முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் வெளியுறவுச் செயலராக இருந்தபோது அவரது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ட்ரஸ் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு இடையேயான தனிப்பட்ட செய்திகள், உக்ரைன் போர் உட்பட, முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களும், தனிப்பட்ட உரையாடல்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும் ‘தி மெயில்’ செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. கோடைகால டோரி தலைமைப் பிரச்சாரத்தின் போது இந்த ஹேக் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் செய்தி மௌனம் காக்கப்பட்டது என்று செய்தித்தாள் கூறியது. இவ்வாறு அவருடைய கைப்பேசி ஊடுருவப்பட்ட சம்பவம் குறித்து அப்போதைய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் மற்றும் உயர் அதிகாரிகள் மூலம் ரகசியம் காக்கப்பட்ட நிலையில், லிஸ் ட்ரஸ் பிரித்தானிய பிரதமராகப் பதவியேற்ற பிறகு இத்தகவல் தெரியவந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ள நிலையில், சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தொழிலாளர் கட்சி, சுதந்திர ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. சைபர்…
Author: admin
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார். இந்தநிலையில் டுவிட்டர் நிர்வாகத்தில் எலான் மஸ்க் அடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார். அவர் ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளார். வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டிய பணியாளர்கள் பட்டியலை அளிக்க மேலதிகாரிகளுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. நாளை முதலாம் திகதிக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அளவுக்கு குறைத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டரில் தற்போது 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அந்த எண்ணிக்கை ஆள்குறைப்பு நடவடிக்கை மூலம் 2 ஆயிரமாக குறைக்கப்படும். இதற்கிடையே டுவிட்டருக்கு மாற்றாக புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த டுவிட்டரின் முன்னணி தலைமை நிர்வாக…
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். குஜராத்தின் மோர்பி பகுதியில் நேற்று (30) பிற்பகல் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாண் ஒன்றின் விலை இன்று (திங்கட்கிழமை) முதல் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையில் குறைக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமது நிர்வாக சபை கூடி இறுதி செய்யும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தையில் போதிய அளவில் கிடைப்பதால் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியாக மருந்து தட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும் உயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசியமான 384 மருந்து வகைகளில் சில மருந்துகளுக்கும் சத்திர சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் சில உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தற்போது சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும் அவற்றை எதிர்வரும் ஒன்றரை மாதங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அனைத்து பாடசாலைகளுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் தேசிய பாடசாலை கருத்திட்டத்திற்கு தான் கொள்கை அளவில் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு வலக கல்வி பணிமனையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. தேசிய பாடசாலைகளுக்கு பதிலாக பல பாடசாலைகளை இணைத்து பாடசாலை கொத்தணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறுகின்றார். இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதமாகும் போது, நாடு முழுவதும் 1200 பாடசாலை கொத்தணிகளை ஆரம்பிப்பதற்கான இயலுமை கிடைக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். பாடசாலை கொத்தணிக்குள் காணப்படுகின்ற பாடசாலைகளுக்கு இடையில் முகாமைத்துவ செயற்பாடுகளின் ஊடாக பௌதீக மற்றும் மனித வளங்களை பரிமாற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளின் மூலம், மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திறமை கிடைக்கும் என்பதுடன், செலவீனங்களை குறைப்பதற்கான பொறிமுறையாக இது அமையும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த செயற்பாட்டின் ஊடாக, பாடசாலைகள் அல்லது…
யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவான பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பாிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். குறித்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பிரான்ஸில் வசிக்கும் கல்விங்காட்டை சோ்ந்த 20 வயதான இளைஞன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னா் யாழ்ப்பாணம் வந்துள்ளாா். பின்னா் அச்சுவேலி பகுதியை சோ்ந்த 15 வயதான சிறுமியுடன் காதல் உருவான நிலையில் சிறுமியை திருமணம் முடித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளாா். இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் அச்சுவேலி பொலிஸாரால், காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு குறித்த முறைப்பாடு கொண்டு செல்லப்பட்டது. அதனடிப்படையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், சிறுமியையும் குறித்த இளைஞனையும் கைது செய்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞனை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு…
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுக்களில் உள்ள பல்வேறு நபர்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவிடம் இருந்தும் இதுவரை மறைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தம் வெளியிடப்பட்டால், அது பாரிய மீறல் என்றும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னர் ‘ரேடியோ சைலன்ஸ்’ என்ற முறைமை கடைப்பிடிக்கப்படுகிறது என மத்திய வங்கியின் ஆளுநர் கூறியிருந்தார். அத்தகைய திட்டங்களை இறுதி செய்வதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியிருந்தார்.
T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்றைய போட்டில் இலங்கை அணியை 65 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றி கொண்டது. இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில்102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது சிட்னியில் இன்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து- இலங்கை அணிகள் (குழு -1) விளையாடின. இந்த போட்டிக்கான நாணயசுழட்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக பின் அலன் மற்றும் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த அணியின் பின் அலென் 1 ஓட்டம், கான்வே 1 ஓட்டம், வில்லியம்சன் 8 ஓட்டங்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 15 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து கிளென் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் மிட்செல் 22 ஓட்டங்களுடனும்,…
கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 18 பாடசாலைகளின் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.