கள் மீதான சந்தேகம் காரணமாக, அவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்லவிருந்த புத்தளத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும் தனது பயண ஆவணம் போலியானதாக…