Author: admin

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (22) அமுல்ப்படுத்தப்படவிருந்த 14 மணி நேர நீர்விநியோகத் தடை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. முன்னதாக, அத்தியாவசிய திருத்தப் பணிகள் நிமித்தம் இன்றிரவு 10 மணி முதல், நாளை (23) மதியம் 12 மணிவரை கொழும்பின் பல பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொழும்பு 02 தொடக்கம் கொழும்பு 10 வரை சுமார் 14 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்படவிருந்த நீர்விநியோகத் தடை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Read More

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள, நீர்­கொ­ழும்பு – கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான புலஸ்­தினி மகேந்ரன் எனும் சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் வெளிப்­ப­டுத்த 3 ஆவது தட­வை­யா­கவும் மீண்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட நிலையில், அது குறித்த பகுப்­பாய்­வுகள் நிறை­வ­டைந்­துள்­ளன. இந் நிலையில் குறித்த மூன்­றா­வது டி.என்.ஏ. பகுப்­பாய்வு அறிக்கை விசா­ர­ணை­யா­ளர்­க­ளான சி.ஐ.டி.யின­ருக்கும், கல்­முனை நீதி­மன்­றுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது -வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் குண்­டினை வெடிக்கச் செய்து தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக நம்­ப­ப்படும், சஹ்­ரானின் சகோ­தரர் ரில்வான் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­டைய உடற் பாகங்கள், அம்­பாறை பொது மயா­னத்தில் புதைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அவை கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மீள தோண்டி எடுக்­கப்­பட்­டன. கல்­முனை நீதி­வா­னிடம்…

Read More

இவ்வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘அடுத்த மாதத்தின் முதல் வாரத்துக்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலாக உள்ளது. எனவே இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு சாதகமான பதிலை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே இவ்வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனும், உலக வங்கியின் பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம், உலக…

Read More

பொகவந்தலாவை – டின்சின் தோட்ட பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மது போதையில் சென்ற மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதோடு குறித்தப் பெண்ணை தாக்கியுள்ளனர். இதையடுத்து குறித்த மூவரும் தலைமறைவாகியிருந்த நிலையில், அவர்கள் பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது பற்றித் தெரிய வருகையில், மது போதையில் சென்ற மூவர் மேற்படி பெண்ணை துஷ்பிரயோகப்படுத்தி விட்டு தாக்கிய பின்னர் தலை மறைவாகினர். இந்நிலையில் குறித்த பெண் காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர பொலிஸ் தொலைபேசி சேவைக்கு தகவல் வழங்கி அம்புயுலன்ஸ் வண்டியின் ஊடாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியின் அறிக்கை தெரிவிக்கப்பட்டதையடுத்து பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் டின்சின் தோட்டத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்ததுடன், சந்தேக நபர்களை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கும் இரண்டாம் தவணை விடுமுறை, 4ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் 5ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் அதன்பின்னர், டிசம்பர் 23ஆம் திகதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை நத்தார் பண்டிகைக்காக பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்காக, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நிறைவடையும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 16ஆம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதிவரை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டத்தை மார்ச்…

Read More

இந்தோனேஷியா மற்றும் கம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான சிறார்களின் உயிர்களை காவுக் கொண்ட பாணி மற்றும் திரவ மருந்துகள் நாட்டில் பயன்பாட்டில் இல்லை என தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒளடதங்களை பதிவு செய்யும் போது மருந்து கட்டுப்பாடு அதிகார சபையினால் அமுல்படுத்தப்படும் கடும் சட்டங்களுக்கு மத்தியில் தரங்கூடிய மருந்துகள் மாத்திரமே நாட்டிற்கு இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கப்பெறும் என அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இருமலுக்காக பயன்படுத்தப்பட்ட பாணி மருந்து காரணமாக கம்பியாவில் 70 சிறார்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, பாணி மற்றும் திரவ மருந்துகளை அருந்திய இந்தோனேஷியாவைச் சேர்ந்த 100க்கும் அதிகமான சிறார்கள் உயிரிழந்தனர். சில திரவ மருந்துகளில் சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற இராசயனப் பொருள் அடங்குகின்றமை இந்தோனேஷிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த ஒளடதங்களை பெற்றுக் கொண்ட 200 சிறார்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக…

Read More

பல மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் 25ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன், 24ஆம் திகதி சம்பளம் வங்கியில் வைப்பிலிடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு 24ஆம் திகதி தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை என்பதாலும், வார இறுதி நாள் என்பதாலும் இன்றைக்குள் சம்பளம் வைப்பிலிடப்பட வேண்டும். ஆனால் நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு திறைசேரியில் இருந்து பணம் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமையை கருத்திற்கொண்டு, நிதியமைச்சின் ஒதுக்கீட்டைப் பெற்று, ஒக்டோபர் மாத சம்பளப் பத்திரங்களை எதிர்வரும் 25ஆம் திகதி அதாவது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வங்கியில் வழங்க மாகாண செயலகங்கள் தீர்மானித்துள்ளன.

Read More

பூமியிலிருந்து நிலவு மெதுவாக நகர்ந்து செல்கிறது என்பதை விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நிலவு மெதுவாக பூமியை விட்டு நகர்கிறது. இது சில விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 21 ஜூலை 1969 அன்று, அப்பல்லோ 11 விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் நிலவுக்கு சென்றடைந்தனர்.1969ஆம் ஆண்டில், நாசாவின் அப்பல்லோ பயணத்தின் போது நிலவில் பிரதிபலிப்பு பெனல்கள் நிறுவப்பட்டன. அப்பல்லோ பயணத்தின் போது நிறுவப்பட்ட ஒரு சிறிய சாதனம், பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள துல்லியமான தூரத்தை கணக்கிட உதவுகிறது.இவற்றில் ஐந்து சாதனங்கள் அப்பல்லோ 11, 14 மற்றும் 15 பயணங்களின் போது நிறுவப்பட்டுள்ளன. பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தை, பூமியில் இருந்து அனுப்பப்படும் லேசர் மூலம் துல்லியமாக கணக்கிட முடியும். அதன்படி, நிலவு ஆண்டுக்கு 3.8 சென்டிமீட்டர் (இன்னும் துல்லியமாக 3.78 சென்டிமீட்டர்) பூமியை விட்டு நகர்கிறது என்பதை விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு பல பில்லியன்…

Read More

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதையடுத்து அப்பதவிக்கு மீண்டும் போட்டியிட உள்ளதாக போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமரான அவர் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகப் முறைப்பாடு வந்ததையடுத்து பதவி விலகி அவருடைய பொறுப்புக்கு லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மூன்று மாதங்களில் இங்கிலாந்து தனது இரண்டு பிரதமர்களை மாற்றி மூன்றாவது பிரதமர் யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும் பிரதமர் பதவிக்கான முன்வரிசைப் போட்டியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More