Author: admin

நெல் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் மலையக மரக்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் அரசாங்கம் வழங்க வேண்டுமமென மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு மூட்டை யூரியா 10 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மலையகத்தில் மரக்கறி உற்பத்தி செய்யும் விவாசாயிகளுக்கு 29 ஆயிரம் ரூபாவுக்கே ஒரு மூட்டை யூரியா விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மரக்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். யூரியா வழங்குவதில் பாராபட்சம் காட்டாமல் மலையக மரக்கறி உற்பத்தியாளர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாவிற்கு ஒரு மூட்டை யூரியா வழங்க வேண்டும் என்றார். இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் நெல் உற்பத்தியாளர்களுக்கு வெள்ள நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் மலையகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மரக்கறி உற்பத்தியாளர்களுக்கு வெள்ள நிவாரணங்கள் வழங்கப்படுவதில்லை. இது ஒரு பாரபட்ச செயலாகுமென குறிப்பிட்டுள்ள அவர்,…

Read More

தாய் இறந்த சோகத்தில் மகன் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது – 32) என்பவரே உயிர் மாய்த்துள்ளார். இவர் மன்னார் மாவட்ட அரச திணைக்களம் ஒன்றின் அலுவலகர் ஆவார். இவரது தாயார் உயிரிழந்த நிலையில், தாயின் இழப்பினை தாங்க முடியாது விரக்தியுடன் காணப்பட்டவர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்து விட்டு உயிர் மாய்த்துள்ளார்.

Read More

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் 25ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை நடைபெற்றது. இம்முறை பரீட்சைக்கு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 486 மாணவர்கள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பாம்பலோனி தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை நேற்று (27) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள், கடன் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள பாதகத்தன்மைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துவரும் மக்களின் பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் உரிமை சார் விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனமடுவயில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நமது அமைப்பு நாட்டைப் பின்னுக்கு இழுக்கும் அமைப்பு அல்ல. தீ மூட்டுவது எளிது, ஆனால் அதை அணைப்பது கடினம். தேர்தலுக்கு கூட எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல கிராமங்களுக்குள் புகுந்து வரும் காட்டு யானைகள் மக்களின் வாழ்வாதார பயிர்களை அழித்துவருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் மல்லிகைத்தீவு, தேவிபுரம், கைவேலி, போன்ற கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் புகுந்துகொள்ளும் யானைகள், தென்னை மரங்கள், வாளை, பலாமரங்கள் என பயன்தரு மரங்களை அழித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது காலபோக நெற்செய்கை தொடங்கியுள்ள நிலையில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் படை எடுக்கின்றன. நீண்டகாலமாக யானைவேலி அமைத்து தருவதாக பலர் வாக்குறுதிகள் கொடுத்தும் இதுவரை யானை வேலி அமைத்துக்கொடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது. கல்மடு தொடக்கம் இடைக்கட்டு வரையிலான 30 கிலோமீற்றருக்கான யானை வேலி அமைக்கும் திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளபோதும் அது கைவிடப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டன. கிராமங்களுக்கான யானைவேலி இல்லாததினால் காட்டு யானையினால் ஆண்டுதோறும் வாழ்வாதார பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Read More

பாடசாலை மாணவனை விபத்துக்கு உள்ளாக்கிவிட்டு, தப்பியோடி தலைமறைவான நிலையில் இருந்த ஓட்டோ சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். கினிகத்ஹேன பொலிஸாரினால் ஓக்டோபர் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நபர், ஹட்டன் மாவட்ட நீதவான் பாருக் டீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்போதே, எதிர்வரும் 31ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரான 26 வயதான நபர், யட்டியந்தோட்டையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. கினிகத்ஹேனையில் பாடசாலை மாணவன், வீதியை கடக்க முயன்றபோதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதும் பாதிக்கப்பட்ட மாணவனை வைத்தியசாலையில் அனுமதிப்பதாகக் கூறி, அந்த மாணவனை அதே ஓட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்ற சாரதி, அவரிடம் 5,00 ரூபாவை கொடுத்துவிட்டு, மாணவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லாமல், இடைநடுவிலேயே இறக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். எனினும், மாணவனின் முறைப்பாட்டுக்கு அமைய சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாக வைத்து, ​கினிகத்ஹேன பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சாரதி கைது…

Read More

பெருந்தோட்டக் கம்பனிகளில் சில, நாளாந்தம் பறிக்கவேண்டிய கொழுந்தின் நிறையை கூட்டியதால், தொழிலாளர்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என ப்ரொடெக்ட் சங்கத்தின் உப-தலைவர் எம். மைத்திரி தெரிவித்துள்ளார். நாளாந்த சம்பளமாக 1,000 ரூபாவை வழங்குவதற்காக, நாளொன்றுக்கு 20 கிலோகிராம் நிறையைக்கொண்ட பச்சை தேயிலை கொழுந்தை பறிக்கவேண்டுமென சில நிறுவனங்கள் கட்டாயப்படுத்தியுள்ளன. இதனால் உரிய சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஹட்டனில் உள்ள அந்த சங்கத்தின் காரியாலயத்தில் ஒக்டோபர் 26ஆம் திகதியன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கான 1,000 ரூபாய் சம்பளத்தை பெறவேண்டுமாயின் அந்த நாளில் 20 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தை பறிக்கவேண்டும். எனினும், சில தோட்டங்களில் அது இயலாத காரியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில ​தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வானிலையால் கொழுந்துகள் முறையாக வளர்வதில்லை. முறையாக பசளையிடுவதும் இல்லை. ஆகையால், பாரிய அசௌகரியங்களுக்கு…

Read More

தெல்தோட்டை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நூல்கந்தூர கீழ் பிரிவைச் சேர்ந்த மக்களும் பாடசாலை மாணவர்களும், நகருக்கு செல்லும் போது ஆற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஆற்றில் நீர் குறைவாக காணப்படும் போது இலகுவாக, ஆற்றை கடந்து செல்லும் மக்கள், வெள்ளம் ஏற்பட்டால், நீரேந்தும் பிரதேசங்களில் கடும் மழை பெய்தால். ஆற்றை கடந்து செல்லவே முடியாது. நூல்கந்தூர கீழ் பிரிவு மக்கள், இந்த ஆற்றை கடந்து குறுக்கு வழியாகவே பயன்படுத்தி நகருக்கும், பாடசாலைக்கும் வைத்தியசாலைக்கும் செல்கின்றனர். மற்றைய வீதியில் பயணம் செய்தால் சுமார் 3 கிலோமீற்றர் தூரம் நடந்தே செல்ல வேண்டும். இந்த ஆற்றை கடந்தால் 1/2 கிலோமீற்றர் தூரத்துக்கு மட்டுமே பயணிக்க வேண்டும் என்றனர். தற்போது மழைக்காலம் என்பதால், அச்சத்துடனே​யே பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். குறுக்கு வழியால் பயணிக்கும் போது பாம்பு உள்ளிட்ட ஜந்துகளின் அச்சுறுத்தல்களுக்கும் தாங்கள் முகங்கொடுப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள்…

Read More