புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. நிலவும் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றின் அதிகரிப்பு என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது, புதிய நீர் இணைப்பை பெற்றுக் கொடுப்பதற்கான 17042.50 ரூபா கட்டணம் 24500ரூபா ஆகவும் சமுத்திக்கான நீர் இணைப்புகளை பெற்றுள்ளதாக 5300ருபாவாக காணப்பட கட்டணம் 6300ருபாய் கட்டணம் அதிகாரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், புதிய அதிகரிப்பு தொடர்பிலான சுற்றுநிரூபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Author: admin
உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. 303.1 கரட் எடை கொண்ட மஞ்சள் நிற கோல்டன் கேனரி வைரம், வெட்டப்பட்ட வைரங்களில் உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1980 களில் கண்டுபிடிக்கப்பட்ட இதன் மதிப்பு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர் எனவும், டிசம்பர் 7ஆம் திகதி நியூயார்க்கில் ஏலம் விடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நிதிச் சந்தைகளை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் கடந்த மாதம் அரசாங்கம் அறிவித்த கிட்டத்தட்ட அனைத்து வரிக் குறைப்புகளையும் நீக்குவதாக திறைசேரியின் புதிய தலைவர் ஜெரமி ஹன்ட் அறிவித்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் திகதி லிஸ் ட்ரஸ் அறிமுகப்படுத்திய சர்ச்சைக்குரிய ‘மினி பட்ஜெட்’டில், நிறுவனங்களுக்கான வரி உயர்வு, அதிக வருவாய் உடையவர்களுக்கு 45 சதவீத உயர் வரி போன்றவற்றை இரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின் எதிரொலியாக பிரித்தானிய பொருளாதாரம் நிலைகுலைந்து, டொலருக்கு நிகரான பிரித்தானிய பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது. அதையடுத்து, அதுவரை திறைசேரியின் தலைராக இருந்த க்வாசி க்வார்டெங்கை வெள்ளிக்கிழமை நீக்கிய ட்ரஸ், அந்தப் பொறுப்புக்கு ஜெரிமி ஹன்டை நியமித்தார். இந்த நிலையில் அவர் தனது முதல் நடவடிக்கையாக வரிக் குறைப்புகளை நீக்குவதாக அறிவித்தார். மினி- பட்ஜெட்களால் ஏற்பட்ட நிதிக் கொந்தளிப்பை தொடர்ந்து, பிரதமர் லிஸ் ட்ரசுக்கு சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5…
சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன தொழில் துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், அந்துப் பூச்சிகள், தேனிக்கள் போன்ற இனங்களை சிங்கப்பூரில் வசிக்கும் மனிதர்கள் உணவாக உட்கொள்ள முடியும். இந்த பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. பூச்சிகளை உனவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து இது தொடர்பான நடைமுறைகளை சிங்கப்பூர் உணவுத்துறை பெற்றுள்ளது. முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உணவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக மனிதர்கள் உணவாக உட்கொள்வதற்காகவும், கால்நடை தீவனத்துக்காகவும் வணிகரீதியான பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐ.நா.வின்…
கனியவள சேவை 6 மாதங்களுக்கு அத்தியாவசிய சேகையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எனவே, உத்தியோகத்தர்கள், தொழிற்சங்கங்கள் அதனை மீறி செயற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
தேசிய ஒன்றிய ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற் தொழிற்சங்கத்தில் (RMT) உள்ள ரயில் ஊழியர்கள் இன்னும் ஆறு மாதங்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடரலாமா என்று வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவு நவம்பர் 15ஆம் திகதி முடிவடைகிறது மற்றும் ஊதியம், வேலைப் பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பான சர்ச்சையின் ஒரு பகுதியாகும். ஜூன் முதல் எட்டு நாடு தழுவிய வேலைநிறுத்த நாட்களில் 15 ரயில் நிறுவனங்கள் மற்றும் நெட்வொர்க் ரெயிலில் உள்ள ஆர்.எம்.டி. உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். நெட்வொர்க் ரயில் தொழிற்சங்கங்களுக்கு ஒரு திருத்தப்பட்ட சலுகையை வழங்க தயாராகி வருகிறது. இதற்கிடையில், தொழிற்சங்க காங்கிரஸில் பின்னர், தொழிற்சங்கத் தலைவர்கள், பணவீக்கத்துடன் ஊதியம் பெறாததால் தங்கள் உறுப்பினர்களால் ஏற்பட்ட கோபம், இந்த குளிர்காலத்தில் நூறாயிரக்கணக்கான மக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வழிவகுக்கும் என்று எச்சரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய மாதங்களில், இரயில் தொழிலாளர்கள், கப்பல்துறை தொழிலாளர்கள் மற்றும் பி.டி மற்றும் றோயல் மெயில் ஊழியர்கள்…
கொலன்னாவ, சபுகஸ்கந்த மற்றும் முத்தராஜவெல ஆகிய இடங்களில் உள்ள CPC எரிபொருள் விநியோக நிலையங்களின் ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சீனக் கப்பலொன்று நாளை (புதன்கிழமை) அல்லது நாளை மறுதினம் இலங்கை கடலுக்கு வரவுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடிபாடுகளை மீட்பதற்காக இந்தக் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இடிபாடுகள் அகற்றப்படும் வரை இந்தக் கப்பல் இலங்கைப் பெருங்கடலில் பல மாதங்கள் இருக்கும் என்றும் அதன் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார். இதேவேளை, கப்பலில் தீப்பற்றியதையடுத்து சிதறிய 1700 மெற்றிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு நீர்கொழும்பு, பமுனுகமவிற்கு அருகில் உள்ள கழிவு சேமிப்பு முற்றத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆய்வகங்களில் கழிவுகள் பிரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அதனை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.
வாகன உதிரிபாக விற்பனை நிலையம் ஒன்றின் கதவுகளை உடைத்து உட்புகுந்த வன்முறை கும்பல் அங்கிருந்த பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி விட்டு , தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட ஆறுகால்மடம் லோட்டஸ் வீதியில் உள்ள குறித்த விற்பனை நிலையத்தினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உட்புகுந்த வன்முறை கும்பலே விற்பனை நிலையத்தினுள் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்து தீ வைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் விற்பனை நிலைய உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடுவெல-நவகமுவ-அக்பார்வத்தை-கொரதோட்டை பகுதியில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (17) இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலை காரணமாக பாரிய கற்குழியொன்றில் நிரம்பியிருந்த மழை நீரில் நீராடிய போதே சிறுவர்கள் இருவரும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சிறுவர்களின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.