அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (02) கொழும்பில் கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராளிகள் குழுவினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேரணி இன்று பிற்பகல் 03.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் ஆரம்பமாகி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது. எவ்வாறாயினும், இன்றைய போராட்டத்தில் தமது கட்சி இணைந்து கொள்ளாது என மக்கள் விடுதலை முன்னணியின் திரு.சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
Author: admin
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறுவன் ஒருவன் தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஸ்பூர் மாவட்டத்தில் பாஹ்டி கோர்வா என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இப்பகுதியில் 200 வகையான பாம்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த 12 வயதான சிறுவன் தீபக்ராம் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று அங்கே விளையாடிக் கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று தீபக்ராம் கையை கடித்துள்ளது. இதனால் வேதனையடைந்த சிறுவன் கையை உதறினான். ஆனாலும் பாம்பு விடாமல் கையை சுற்றியதால் ஆவேசம் அடைந்த சிறுவன் அந்த பாம்பை பலமுறை திரும்ப கடித்துள்ளான். இதில் அந்த பாம்பு உயிரிழந்தது. இதற்கிடையே சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து சிறுவனை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஐந்து பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருவதாக குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் சுவிங் கம் உள்ளிட்ட இனிப்புகள், சொக்லேட், பிஸ்கட், கேக் மற்றும் வாசனை சவர்க்காரங்கள் ஆகியவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது இறக்குமதியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலை, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட முகவரி ஆகியவற்றை ஆங்கிலத்தில் தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கட்சிகளின் உள்ளக ஜனநாயகம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தல் முறைமை தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை, இதில் கலந்து கொண்ட தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் நடத்துவதற்கு தயார் என தெரிவித்தார். வளர்ச்சியடையாத நாட்டில் வாக்கெடுப்பை நடத்துவதும் அபிவிருத்தியே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களின் சந்தைப் பொதிகளில் அதிகபட்ச சில்லறை விலை உட்பட மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் சுவிங் கம் உள்ளிட்ட இனிப்புகள், சொக்லேட், பிஸ்கட், கேக் மற்றும் வாசனை சவர்க்காரங்கள் ஆகியவை இந்த பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது இறக்குமதியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலை, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட முகவரி ஆகியவற்றை ஆங்கிலத்தில் தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று (01) முதல் அமுலுக்கு வருவதாக குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையில்லா வணிக நிலையம் (duty free mall) ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்கள் மூன்று இதில் உள்ளடங்குவதுடன், இது தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய தீர்வையில்லா வணிக நிலையம் எனக் கூறப்படுகிறது. இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இதனால் குறித்த வணிக வளாகம் பாதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக வேகத்துடன் பயணித்த இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இரண்டு தனியார் பஸ்களும் நாவலப்பிட்டி- மிபிட்டிய பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுள் பஸ்ஸின் சாரதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த வீதியில் அடிக்கடி விபத்து இடம்பெறும் பகுதியிலேயே இந்த விபத்தும் இடம்பெற்றுள்ளதாகவும் அதிக வேகமே விபத்துக்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாம் பாடப் புத்தகங்களை அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறும், பாடப் புத்தகங்களில் எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு திருத்தங்கள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினுடைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகத்தினை மீள் விநியோகம் செய்தல் தொடர்பில், நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி எச்.இஸ்மாயில் தலைமையிலான குழுவினர், பல அரசியல் பிரமுகர்களுடன் தொடர்ச்சியாக சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நேற்றைய தினம் (31) சந்தித்து, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினர். அதன் பிற்பாடு, இன்றைய தினம் (01) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் உட்பட அதன் பிரதிநிதிகளும், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சட்டத்தரணி ஷஹ்பி தலைமையிலான நீதிக்கான மய்யத்தின் உறுப்பினர்களும்,…
இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்து 43,700 அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பன்னிபிட்டிய – வியாட்புர, கொட்டாவ மற்றும் மாலம்பே பிரதேசங்களில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் இந்த வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும் 10 வீடுகளை வாங்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையர்களால் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அநுராதபுரம், கெப்பித்திகொல்லாவ, ரம்பகெப்புவெவ பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது பொதுமக்கள் தாக்குதலில் படுகாயமைடைந்த பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளார் என்று கெப்பித்திகொல்லாவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பௌத்த பிக்கு உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். கெப்பித்திக்கொல்லாவ பகுதியில் நேற்று (31) மாலை காட்டு யானை தாக்கியதில் ரம்பகெப்புவெவ திட்டகோனேவ பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பி.குணசிங்க (வயது 48) என்ற விவசாயி உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் யானைப் பிரச்சினையைத் தீர்க்குமாறும் வலியுறுத்தி பௌத்த பிக்கு உள்ளடங்கலாக 100க்கும் மேற்பட்ட பிரதேச வாசிகள் ரம்பகெப்புவெவ பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கெப்பித்திக்கொல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மீது பொதுமக்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவும் தாக்குதலுக்கு இலக்காகிய பொலிஸ் அதிகாரியை மீட்பதற்காகவும்…