இன்று காலை 10.30 மணியளவில் அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 18 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சர்களின் தற்போதைய பதவிகள் அப்படியே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Author: admin
பொது சுகாதார சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை முறையாக வழங்க தவறினால் தொற்று நோய்கள் மற்றும் தாய், சிறுவர்களின் மரண வீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பொது சுகாதார சேவையை முன்னெடுத்து செல்வதற்கு தேவையான வசதிகள் கிடைக்கப்பெறாமையினால் ஏற்படப்போகும் பாதிப்பு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கையில் காலா காலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த பொது சுகாதார சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொது மக்கள் சுகாதார சேலையை முன்னெடுத்துச் செல்லும் சுகாதார அதிகாரிகளுக்கு தேவையான எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை. சுகாதார அதிகாரிகள் காரியாலயங்களின் வாகனங்களுக்கும் எரிபொருள் இல்லை. மருந்து பொருட்களை பாதுகாத்து வைக்கும் குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு தேவையான மின்சாரம் இல்லை. அங்கிருக்கும் ஜெனரேட்டர்களுக்கு தேவையான…
மீண்டுமோர் அமைச்சரவை மாற்றத்தை பொது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தற்போதைய காலநிலையில் வெறுமனே தலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள பொதுமக்கள் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் நடத்தையால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள், ஒட்டுமொத்த அமைச்சரவையையும் இராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளனர் என்று தெரிவித்த அவர், நாட்டை நடத்துவதற்கு ஒரே மாதிரியானோர் தொடர்வதை ஏற்க முடியாது என்றும், அது பொதுமக்களின் உணர்வைப் பிரதிபலிக்காது என்றும் கூறினார். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடங்கியுள்ள அனைத்து விவரங்களையும் அறியாமல் கையொப்பமிடத் தயாராக இல்லை எனவும் வெற்று ஆவணத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார். பிரேரணையை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும் 113 வாக்குகள் தேவைப்படும் என்பதால் ஏனைய கட்சிகளுடன் முதலில் கலந்துரையாடல்களை…
நாட்டின் ஆட்சியினை ஒரு வருடத்துக்கு தமிழ்தரப்புக்கு வழங்குமாறு சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுத்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒருவருடத்தில் இந்த நாட்டினை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என்று தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ஐனாதிபதியாகும் தகுதி கோட்டாபயவுக்கு இல்லை என்று எமது மக்கள் வாக்குகள் மூலம் அன்றே ஆருடம் சொல்லியிருந்தார்கள். கோட்டாவும், மஹிந்தவும் ஆயுதப் போராட்டத்தினை மௌனிக்க செய்ததாக வெற்றிவிழா கொண்டாடினார்கள். ஆனால் சர்வதேசத்தின் உதவியுடன் தான் எமது போராட்டத்தினை மௌனிக்க செய்தார்களே தவிர இவர்களது திறமையால் மௌனிக்கவில்லை என்பதை இன்று விளங்கிக்கொள்ள முடியும். இன்று சிங்கள மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் எமது போராட்டம் நியாயமானது என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் போராட்டக்காரர்களால் வெளிப்படையாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனை…
அமையவுள்ள அமைச்சரவையில் தான் அமைச்சு பொறுப்புகள் எதனையும் ஏற்கப்போவதில்லை என முன்னாள் ஊடக அமைச்சர் டளஸ் அலகப்பெரும் குறிப்பிட்டார். டுவிட்டர் பதிவின்றின் மூலம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன்று போராட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலக கட்டடத்தின் மீது Go Home Gota என்ற வாசகத்தை projecter மூலம் காட்சிபடுத்தினர். எவ்வாறாயினும் அதனை கட்டடத்தின் மீது அதனை காட்சி படுத்துவதை பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க முயன்றனர்.
அம்பாரை மாவட்டத்தில் முன்னணி விளையாட்டுக் கழகமான சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாக சபை உறுப்பினர்கள் தெரிவும்,இப்தார் நிகழ்வும் கழகத்தின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் பல அதிதிகளின் பங்குபற்றலுடன் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய மண்டபத்தில் சனிக்கிழமை(16) நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்பமாக 2022 ஆம் ஆண்டுக்கான நிருவாக சபை உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது இதன் போது கழகத்தின் தலைவராக ஏ.பாயிஸ் அவர்களும்,செயலாளராக யூ.கே.ஜவாஹிர் அவர்களும், பொருளாளராக ஏ.ஏ.எம்.பார்விஜ் உட்பட 23 பேர் நிருவாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். மேலும் நிகழ்வின் அங்கமாக கிரிக்கெட் போட்டிகளில் அண்மைக் காலங்களில் சிறந்த முறையில் பிரகாசித்த கழகத்தின் வீரர்கள் இதன் போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஒற்றுமையும் விட்டுக்கொடுப்பும் எனும் தலைப்பில் மெளலவி அப்துல் கரீம்,அவர்களும் நோன்பின் முக்கியத்துவம் பற்றி மெளலவி அப்துல்லாஹ் ஆகியோரினால் சன்மார்க்க சொற் பொழிவு இடம் பெற்றது . இதேவேளை குறித்த மியன்டாட் விளையாட்டுக் கழகமானது ஆரம்பிக்கப்பட்டு…
இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது. கொழும்பில் பணமோ, உணவுகளோ, அத்தியாவசிய மருந்துகளோ, எரிபொருளோ இல்லை. உணவுப் பொருட்களின் விலை குறைந்தது 30% உயர்ந்துள்ளது. இதற்கு யாரைக் குறை கூறுவது? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அல்லது சீனா?
கொழும்பில் காலி முகத்திடலை ஆக்கிரமிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக காலி நகரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடத்தை பொலிஸார் இன்று அகற்றியுள்ளனர். கொழும்பில் இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காலியில் இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திங்கட்கிழமைக்குள் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. பெட்ரோலிய பவுசர்களின் அனைத்து உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களை விநியோக செயல்முறையை சீரமைக்க சம்பந்தப்பட்ட டெர்மினல்கள் மற்றும் டிப்போக்களுக்கு அனுப்புமாறு CPC கேட்டுக் கொண்டுள்ளது. 37,500 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்தது. மேலும் 41,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றிச் செல்லும் கப்பல் வந்து இறக்கத் தொடங்கியது என்று CPC கூறுகிறது.