Author: admin

1990 ஆம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் குருக்கள் மடத்தில் வைத்து கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டு அங்கு புதைக்­கப்­பட்­டுள்ள 100க்கு மேற்­பட்ட முஸ்லிம்களின் உடல்­களை தோண்டி எடுத்து இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய அனு­ம­தி­ய­ளிக்க வேண்டும். அதற்­கான சிபா­ரி­சினை வலிந்து காணா­ம­லக்­கப்­பட்டோர் மற்றும் கடத்­தப்­பட்டோர் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு மேற்கொள்ள வேண்டும் என காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன் கோரிக்­கை முன் வைத்­துள்­ளது. வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டோர் மற்றும் கடத்­தப்­பட்டோர் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காத்­தான்­குடி ஹோட்டல் பீச்வே மண்­ட­பத்தில் சாட்­சி­யங்­களை பதிவு செய்­தது. இதன்­போது, காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனத் தலைவர் ரஊப் ஏ மஜீத் இந்த கோரிக்­கையை முன் வைத்தார். சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­பட்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த அவர், 1990 ஆம் ஆண்டு செப்­டம்பர் 17 ஆம் திகதி குருக்கள் மடத்தில் வைத்து கடத்­தப்­பட்டு…

Read More

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஞ்சன் ராமநாயக்க நேற்று (27) கட்டார் எயார்வேஸ் விமானத்தில் வெளிநாடு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுநாயக்காவில் இருந்து கத்தார் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதே அவரது திட்டமாக இருந்தது. எனினும், அவர் மீது நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் விமானங்கள் செல்ல நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதால், அவரை திருப்பி அனுப்ப குடிவரவுத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Read More

அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்த வகையில், அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களின் விற்பனை விலை முறையே 371.22 ரூபா மற்றும் 242.20 ரூபாவாகும் இருப்பினும், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Read More

மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாப்பாமோட்டை பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள சாவக்கட்டு மயானப் பகுதிக்கு நேற்றைய தினம் (27)கழிவு மண் ஏற்றி வந்த உழவு இயந்திர பெட்டிக்குக்குள் மண்ணுடன் வெடிக்காத நிலையில் கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் வேலை செய்த நபர் ஒருவரால் கண்ணிவெடி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இவ்விடயம் தொடர்பாக உடனடியாக மன்னார் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று விசேட அதிரடிப்படையின் தலைமையில் கண்ணிவெடி செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read More

யாழ்.மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளவர்கள் சமுதாயமட்ட சமுர்த்தி சங்கத்தில் உறுப்பினர் இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள நேரிடும் என சமுர்த்தி சமுதாய மற்றும் விளையாட்டு பிரிவுப் பணிப்பாளர் காமினி அபோய விக்ரம தெரிவித்திருக்கின்றார். இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி சமுதாயமட்ட மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், சமுர்த்தி திணைக்களத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைய ஒருவர் சமுர்த்தி பயனாளியாக தெரிவு செய்யப்படுவதற்கு சமுதாய மட்ட சமுர்த்தி சங்கத்தில் கட்டாயம் அங்கத்தவராக இருத்தல் வேண்டும். ஆனால் யாழ்.மாவட்டத்தில பலர் சமுதாயமட்ட சமுர்த்தி சங்கத்தில் அங்கத்துவர் இல்லாதவர்கள் சமுர்த்தி பயனாளிகளாக இருக்கின்ற நிலையில் உடனடியாக அவர்கள் தமது அங்கத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக பயனாளிகளை நீக்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ இன்று காலை (28) வெலிக்கடை சிறைச்சாலைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சிறைச்சாலையில் உள்ள வசதிகள் தொடர்பில் கண்காணிக்கும் விதமாக அங்கு சென்றிருந்தார். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்கள் உட்பட கைதிகளின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடியதுடன், சிறைச்சாலை சமையலறை மற்றும் தொழிற்சாலை வளாகத்தின் வேலைகளும் விசேட அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டன. மேலும், கைதிகள் எதிர்நோக்கும் நடைமுறை மற்றும் சட்டப் பிரச்சினைகள் குறித்தும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழுக்கள், குறிப்பாக நீண்டகாலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் எதிர்பார்த்த பலன்களைப் பெறவில்லை என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக புதிய மீளாய்வுக் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இதன்போது அமைச்சர் குறிப்பிட்டார். நீண்டகாலமாக சிறையில் உள்ள கைதிகள், நோயுற்ற கைதிகள்…

Read More

நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணம் செலுத்தாமையால் கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இவ்வாறு தெரிவித்தார். லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் இரண்டு தடவைகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 26ஆம் திகதி சிற்றுண்டிச்சாலை மற்றும் மருத்துவமனையின் பாதுகாப்புப் பிரிவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், கடந்த வாரமும் மருத்துவமனையிலும் இதேபோல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றினுள் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமிர்த்தம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சமயம் , வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டார் மாலை வீடு திரும்பிய போதே வீட்டினுள் திருடர்கள் புகுந்து நகைகளை திருடி சென்றமை தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்ப குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்துச் சேவை பற்றி அறிமுகம் செய்யப்பட்டது. கொழும்பு கோட்டை, கொம்பனி தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை, நகர மண்டபம் உட்பட கொழும்பு நகரின் பெரும்பாலான பிரதான நிலையங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வளவு தூரம் பேருந்தில் பயணித்தாலும் 200 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எனபது இத்திட்டத்தின் சிறப்பாகும். தொலைபேசி செயலி மூலம் கட்டணம் செலுத்தப்படும் என்பதால், இந்த பேருந்துகளில் நடத்துனர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை முழுவதும் இவ்வருடத்தில் மாத்திரம் 1406 வாகன கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதிவரை மொத்தம் 1406 வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், கடந்த ஆண்டு (2021) முழுவதும் 1405 வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியிருந்ததுடன், இவ்வருடம் செப்டெம்பர் வரையில் மாத்திரம் இச்சம்பவம் அதிகரித்துள்ளது. திருடப்பட்ட வாகனங்களில் 12 பஸ்கள், 25 வேன்கள், 16 லொறிகள், 14 கார்கள், 311 முச்சக்கரவண்டிகள், 116 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 12 வகையான வாகனங்கள் அடங்குகின்றன. திருடப்பட்ட வாகனங்களில், பல வாகனங்கள் பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த காரணத்தினாலேயே திருடப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென நிஹால் தல்துவ தெரிவித்தார். வாகனத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறும் பொலிஸார், வாகன சாரதிகளிளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More