இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண், சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக நேற்று புதன்கிழமை (20) அதிகாலை சென்றடைந்துள்ளனர். தனுஷ்கோடியை சென்றடைந்த குறித்த இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மட்டக்களப்பில் இருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்றார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Author: admin
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு, ஆளுங்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் 13 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது. கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (19) ஜனாதிபதியை சந்தித்த எம்.பிக்கள் இது தொடர்பான கடிதத்தைக் கையளித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பிரதமரின் கீழ் அனைத்துக் கட்சி அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்
டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்தீரதன்மை இன்மை காரணமாக சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் மாற்றம் ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான வீசா மற்றும் ஏனைய சேவை கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் குறித்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் தமது சிறப்புரிமைகளை மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்க வேண்டுமென மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பில் நான்கு முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவை முழு அரசியல் பொறிமுறையினாலும் கவனிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாவிட்டால் மகாசங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க சமரசம் ஒன்றை பிரகடணப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இன்று (20) முதல் ஒருவார காலத்திற்கு ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் இணைந்து இவ்வாறு ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் சார்பில் சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அனைத்து நகரங்களையும் உள்ளடக்கி பொது மக்களின் பங்களிப்புடன் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை மையப்படுத்தியதாக நாளைய தினம் பாடசாலைகள் நடைபெறாது என்ற ஓர் செய்தி பரவலாக மாணவர்கள் மத்தியில் பகிரப் படுவதாக தெரிவிக்கப்படுகின்றது . இதுதொடர்பாக பல மாணவர்கள் எம்மை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு குறித்த விடயத்தை தெளிவு படுத்துமாறு கேட்டிருந்தார்கள். அவர்களுக்கான தெளிவுபடுத்தல் ஆக இந்தப் பதிவை பதிவிடுகின்றோம். முதலாம் தவணை…
மாத்தறையில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சித்தார்கள் என தெரிவித்து *கைது செய்யப்பட்ட 08 பேரும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு* மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏப்ரல் 4 ஆம் தேதி, அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் நமது குடிமகனின் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்து MAS ஒரு அறிக்கையை வெளியிட்டது. அடுத்தடுத்த நிகழ்வுகளின் அடிப்படையில், தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை அமைதியான மற்றும் நிலையான முறையில் தீர்க்க உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கையின் அவசியத்தை MAS மீண்டும் வலியுறுத்துகிறது. ஒரு பொறுப்பான அமைப்பாக, மாற்றம் மற்றும் நல்லாட்சிக்கான அழைப்பை நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம், மேலும் நாட்டின் தலைவர்கள் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து, சட்ட மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்டுக்கொள்கிறோம். இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை முதலாளி மற்றும் ஏற்றுமதியாளர் என்ற வகையில், இலங்கையின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் எங்களின் பங்கை MAS நன்கு அறிந்திருக்கிறது. இதற்காக, எங்களது 92,000 கூட்டாளிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் நாட்டின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்களது கடமைகளை இடையூறு இல்லாமல் வழங்குவதில் கவனம்…
தேவை ஏற்படின் எரிபொருள் புகையிரதங்களுக்கு இலங்கை விமானப்படை பாதுகாப்பு வழங்கும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் எரிபொருள் பவுஸர்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராகலை தோட்ட தேயிலைத் தொழிற்சாலையில் இன்று (20) மதியம் திடீரென பரவிய தீ, பொதுமக்கள் மற்றும் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மின்சார ஒழுக்கு காரணமாக தொழிற்சாலையின் தேயிலைத் தூள் பதனிடும் அடுப்பில் இருந்து பாரிய தீ ஏற்பட்டுள்ளதால் அடுப்பு இயந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிர் ஆபத்துக்களோ, காயங்களோ ஏற்படவில்லை. மதியம் இரண்டுமுறை மின்சார தடை ஏற்பட்டமையால் அடுப்புக்கான மின்சாரம் அதிகரித்த நிலையில் திடீர் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தோட்ட மக்கள் ,தோட்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர போராடிய நிலையில், நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து செயற்பட்டதால் பாரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
பெற்றோலிய போக்குவரத்தில் இருந்து இன்று (20) விலகவுள்ளதாக பெற்றோலிய போக்குவரத்து பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலையின் பின்னர் போக்குவரத்து நடவடிக்கை களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. பௌசர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப் படுமாயின், போக்குவரத்தை தொடர்வது குறித்து பரிசீலிக்கலாம் என கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.