Author: admin

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாம ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்தனர். இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது. இதன்போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கலந்து கொண்ட நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒஎம்பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இரண்டு லட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

கடந்த காலத்தில் நாட்டில் காணப்படட சூழ்நிலையில், இருந்து நாட்டை ஒரளவு மட்டத்திற்கு கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முடிந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதிக்கு நாட்டுக்குள் அமைதியான நிலைமையை ஏற்படுத்த முடிந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற அந்த கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணி ஆகியவற்றுக்கான புதிய அதிகாரிகளை நியமிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி வேலைகளை செய்யும் போது, பொதுஜன பெரமுனவினரால் சில அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. அது பிரச்சினைக்குரியது எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

தியத்தலாவ தொண்டர் படை பயிற்சி முகாம் அலுவலகத்தில் கடமைக்காக பயன்படுத்தப்படும் கணனி மற்றும் அச்சு இயந்திரத்தை பயன்படுத்தி போலி நாணயத்தாள் அச்சிடப்பட்டுள்ளதாக தியத்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தியத்தலாவை மதுபான விற்பனை நிலையமொன்றில் போலி 5000 ரூபா நாணயத்தாளை கொடுத்து மது போத்தல் ஒன்றை கொள்வனவு செய்ய முற்பட்ட இராணுவ வீரர்கள் மூவர் கைது செய்யப்பட்டதையடுத்து நீண்ட விசாரணைகளின் பின்னர் இது தெரியவந்துள்ளது. இராணுவ முகாம் அலுவலகத்தின் கணனியில் இருந்து போலி நாணயத்தை அச்சடித்த இராணுவ லான்ஸ் கோப்ரல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் நவம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் போலி நாணயத்தாள் விசாரணை திணைக்களத்தின் உதவியை நாட தியத்தலாவ காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த லான்ஸ் கோப்ரல் கைது செய்யப்பட்டதையடுத்து, தியத்தலாவ காவல்துறையினர், போலிப் பணத்தைக் கடத்திய இராணுவத்தில் நான்கு பேரை கைது செய்துள்ளனர். நாணயத்தாளை அச்சடித்த லான்ஸ் கோப்ரல் விசாரணைக்கு…

Read More

இலங்கையில் தற்போது நிலவும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையால், இலங்கை வழியாகச் செல்லும் சர்வதேச விமானங்களுக்கான வான்வெளிச் சேவையை ஒரு சில வெளிநாட்டவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிவில் விமான திணைக்கள வட்டாரங்களின்படி, சுமார் 150 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது 80 பேர் மட்டுமே உள்ளனர். இந்நிலைமையின் அடிப்படையில் இலங்கையில் தரையிறங்கும் மற்றும் வெளியேறும் விமானங்களை மாத்திரம் கட்டுப்படுத்துவதுடன், இலங்கை ஊடாக செல்லும் சர்வதேச விமானங்கள் தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்தும் விலக வேண்டும். தற்போது நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 100 சர்வதேச விமான சேவைகள் இலங்கை ஊடாக பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானங்களுக்கு இலங்கை வான்பரப்பைப் பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சேவையில் விமானம் ஒன்றுக்கு 250 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்தால், நாடு நாளொன்றுக்கு சுமார் 25,000 அமெரிக்க டொலர்களை இழக்கும். புதிய சர்வதேச விமானப்…

Read More

யாழ்ப்பாணம் பொய்ன்ட் பெட்ரோ கடல் எல்லையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் சூறாவளி வீசியதாகவும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பொய்ன்ட் பெட்ரோ கடற்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும் சுழல் காற்று காரணமாக பாரிய நீர்மட்டம் வான்வெளியில் வீசியதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணக் கடல் எல்லையில் பல தடவைகள் இவ்வாறான சுழற்காற்றுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் எல்லையில் சூறாவளி ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொய்ன்ட் பெட்ரோ மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Read More

நாட்டில் சுமார் 7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் இன்றுடன் காலாவதியாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றும் மக்கள் தங்களுக்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரலாம் என தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது, 52 % மக்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மலையக மக்கள் இந்தியாவுடன் மிகவும் பலமான தொடர்புகளை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இந்தியாவுடன் நட்புறவு மற்றும் உறவுகளை பேணுவதற்கும் மலைய மக்கள் பங்களிப்பு வழங்குகின்றனர். இந்தியாவும் உங்களை மறக்காது. இந்தியா உங்களை எந்த நேரத்திலும் நினைவில் வைத்திருக்கும் என தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு ​தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், வீடுகளின் நிர்மாணம் ஊடாகவும் புலமைபரிசில்கள் மற்றும் கல்வி ஊடாகவும் இந்தியா தொடர்ந்தும் உங்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுகின்றது. நாங்கள் இங்கு வந்ததில் இருந்து இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றோம். இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தொடர்பில் இந்திய மக்கள் அறிவார்கள். நான் இன்று ஒன்றை கூற விரும்புகின்றேன். இந்திய மக்கள் இலங்கையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்குவார்கள். குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள். கடந்த…

Read More

ஹிக்கடுவ, திராணகம சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டுக்கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காகச் சென்ற இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

நாட்டிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் பொது மக்களின் நலனுக்காக செயற்படுவதில்லை என மிஹிந்தலை ரஜமஹா விஹாராதிபதி வளவஹங்குணவேவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். ஆகவே பொதுமக்கள் வரவிருக்கும் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க கூடாது என தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். நாட்டின் வீழ்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் காரணம் என்பதனால் இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இலங்கையை “ஏழை நாடு” என்று வர்த்தமானியில் அறிவித்துள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடாக அறியப்பட்ட போதிலும், 75ஆவது சுதந்திர தின விழாவை “ஏழை நாடாக” நினைவுகூரத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவே உள்ளூராட்சி , மாகாண சபை அல்லது பொதுத் தேர்தல்கள் எதுவாக இருந்தாலும், மக்கள் கட்சிகளின் பேரணிகளில் கலந்து கொள்ளவோ வாக்களிக்கவோ வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.…

Read More

பிலிப்பைன்ஸின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மேலும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், வெப்பமண்டல புயல் நல்கேயால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 98 ஆக உயர்ந்துள்ளது. அரைவாசிக்கும் அதிகமான இறப்புகள் தொடர்ச்சியான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்டவை. இது வார இறுதியில் தெற்கு தீவான மின்டானோவில் உள்ள கிராமங்களை அழித்ததாக நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தன்னாட்சி பெற்ற பாங்சமோரோ பகுதியில் 53 பேர் இறந்துள்ளனர், 22 பேர் இன்னும் காணவில்லை. ‘இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருப்பதால், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையிலிருந்து மீட்டெடுப்பு நடவடிக்கைக்கு நாங்கள் எங்கள் செயற்பாட்டை மாற்றியுள்ளோம்’ என்று பாங்சமோரோவின் சிவில் பாதுகாப்புத் தலைவர் நகுயிப் சினாரிம்போ கூறினார். நாடு முழுவதும், சுமார் 63 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 69 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலில் இருந்து தப்பியவர்கள், நல்கே தாக்கிய பின்னர், அனைத்து புனிதர்கள் தினத்திற்கான விடுமுறை…

Read More