இலங்கையில் உள்ள துறைமுகத்தை கட்டியமைப்பதில் சீனாவிடம் இருந்து கடனை செலுத்த முடியாததால், அந்த துறைமுகத்தை சீனா கைப்பற்றியது என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் தற்போது இலங்கையுடன் இணைந்து சீனர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் சீனா உட்பட ஒவ்வொரு நாட்டுடனும் அமைதியான உறவை அவுஸ்திரேலியா விரும்புகிறது. எனினும் சீனா மாறுப்பட்ட விதத்தில் செயற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சீனாவிற்கும் சாலமன் தீவுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் சீனாவின் இராணுவ முகாம் என்று அமைக்கப்படவுள்ளது. இந்தநிலையில் அவுஸ்திரேலியா அதனை தடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஸ்கொட் மொரிசன், இந்த ஒப்பந்தத்தின் கீழ் எந்த சீன கடற்படை தளங்களையும் அனுமதிக்கப்போவதில்லை என்று சாலமன் தீவுகள் அரசாங்கம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
Author: admin
ஐக்கிய அரபு இராட்சியத்தை சேர்ந்த பிரதான எண்ணெய் விநியோக நிறுவனம் இலங்கைக்கு பாரிய கடன் அழுத்தத்தை பிரயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராட்சிய நிறுவனத்திடம் இருந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவிற்கே இந்த அழுத்தம் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்பவற்றுக்கான கடன் வழங்கலை இலங்கை அரசாங்கம் பிற்போட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிறுவனம் 95,000 மெட்ரிக் டன் எண்ணெய்யை இலங்கைக்கு விநியோகித்து அதற்கான கொடுப்பனவினை வழங்குவதற்கு 200 நாட்கள் காலவகாசம் வழங்கியிருந்தது. எனினும், தற்போது 80 நாட்களுக்குள் தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கையை அந்த நிறுவனம் நிர்பந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் ஏனைய எண்ணெய் நிறுவனங்களும் இதே நிலையை பின்பற்றலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சவுதி அரேபியா, குவைட் மற்றும் ஒமான் ஆகிய நாடுகளில் உள்ள எண்ணெய் விநியோக நிறுவனங்களுக்கு…
பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோருவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், அவர் தலைமையிலான அமைச்சரவையும் உடன் பதவி விலகி சர்வகட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்.பி. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். “நாட்டின் நெருக்கடி நிலைமைக்குப் பதவி விலகல் தீர்வு அல்ல. கட்சி வேறுபாடின்றி அனைவரினதும் ஒத்துழைப்புத்தான் மிகவும் அவசியம். பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோருவதற்கு எவருக்கும் அருகதை இல்லை. அவர் மக்கள் மனதை வென்ற தலைவர். தற்போதைய புதிய அமைச்சர்களையும், இராஜாங்க அமைச்சர்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே நியமித்தார். எனவே, புதிய அமைச்சரவை தொடர்பில் ஜனாதிபதிதான் தீர்மானம் எடுக்கவேண்டும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகளை…
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றமே இதற்கான காரணம் எனவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, எதிர்வரும் நாட்களில் பால் மாவுக்கான விலையை கணக்கிட்டு புதிய விலை நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் கையிருப்பு தீர்ந்து வருகின்றது. இதேவேளை, *400 கிராம் பால் மா பொதியின் விலை 1000 ரூபாவிற்கும் அதிகமாகவும், ஒரு கிலோ பால் மா பாக்கெட் 2500 ரூபாவை தாண்டும்* எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 400 கிராம் பால் மா பாக்கெட் 790 ரூபாவிற்கும், ஒரு கிலோ பாக்கெட் 1945 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
30 சதவீதமான உரங்கள் ரஷ்யாவிலிருந்து வருவதால் உர விநியோகமும் ஆபத்தை எதிர்கொள்கிறது என்று தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த அறுவடைக் காலத்திலும் இலங்கை உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளப் போகிறது எனவும் எச்சரித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் விரைவான நிதி முயற்சிக்கு இலங்கை தகுதி பெறாததாலும், இந்திய கடன் வரி அடுத்த மாதம் முடிவடைவதாலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தனது வியூகங்களை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்நும் குறிப்பிட்டார். சில இலங்கை வங்கியாளர்கள் கொழும்பில்ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், பொருளாதாரம் மேலும் சீரழிந்து போவது குறித்தும் எச்சரித்தார். நிதி அமைச்சின் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து விரைவான நிதி முன்முயற்சி உதவியை கோரியபோதும் இலங்கை அத்தகைய தொகுப்புக்கு தகுதியற்றது என்று தெரிவிக்கப்பட்டது. “இந்திய கடன் வரி அடுத்த மாதம் முடிவடையும். அதற்கு மேல் உர விநியோகமும் ஆபத்தை எதிர்கொள்கிறது. 30 சதவீதமான…
விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு அருகில் போராட்டக்காரர்கள் வீட்டை சுற்றி வளைத்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இலங்கையிலுள்ள அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளைய தினம் (25) பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் . அன்றைய தினம் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அக்கறையுடன் செயற்படுமாறும் – இன்றைய பொருளாதார நெருக்கடியுள்ள சூழலில் வீணான சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ.தீபன் திலீசன் தெரிவித்தார். அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், வடமாகாண கல்வித் திணைக்களத்தால் அன்றைய தினம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த இடைநிலை பிரிவுக்கான பரீட்சைகளை வேறொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரியுள்ளோம். எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் – மாற்றீடான எமது முன்மொழிவுகளை கல்வியமைச்சு நிராகரித்தமையின் விளைவாகவே நாளைய தினம் (25) அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் சுகயீன லீவுப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக – தூர இடங்களிலிருந்து வரும் மாணவர்களின் வரவு மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருட்களின் தட்டுப்பாடும் -விலையேற்றமும்- குடும்ப…
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பில் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது. காலத்துக்கேற்ற தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பில் ஏனைய பங்குதாரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் IMF குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடனான வேலைத்திட்டம் தொடர்பிலான ஆரம்பகட்ட தொழில்நுட்ப ரீதியிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடனான வேலைத்திட்டத்திற்கான அதிகாரிகளின் கோரிக்கை தொடர்பில் ஏப்ரல் 18 முதல் 22 ஆம் திகதிக்கிடையில் இலங்கை தூதுக்குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினருக்கிடையில் பயனுள்ள தொழில்நுட்ப கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மஷஹிரோ நொசாகி தெரிவித்துள்ளார். இலங்கையின் அண்மைய பொருளாதார மற்றும் நிதி அபிவிருத்திகள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பாதகமான விளைவுகளை வறியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பை குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கான ஒத்திசைவான உத்திகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக IMF தெரிவித்துள்ளது.…
பெலியத்த, நிஹிலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நிஹிலுவ, தாரபெரிய பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவர். அவரது வீட்டில் வைத்தே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக சவர்க்காரங்களின் விலைகள் அதிகூடிய மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வெளியாகியுள்ள புதிய விலைக்கமைய, ஒரு சவர்க்காரத்தின் விலை 200 ரூபாயை அண்மித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய ஒரு கட்டி சன்லைட் சவர்க்காரம் 135 ரூபாயை எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. பேபி சவர்க்காரம் ஒரு கட்டி 175 ரூபாயாகவும், லைப்போய் சவர்க்காரம் ஒன்று 145 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. இவ்வாறான விலைகளிலேயே ஏனைய சவர்க்காரங்களும் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. புதிய சவர்க்கார விலைகளை உறுதி செய்யும் புகைப்படங்களை பொது மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.