Author: admin

உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர் குழுவின் முதல் கூட்டத்தில் கடன் சிகிச்சைக்கான கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை முறைப்படி முன்வைத்ததாக பரிஸ் கிளப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் இணைந்து தலைமை தாங்கும் குழுவில் 17 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் பரிஸ் கிளப் கடன் வழங்குபவர்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களும் இக் குழுவில் உள்ளனர்.

Read More

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியசாலை வீதி பகுதியில் இருவர் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது, தில்ஷான் ரங்க குமார என்ற 27 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவரை படுகாயப்படுத்தியjாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், குறித்த சத்பவத்துடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய லொறி, வேன் மற்றும் முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மெலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

களுத்துறை விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று (10) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சம்பவ தினத்தன்று மாணவியின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் குறித்து காவல்துறையினர் அவதானம் செலுத்தியுள்ளனர். எனினும், அவரது தொலைபேசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மாணவி உயிரிழந்ததையடுத்து பிரதான சந்தேகநபர், முன்னதாக விடுதியிலிருந்து சென்ற தமது நண்பரையும், நண்பரின் காதலியையும் மீண்டும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து, மாணவியின் தொலைபேசியை தொடருந்து மார்க்கத்துக்கு அருகிலுள்ள கால்வாய் நோக்கி வீசியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல விடயங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். குறித்த மாணவி, விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் கூறியதாக விசாரணை முன்னெடுக்கும் சிரேஷ்ட காவல்துறை…

Read More

இந்த வாரம் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வின் போது நாடளாவிய ரீதியில் 1,896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தோராயமான சதவீதமாக 49 சதவீதத்தை தாண்டியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில், 21% டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும், 18% கொழும்பு மாவட்டத்திலும், 7% களுத்துறை மாவட்டத்திலும் பதிவாகியுள்ளன. அவற்றில் 3.4% டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளனர். இது தவிர, திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில் இருந்தும் கணிசமான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. *டெங்கு பரவல் தொடர்பில் அனைத்து மாகாணங்களின் பிரதம செயலாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம், தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-* • இவ்வருடம் கொழும்பு மாவட்டத்தில் 6678 டெங்கு நோயாளர்களும்,…

Read More

வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவல்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி, குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களின் ஆவணங்களின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, தூதரகப் பிரிவு மிகவும் அவசரமான ஆவணங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் நிலையில், கணினிக் கட்டமைப்பு சீராக்கப்பட்டவுடன், ஏனைய ஆவணங்களுக்கான பணிகள் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏனைய தூதரக சேவைகள் எந்தவித தடங்கலும் இன்றி தொடர்கின்றன. இந்த நிலையில், பயனாளர்கள் தங்களுக்கான சேவைகள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. • கொழும்பு 01 இல் உள்ள தூதரக விவகாரப் பிரிவு, – 0112 338 812 •…

Read More

பொலன்னறுவை-சுங்காவில், நெலும்புர பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுங்காவில், நெலும்புர பகுதியைச் சேர்ந்த 30 வயதான இர்பான் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் புலஸ்த்திகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Read More

அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்று இயக்கப்படவிருந்த 5 அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (10) நள்ளிரவு வரை குறித்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். நானு ஓயாவில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படவிருந்த டிக்கிரி மெனிகே விரைவு ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இன்று அதிகாலை 3.55 மணிக்கு கணேவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை வரை இயக்கப்படவிருந்த அலுவலக ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேல் சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75 மில்லிலீற்றருக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஆங்காங்கே மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரியை புகையிரத சேவையில் நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(9) நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று இரவு 12 மணி முதல், அனைத்து சேவைகளில் இருந்தும் விலக அனைத்து புகையிரத நிலைய அதிபர்களும் தீர்மானித்துள்ளனர். புகையிரத பிரதிப் பொது முகாமையாளர் (வணிக) பதவியை நியமிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அதிகாரி ரயில்வே அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக அறிவித்த போதும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் சங்கத்தின் நிறைவேற்று சபை தீர்மானித்ததாகவும் கசுன் சாமர தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு , அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் இன்று(09) அறிவித்துள்ளார். டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பொலிஸாருக்கும் முப்படைக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Read More