Author: admin

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலின் படி மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 15ஆம் திகதி முதல், மின் கட்டணத்துக்காக, சமூக பாதுகாப்பு வரியாக, 2.56 ரூபா வசூலிக்கப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியானது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் இருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 2022 ஒக்டோபர் முதல் 2023 பெப்ரவரி வரையான காலத்தில் தொடர்ச்சியான உதவி இல்லாமல் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று உலக உணவுத்திட்டம் எச்சரித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, உணவுப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில் மூன்று மாத காலத்திற்கு ஒரு மில்லியன் குழந்தைகளுக்கு பாடசாலை உணவை வழங்குவதற்காக, உலக உணவுத்திட்டம் ஆயிரத்து 475 மெற்றிக் தொன் அரிசி மற்றும் 775 மெற்றிக் தொன் இரும்புச் சத்துள்ள அரிசியை வழங்கியுள்ளது. அவற்றின் விநியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அது அரசாங்கத்தின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு நேரடியாக கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதியில் துவரங்காடு சந்தியில் ஏற்பட்ட வாகண விபத்தில் இருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீமெந்து ஏற்றி வந்த பாரிய கொள்கலன் ஒன்று வீதியில் நின்றுகொண்டிருந்த மாடுகளுடன் மோதாத வாறு திருப்பி எடுக்க முயற்சி எடுத்த வேளை வீதியை விட்டு விலகி அங்கிருந்த அதி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோதியதன் காரணமாக இவ்விபத்து சம்பவித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தின் காரணமாக மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் சேதமடைந்ததால் திருகோணமலையின் பரவலான பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்ட வழிகளில் பணம் அனுப்புவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, இரு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 25,000 அமெரிக்க டொலர்களுக்கும், நான்கு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 65,000 அமெரிக்க டொலர்களுக்கும் உட்பட்டு இறக்குமதி செய்வதற்கான வசதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 30.04.2023 வரை அல்லது வாகன இறக்குமதிக்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் திகதி வரை அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணி மதிப்பில் 50% CIF மதிப்புள்ள இரு சக்கர மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. 04.05.2022 முதல் 31.12.2023 வரை, இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நியச் செலாவணியின் மதிப்பில் 50% வரையிலான CIF மதிப்பைக் கொண்ட நான்கு சக்கர மின்சார வாகன இறக்குமதியும் அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தொழிலாளர் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

வெல்லம்பிட்டிய-கொட்டுவில பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த கூரிய ஆயுதக் களஞ்சியசாலையொன்றை நடத்திச் சென்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். கொழும்பில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையக முகாமில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து வாள்கள், கத்திகள் மற்றும் மன்னா கத்திகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச் செயல்களுக்காக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சந்தேகநபர்கள் 20 மற்றும் 27 வயதுக்கு இடைப்பட்ட தம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவிலும் நடத்த திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் கார் வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வெடிப்புச் சம்பவங்கள் பயங்கரவாதச் செயல்களா என்பது தொடர்பிலான மேலதிக விசாரணைகளின் போது இந்தத் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூரில் உள்ள மத வழிபாட்டுத் தலத்திற்கு அருகே காரில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு சந்தேகத்திற்குரிய சம்பவம் என்பதை அவதானித்த தமிழக பொலிஸார், குறித்த வெடிப்பு பயங்கரவாதச் செயலா என கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன்போதே, 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நிகரான தாக்குதலை நடத்த சந்தேகநபர் திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, கோனியம்மன் கோவிலில் இருந்து…

Read More

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். சுதந்திரத்தின் பின்னர் பொருளாதார வளர்ச்சி வேகம் மறை பெருமானத்தில் வீழ்ச்சியடைந்துள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இவ்வாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் மறை 7 – 8 சதவீதம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திரத்தின் பின்னர் பொருளாதாரம் இவ்வாறு மறை பெருமானத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் தற்போது ரூபாவும் இல்லை. டொலரும் இல்லை. சுமார் 60 ஆண்டுகளாக உருவாகியுள்ள இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு தகுதிவாய்ந்த எவரும் எமது நாட்டில் அடையாளங் காணப்படவில்லை. தற்போது லசார்ட் நிறுவனத்திடமே எமது எதிர்கால நற்பெயர் தங்கியுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காணாமல் எந்தவொரு வேலைத்திட்டத்திற்காகவும் எம்மால் கடன் பெற…

Read More

இலங்கையில் நிலவும் மருந்து பொருட்கள், ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் சுகாதாரச் சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது. மேற்குறிப்பிட்ட காரணங்களால் அவசர மற்றும் பொது சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் ஒக்டோபர் மாதம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சங்கம், பல சத்திரசிகிச்சைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இரத்த மாற்று சேவைகள் சீர்குலைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், தோட்ட மக்கள் மத்தியில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளதாகவும், தரமான சுகாதார சேவையைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர் மாதத்துக்குள் தோட்டங்களில் உள்ள நான்கில் மூன்று குடும்பங்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. தொற்றா நோய்களான இதய நோய், நீரிழிவு, மனநோய் போன்றவற்றுக்கு சிகிச்சை பெறுவதில் கணக்கெடுப்பில் பங்கேற்ற மூன்றில் ஒரு குடும்பத்துக்கு…

Read More

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் (25) மாலை தலவாக்கலை நகரத்தை அண்மித்த பகுதியான ஒலிரூட் பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலையக பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பிரதான வீதிகளில் பாரிய மண்சரிவுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியிலும் இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் குறித்த வீதிக்கு பதிலாக வேறு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை, இந்த மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் கீழ் பகுதியில் உள்ள வீடொன்றின் மீதும் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. தலவாக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் பல வீதிகள் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதுடன், அந்த வீதிகளின் போக்குவரத்து ஒரு…

Read More

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read More