(எஸ்.எம்.எம்.றம்ஸான்) அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரனையில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் A.R.M. அமீர் அவர்களின் வழிகாட்டலில் 20 கழகங்கள் பங்கு கொள்ளும் “சிராஸ் மீராசாஹிப் வெற்றிக் கிண்ணம் ” மாபெரும் கடற்கரை உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி 22.10.2022 சனிக்கிழமை மருதமுனைக் கடற்கரையில் வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், மெற்றொ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார் கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மளேனத்தின் தலைவர் Y.K.றஹ்மான் ,செயலாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப் அவர்களும் ,பொருளாளர் முகம்மட் கான் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 06.11.2022 ஞாயிற்றுக் கிழமை இடம் பெரும்.
Author: admin
ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய தனக்கு தற்போது உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறிய இந்த விடயத்தை முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, இரத்தினபுரியில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்சவின் சுகவீனம் குணமடைந்துள்ள போதிலும் அவர் எடுத்த முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்காத காரணத்தினால், நாட்டு மக்களுக்கு தற்போது நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இதய நோய்கான அஸ்பிரின் மருந்தை, வெளி மருந்தகங்களில் இருந்து பெற வேண்டிய நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் பல அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. பென்டேஜ், பஞ்சு உள்ளிட்ட பல மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கடுமையான மயக்க மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக, தனியார் மருந்தகங்களில் இருந்து மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாளைய தினம்(25) நிகழவுள்ள சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் மிகத்தௌிவாக காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார். நாளை(25) மாலை 5.27 மணியளவில் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும். இதனை சுமார் 22 செக்கன்கள் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு ‘சிட்ரங்’ என பெயரிடப்பட்டுள்ளது. நாளை(25) காலை இந்த சூறாவளி பங்களாதேஷ் கடற்பிராந்தியம் நோக்கி நகரக்கூடும் எனவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எவ்வாறாயினும் இந்த சூறாவளியினால் இலங்கைக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(24) 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவினை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி, குறித்த முச்சக்கரவண்டிகள் முதலாம் திகதி தொடக்கம் பதிவு செய்யப்படவுள்ளதோடு, நவம்பர் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட செயற்பாடுகள் மேல்மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, பின்னர் ஏனைய மாகாணங்களிலும் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இனி எதனையும் செய்ய முடியாது என்பது 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். பசில் ராஜபக்சவின் கருத்துக்கு எதிராகச் சென்று எம்.பி.க்கள் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் பசிலுக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, நாட்டில் இன்று மக்கள் வாழ முடியாத மிக மோசமான நிலைமை உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்காக அனைத்தையும் அடகு வைத்துவிட்டு இனி அடகுவைக்க ஒன்றும் இல்லாமல் மக்கள் தவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார். பாடசாலை மாணவர்களில் சுமார் முப்பது வீதமானவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவுஸ்ரேலியாவில் நடைபெறும் ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இணைவதற்காக, மூன்று வீரர்களை அனுப்பவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் அசித்த பெர்னாண்டோ மற்றும் மதீஷா பத்திரன ஆகியோரை உயர் செயல்திறன் தலைவரான டிம் மெக்காஸ்கிலுடன் அவுஸ்ரேலியாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு செல்லும் அவர், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில், பிரதான அணி வீரர்கள் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இதில், டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், பிரமோத் மதுஷான் மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் சிறு காயங்களுடன் தற்போது அணியில் உள்ளனர். மூன்று வீரர்கள் வரவழைக்கப்பட்டது குறித்து இலங்கையின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜெயவர்தன கூறுகையில், ‘மேலும் வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்று வீரர்கள் தேவைப்படுவார்கள், ஆகையால், மாற்று…
ஹட்டன் ரயில் நிலையத்தை அண்மித்த ரயில் பாதையில் இன்று (24) பாரிய குப்பை மேடு சரிந்து விழுந்ததாக ஹட்டன் ரயில் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகாமையிலேயே இந்த குப்பைகள் அடங்கிய மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக நானுஓயிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த சரக்கு ரயில் மண் மேட்டில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. ரயில் பாதையில் இடிந்து விழுந்த குப்பை மேட்டை ரயில் பராமரிப்பு பணியாளர்கள் அகற்றியதன் பின்னர், காலை 08.30 மணியளவில் மலையக ரயில் சேவை மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடதக்கது.
லிட்ரோ கேஸ் நிறுவனம் மேலும் ரூ.7.5 பில்லியனை திறைசேரிக்கு திருப்பிச் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக நவம்பர் முதல் வாரத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.