இலங்கையின் முதலாவது நீர் மின் நீர் தேக்கமான காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் அதன் தானியங்கி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேறி வருகின்றது. இந்த தானியங்கி வான் கதவுகள் வழியாக இன்று (24) காலை தொடக்கம் நீர் வெளியேறி வருகின்றது. இந்த நீரானது களனி ஆற்றின் நீர் மட்டத்தை வெகுவாக அதிகரிக்கும் என்பதல் காசல்ரீ நீர்தேக்கத்தின் கீழ் பகுதியில் களனி ஆற்றின் கரையில் குடியிருப்பவர்களும் இந்த ஆற்றினை பயன்படுத்துபவர்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என நீர்தேக்கத்தின் கடமை நேர பொறியலாளர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த பிரதேசத்திற்கு மழைப்பெய்து வருவதனால் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அதிகளவான் நீர் விநியோகிக்கப்படுவதால் இந்த தானியங்கி வான் கதவுகள் அவ்வப்போது திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இன்று காலை 8 மணிக்கு மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மூன்றும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் தாழ்நிலப் பகுதியில்…
Author: admin
பல்கலைக்கழகக் கட்டமைப்பில் ஏற்படும் தாமதம் தடுக்கப்பட்டு, குறித்த காலத்திற்குள் மாணவர்கள் கல்வியை முடிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவிப்பு. கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும்போதே, இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் கால தாமதம் தவிர்க்கப்பட்டு மாணவர்கள் குறித்த காலத்திற்குள் கல்வியை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவத் தலைவர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில், றோயல் கல்லூரியின் சிரேஷ்ட மாணவத் தலைவர் கவீஷ ரத்நாயக்க தலைமையில் மாணவத் தலைவர்கள் சபையின் மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்லூரியின் விவகாரங்கள் மற்றும் நாட்டின் கல்வித்துறையின் நிலைமைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி பதிலளித்தார். இங்கு, பல்கலைக்கழகக் கல்வி குறித்து ஜனாதிபதி மாணவர்களிடம் கேட்டறிந்ததோடு, வெளிநாட்டு உயர்கல்வியில் பட்டம் பெற எடுக்கும் காலத்திற்கும் உள்நாட்டு பல்கலைக்கழகத்தில் எடுக்கும்…
(எஸ்.எம்.எம். றம்ஸான்) கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றினைந்து ZPL – 2022 Season ll என்ற தொனிப் பொருளில கிரிக்கெட் மென் பந்து சுற்றுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் மெற்றோ பெலிற்றன் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டது . இத் தொடரின் இறுதியாட்டங்கள் இன்று காலை முதல் மாலை வரை நடைபெறும். இந் நிகழ்வில் பிடிக்கப்பட்ட காட்சிகள்
இலங்கையில் கிரிப்டோ நாணயங்களை சட்டப்பூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால், கிரிப்டோ நாணயங்களை சட்டப்பூர்வமாக்குவதால் மாத்திரம் நாட்டை முன்னேற்ற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெளிநாட்டு முதலீடுகளினாலேயே எந்த ஒரு நாடும் வளர்ச்சியடைந்தது என கூறிய அவர், கடன்களால் அல்ல எனவும் தெரிவித்தார். இணையவழி ஊடாக நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
கொழும்பு – புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளன. இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பருப்பு 375 ரூபாவாக குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 ரூபா என்ற அடிப்படையில் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். ரிஷி சுனக் தலைமையைப் பாராட்டிய பொரிஸ் ஜோன்ஸன், சில கடினமான சவால்களுடன் பிரித்தானியாவை வழிநடத்தினார் என்று கூறியுள்ளார். 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக கூறிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ரிஷி சுனக் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை தேர்தலில் மூன்றாம் இடம் பிடித்த பென்னி மார்டன்ட், இன்று 100 நாட்கள் ஆதரவைப் பெறாவிட்டால், ரிஷி சுனக் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 357 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், ரிஷி சுனக் தனக்கு 128 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த முறை லிஸ் டிரஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த வர்த்தக அமைச்சர் கெமி படேநோச்,…
உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்களில் பேராதனை பல்கலைக்கழகம் 2023ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைகழக தரப்படுத்தலில் பேராதனை பல்கலைகழகம் உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்களில் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. அத்துடன், பேராதனை பல்கலைகழகம் இலங்கையின், தலைச்சிறந்த பல்கலைகழங்களில் தொடர்ந்து நான்காவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரப்படுத்தல் உலகின் மிக முக்கிய மற்றும் விரிவான தரப்படுத்தல்களில் ஒன்றாகும். 104 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 799 பல்கலைக்கழகங்களுக்கிடையில் குறித்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது. 13 செயல்திறன் தரநிலைகளை மதிப்பிடுகின்றன. கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் சர்வதேச கண்ணோட்டம் 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படுகிறது. அத்துடன், இந்த ஆண்டு தரவரிசை 15.5 மில்லியனுக்கும் அதிகமான ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் மற்றும் 121 மில்லியனுக்கும் அதிகமான பகுப்பாய்வுகளை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாத்தளை பகுதியில் நேற்று (.23) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனை குறிப்பிட்டுள்ளார்
இன்று திங்கட்கிழமை (24) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் போா் விமானம் குடியிருப்புக் கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில், இரு விமானிகள் உயிரிழந்தனா். இா்குட்ஸ்க் மாகாணத்தின் சைபீரியா நகரத்தில் ரஷ்யாவில் எஸ்யு-30 போா் விமானம் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது திடீரென இரு மாடி குடியிருப்புக் கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனா். குடியிருப்பில் உள்ளவா்களுக்கு காயம் ஏற்படவில்லை என மாகாண ஆளுநா் இகோா் கோப்சேவ் தெரிவித்தாா். கடந்த சில தினங்களுக்கு முன்னா் மற்றொரு ரஷிய போா் விமானம், அசோவ் துறைமுகம் அருகே குடியிருப்பு ஒன்றின் பக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது விபத்து நிகழ்ந்துள்ளது.