Author: admin

நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்திற்குப் பிறகு புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் 1ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவன்வெல்லவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதற்கு பொறுப்பான அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதன்படி மாத வருமானம் ரூ. 100,000 அல்லது அதற்கு மேல் வருமான வரி செலுத்த வேண்டியிருப்பதோடு உயர்ந்த தனிநபர் வருமான வரி விகிதம் 36% உயர்துள்ளது.

Read More

நர்மதா சவாண் இன்று ஒரு வெற்றிகரமான விவசாயி. ஒரு குற்றவாளியாக பார்க்கப்பட்டு வந்த தனது கணவரின் அடையாளத்தை இவர் வெற்றிகரமாக அழித்திருக்கிறார். பண்ணை விவசாயம் இன்று இவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் மதிப்பை கொடுத்திருக்கிறது. குற்ற நடவடிக்கைகளில் இருந்து மாறி மிகச்சிறப்பான வழியில் பயணிப்பதை பாராட்டி ஔரங்கபாத் காவல்துறை நர்மதா குடும்பத்தை ஊருக்கே நேரில் வந்து பாராட்டியது. 1,200 சாத்துக்குடி மரங்கள், ஒரு டிராக்டர், மாட்டு வண்டி, 3 கிணறுகள் உட்பட விவசாய சாதனங்களுடன் தங்கள் சொந்த வீடு கட்டும் கனவை நோக்கி உழைத்து வருகிறது இந்தக் குடும்பம்.

Read More

ஏர் பிரான்ஸ் மற்றும் KLM Royal Dutch Airlines ஆகியவை அடுத்த மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் பதிவில், எயார் பிரான்ஸ் மற்றும் KLM ஆகியன நவம்பர் 4ஆம் திகதி முதல் இலங்கைக்கு சேவைகளை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விமான நிறுவனங்கள் வாரத்திற்கு 4 விமானங்களை இலங்கைக்கு இயக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Read More

இம்முறை பெரும்போகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு 1000 கோடி ரூபா நிதியை பெற்றுக்கொடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கமைய, பெரும்போகத்திற்காக MOP வகையான உரத்தை இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த வகை பசளையின் விலை உலக சந்தையில் அதிகரித்துக் காணப்படுவதால் , விவசாயிகளுக்கு அதற்கான நிவாரணங்களை வழங்கவும் தீர்மானிக்கபட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

Read More

லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் புதிய இலட்சினை இன்று வௌியிடப்பட்டது. உத்தியோகபூர்வ இலட்சினையை வடிவமைப்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் போட்டி ஒன்றை நடாத்தியிருந்தது. இதில், துணிச்சலைக் குறிக்கும் வகையில் ´சிங்கம்´ சின்னத்தைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட இலச்சினை, எல்பிஎல்லின் அதிகாரப்பூர்வ இலச்சினையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கண்டியில் வசிக்கும் 24 வயதுடைய மியுலிக வீரமந்திரி என்ற இளைஞரால் குறித்த இலட்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற LPL இலட்சினையை வடிவமைத்தவருக்கு 1000 அமெரிக்க டொலர்களை இலங்கை கிரிக்கெட் வழங்கியுள்ளது.

Read More

அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீக்கப்பட உள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை அறிவித்துள்ளார். குறித்த துறைகளின் பணியாளர்களினால் தொடர்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்தத் தடை நீக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் வான் ஒன்று தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பயணித்துக் கொண்டிருந்த வான் திடீரென தீப்பற்றிதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது சாரதி மட்டும் பயணித்ததோடு மின் ஒழுக்கு காரணமாக இவ் அனர்த்தம் இடம்பெற்று இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் கையடக்க தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 9 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரையே நேற்றைய தினம் (21) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம், பலாலி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகள் திருடப்பட்டு வந்த நிலையில், அவை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. குறித்த, முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். தொலைபேசிகளை தவறவிட்டவர்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை வழங்கியவர்கள், அலைபேசியை அடையாளம் காட்டுமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கோரியுள்ளனர்.

Read More

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு சூறாவளியாக வலுவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

இத்தாலியின் புதிய ஆளும் கூட்டணியை உருவாக்கி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டிற்கு முதல் தீவிர வலதுசாரி தலைமையிலான அரசாங்கத்தை அளித்து, நாட்டின் பிரதமராக பணியாற்றும் முதல் பெண்மணி என்ற பெருமையை ஜோர்ஜியா மெலோனி பெற்றுள்ளார். மெலோனியும் அவரது அமைச்சரவையும் இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா முன்னிலையில் பதவியேற்பார்கள் என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரி வெள்ளிக்கிழமை அறிவித்தார். மெலோனியின் பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி, நவ-பாசிச வேர்களைக் கொண்ட கட்சி, கடந்த மாதம் இத்தாலியின் தேசியத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாகும். ஆனால் அரசாங்கத்தை அமைப்பதற்கு வெளி ஆதரவு தேவை. அவரது கூட்டாளிகளான போர்சா இத்தாலி மற்றும் தீவிர வலதுசாரி லீக் ஆகியவற்றுக்கு முறையே எட்டு மற்றும் ஒன்பது சதவீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில், அவரது பிரதர்ஸ் இத்தாலி கட்சி கடந்த மாதம் 26 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்தநிலையில், ஆதரவு திரட்டி வெற்றி கண்ட ரோம் நகரைச் சேர்ந்த 45…

Read More