Author: admin

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 420 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1080 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

Read More

வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களை அண்மித்து உருவாகும் தாழமுக்க வலயம் எதிர்வரும் 22 ஆம் திகதி மேல் மற்றும் வடமேல் திசை நோக்கி பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழமுக்க நிலையானது எதிர்வரும் 24 ஆம் திகதி சூறாவளியாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன் பின்னர் வடக்கு மற்றும் வடமேல்…

Read More

மன்னார் நகர சபையின் வருடாந்த ஒதுக்கீடு ஊடாக நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபையில் இடம்பெற்றது. இன்று (வியாழக்கிழமை) மன்னார் நகர சபையின் தலைவர் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நடைபெற்ற குறித்த திட்டத்தின் மூலம் 130 க்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய் மார்களுக்கு போசாக்கு உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய் மார்களுக்கு போசாக்கு பொதிகளை மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள்,செயலாளர்,கணக்காளர், சபையின் உத்தியோகத்தர்கள் வழங்கி வைத்தனர்.

Read More

அம்பலாங்கொடை, மாதம்பா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்களில் காணாமல் போன மாணவனின் சடலத்தை கடற்படை சுழியோடிகள் இன்று கண்டுபிடித்தனர். குறித்த இடத்தில் நேற்று நீராட சென்ற மூன்று மாணவர்களும் அலையினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். இதன்போது அருகில் இருந்த நபர் ஒருவர் மாணவர் ஒருவரை காப்பாற்றியதாகவும்இ மற்ற இரு மாணவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் (19) மாலை மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மற்றைய மாணவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

Read More

நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் இதனைத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலாக எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இன்று (20.10.2022) அதிபர் A.G.M. றிசாத் (Sir) அவர்களின் தலைமையில் வரலாற்றில் முதன் முறையாக கோலாகலமாக நடைபெற்று முடிந்த மீலாத் உன் நபி விழா. இவ் விசேட நிகழ்வுக்கு பிரதம அதிதியாக Mrs B. ஜிஹானா ஆலிப் (பிரதி கல்விப்பணிப்பாளர், கல்முனை வலயக்கல்விப் பணிமனை) அவர்கள் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக Mrs. A. P. F நஸ்மியா (உதவிக் கல்விப்பணிப்பாளர், கல்முனை வலயக்கல்விப் பணிமனை) , As-ஷேய்க் Al ஹாஜ் FMA .அன்சார் மௌலானா ( மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர்) ஆகியோரும் , விஷேட அதிதிகளாக அல் ஹாஜ் ALM. ஆசாத் ஹாஜியார் (தொழிலதிபர்) , A.L கபீர் (கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க செயலாளர்) , I . L யூசுப் ஹாஜியார் (கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க பொருளாளர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள்…

Read More

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகிறது. அதன்படி, இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 1 பவுண் (24 கரட் ) தங்கத்தின் விலையானது 166,800 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, 1 பவுண் (22 கரட் ) தங்கத்தின் விலையானது 152,900 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 21 கரட் (1 பவுண் தங்கத்தின் விலையானது 145,950 ரூபாவாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஊடகவியலாளர்களுக்கு பாராளுமன்றத்தில் வழங்கப்படும் தேநீருக்கான கட்டணம் நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஊடகவியலாளர்களுக்கு 25 ரூபாவிற்கு வழங்கப்பட்டு வந்த தேநீர் 100 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் உணவு, தேநீர் மற்றும் சகல வசதிகளுக்காக சுமார் ஆயிரம் ரூபா அறவிடப்படும் வேளையில் ஊடகவியலாளர்களின் தேநீருக்கான கட்டணம் நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஊடகவியலாளர்களின் மதிய உணவின் விலையும் கடந்த மாதத்திலிருந்து நூற்றைம்பது ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழகத்தில் உள்ள வீதிகளில் அம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்புடம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத் தவறினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த அரசாணையில், தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனத்திற்கு வெளியே பொருட்கள், கம்பிகள் இருந்தால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

யாழ். மாநகர எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் மற்றும் காணொளி பதிவு ஆதாரத்துடன் மாநகரசபைக்கு அறிவிப்பவர்களுக்கு குறித்த குற்றத்திற்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் 10 வீத தொகையினை சன்மானமாக வழங்குவதென யாழ். மாநகர சபை தீர்மானித்துள்ளது. யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற மாநகர சபைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது. மேலும் யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு முன்னுள்ள வீதியோரத்தினை அவர்கள் தூய்மையாக பேண வேண்டும். வீதியோரங்கள் பற்றையாக உள்ளமையினால் அதற்குள் குப்பைகளை வீசி விட்டுச் செல்கின்றார்கள். அதற்கு அவ்வீதியில் உள்ள மக்களே பொறுப்பு கூற வேண்டும் என்றும், அவ்வாறு தூய்மையாக பேணாவிடின் அவர்களிடமிருந்து குற்றப்பணம் அறவிடுவது எனவும் மாநகர முதல்வர் வி. மணிவிண்ணனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு குற்றமிழைப்பவர்களிடம் இருந்து அறவிடப்படும் குற்றப்பணத்தில் 10 வீதம் ஆதாரம் தருபவர்களுக்கு சன்மானமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது

Read More