முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, துரதிஷ்டவசமாக அதிலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். நிகபொத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது முச்சக்கர வண்டியில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரகல-வெல்லவாய பிரதான வீதியின் பிபிலஹேன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்திற்கு முன்னதாக நெஞ்சு வலிப்பதாக கணவர் திடீரென கூறியதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார். அப்போது முச்சக்கரவண்டியில் இருந்து திடீரென தவறி விழுந்து அவர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவரின் மனைவி குறிப்பிட்டார். பின்னர், சாரதியின்றி முன்னோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி மரத்திலும், மின்கம்பத்தில் மோதி நின்றதாக குறிப்பிட்டார். முச்சக்கரவண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாரதி பின்னர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Author: admin
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். உரும்பிராய் பகுதியை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் (வயது 17) எனும் சிறுவனே படுகாயமடைந்துள்ளான். குறித்த சிறுவன் பாடசாலை கல்வியை இடை நிறுத்தி , இணுவில் பகுதியில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறான். அந்நிலையில் சிறுவன் விற்பனை அகத்தில் இருந்து நேற்றைய தினம் (திங்கட்கிழமை) தனது துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கி செல்லும் போது, தெல்லிப்பளை பகுதியில் இருந்து மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று சிறுவனை வழி மறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். காயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரிஷி சுனக்கிற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கன்சர்வேடிவ் கட்சித் தலைமை மற்றும் பிரித்தானியாவின் பிரதமருக்கான தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ரிஷி சுனக்கிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சுனக்கின் வெற்றி தெற்காசியாவில் உள்ளவர்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். ஏனெனில் இது பிரித்தானியாவில் ஜனநாயக நிறுவனங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத்துவதில் பெருமையடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
துபாய்க்கு வேலைக்காகச் சென்ற 80 இலங்கைப் பெண்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக அந்நாட்டுத் தூதரகம் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பணியகத்துக்குத் தெரிவித்துள்ளது. இவர்கள் பல்வேறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக டுபாய்க்கு வேலைக்காகச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐம்பது பெண்கள் துபாயில் உள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தில் சிக்கித் தவிக்கின்றனர், மீதமுள்ளவர்கள் ஒரு வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று துபாயில் உள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் நலிந்த விஜேரத்ன தெரிவித்தார். துபாய்க்கு பணி நிமித்தம் சென்றவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், இவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு துபாயில் உள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்படும் இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராட்ச்சி, பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார். எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான பெரும்பாலான இளைஞர், யுவதிகள் தற்போது சிகிச்சைகளுக்காக வருகைத் தருவதாகவும் அவர் கூறுகின்றார். இலங்கையில் முடக்க நிலையில் காணப்பட்ட சந்தர்ப்பத்தில், கல்வி நடவடிக்கைகள் இணைய வழியாக நடத்தப்பட்ட நிலையில், மாணவர்களில் ஒரு பிரிவினர், இணையத்தின் ஊடாக பாலியல் சார்ந்த காணொளிகளை பார்வையிட்டமையும் இதற்கான காரணமாக அமைந்திருக்கலாம் என அவர் குறிப்பிடுகின்றார். ”எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இளைஞர்கள் தற்போது பெரும்பாலும் மருத்துவ சிகிச்சைகளுக்காக வருகை தருகின்றனர். சட்டவிரோதமாக செயல்படும் ஸ்பாக்களுக்கு சென்றவர்களே அதிகளவில் வருகை தருகின்றார்கள். ஸ்பா நிலையங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளன. அதுவும் ஒரு காரணம் என கூற முடிகின்றது. அதேபோன்று, நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இணையவழி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதில் கல்வியை…
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது இலக்காகும் எனவும், அதற்கு பங்களிப்பதற்கான சந்தர்ப்பம் இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “2048 இல் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும் பயணத்தில் இளைஞர்களுக்கான மேடை ” எனும் தலைப்பில் இளைஞர்களுடன் Zoom ஊடாக கடந்த (22ஆம் திகதி) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன் போது இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த பதில்களும் கீழே தரப்படுகின்றன. கேள்வி: ஜனாதிபதி அவர்களே, இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல, நாட்டின் இளைஞர்களுக்கு நாம் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று நீங்கள் எப்போதும் கூறுகின்றீர்கள். 1977ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் இளம் தலைவராக…
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் நேற்றைய தினம் (24) இரவு மீட்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது 24) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முச்சக்கரவண்டிகளுக்கு முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை 20 ரூபாயால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. QR முறையின் கீழ் தொழில்முறை முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம் இந்த விலை குறைப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை முச்சக்கரவண்டி சங்கங்களுடன் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க இந்த விடயம் தொடர்பாக தெரிவித்திருந்தார். அதன்படி, இதுவரை முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றர் பெற்றோல் மாத்திரமே வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை இரட்டிப்பாக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இது முதல் கட்டமாக மேல் மாகாணத்தில் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறதென்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் இதன்போது, பேருந்துகள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்…
நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார். இன்று வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் எந்தப் பாகத்திலாவது தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அவசியமில்லை என கருதும் பட்சத்தில் வழமைபோன்று இன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தொடர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சூரிய கிரகணம் இன்று (25) நிகழவுள்ளதுடன், இலங்கையர்கள் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் மிகத்தெளிவாக காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். இன்று (25) மாலை 5.27 மணியளவில் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும். இதனை சுமார் 22 செக்கன்கள் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.