யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதன்போது 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போயுள்ளதாக குறித்த வீட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் , நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Author: admin
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேநேரம், 9 மாவட்டங்களில் 253 குடும்பங்களைச் சேர்ந்த 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் ஒரு வீடு முழுமையாகவும் 161 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) உரையாற்றவுள்ளார். எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நவம்பர் 6 முதல் 18 வரை நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று எகிப்துக்கு சென்றார். இந்நிலையில், இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மன்றம் மற்றும் உலகத் தலைவர்கள் மன்றம் ஆகியவற்றிலும் கலந்துகொள்ளவுள்ளார். நேற்று எகிப்துக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸை சந்தித்தார். தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணியின் அனைத்து வீரர்களுக்கும் தனிப்பட்ட பொறுப்பு இருப்பதாகவும், தனுஷ்க குணதிலக்கவிற்கு நடந்ததற்கு வருந்துவதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று (07) காலை இலங்கை அணி நாட்டை வந்தடைந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மேல்மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள் இன்று முதல் வழங்கப்படவுள்ளது. அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெறுவதற்கு மேல் மாகாணத்தில் பதிவு செய்வது கட்டாயம் என முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அமைப்பின் அழைப்பாளர் ரோஹன பெரேரா குறிப்பிட்டுள்ளார். முன்னதாக முச்சக்கர வண்டிகளுக்கு ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, முச்சக்கரவண்டி ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழில்முறை முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிகமாக 5 லீற்றர் வழங்குவதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, கடந்த முதலாம் திகதி முதல் மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முச்சக்கரவண்டிகளின் பதிவு ஆரம்பிக்கப்பட்டதுடன், இதுவரை சுமார் 9,000 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலதிக எரிபொருள் கோட்டாவான 05 லீற்றரைப் பெறுவதற்கு பதிவு செய்வதற்கு இன்னும் அவகாசம் உள்ளதாக மேல் மாகாண…
‘பால்’ மாற்றிய தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனதுக்குப் பிறந்த பெண் சிசுவுக்கு பதிலாக ஆண் சிசுவை மாற்றி எடுத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய, தாயொருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் போதனை வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்தத் தாய், பதவியவைச் சேர்ந்த 32 வயதானவர் ஆவார். கைது செய்யப்பட்ட தாயும், கலன் பிந்துனுவைச் சேர்ந்த 42 வயதான தாயும் ஒரேநாளில் சிசுக்களைப் பிரசவித்துள்ளனர். பிரசவத்துக்குப் பின்னர் இரண்டு சிசுகளும் சூடான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தனக்குப் பிறந்த ஆண் குழந்தையை, பதவியைச் சேர்ந்த தாய் மாற்றிக்கொண்டார் என கலன் பிந்துனுவைச் சேர்ந்த தாய் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்ட தாய், 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். வழக்கு 2023 மே மாதம் 22 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் அனுராதபுரம்…
யாழ்ப்பாணம் வசாவிளான், ஒட்டகப்புலம் பகுதிகளில் கள்ள உறுதி முடித்து காணிகள் விற்கப்படுவதாகவும், அதனால் அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில், கடந்த 32 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த சில காணிகள் தற்போது விடுக்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர்கள் அவற்றினை அடையாளம் கண்டு அறிக்கைப்படுத்த முன்னர், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு உரிமையாளரின் பெயர்களை மாற்றம் செய்தும் , உறுதிகளில் மோசடி செய்தும், கள்ள உறுதிகள் முடித்து, அக்காணிகளை விற்பனை செய்யும் முயற்சிகளில் சில குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. எனவே, அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் உறுதி விடயத்தில் அவதனாமாகவும் விழிப்பாகவும் இருக்குமாறும், வாங்கப் போகும் காணிகள் தொடர்பில் தீர விசாரிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைத்துள்ள பெயர்கள் அடங்கிய பட்டியலில் உள்ள பெயர்களை உள்ளடக்கி புதிய அமைச்சரவையை நியமிக்காவிடின், பட்ஜெட் (பாதீடு) தோற்கடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வு கூறியுள்ளது. புதிய அமைச்சரவைக்குள் தங்களுடைய குழு சார்பில் உள்ளடக்க வேண்டிய பெயர் பட்டியலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுன சமர்ப்பித்துள்ளது. எனினும், புதிய அமைச்சரவையை நியமிப்பது காலந்தாழ்த்தப்படுகின்றது. இதனால், பெரமுனவுக்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சரவைக்குள் உள்வாங்க வேண்டியவர்கள் தொடர்பிலான பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்களை புதிய அமைச்சரவைக்குள் இணைத்துக்கொள்ளாவிடின், 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோல்வியடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு- செலவுத் திட்டம் அவ்வாறு தோற்கடிக்கப்படுமாயின். அவரசமாக பொதுத் தேர்தலொன்றை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அக்கட்சி எதிர்வுகூறியுள்ளது.
ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களுக்கு சொந்தமான 2 மீன்பிடி படகுகள் மற்றும் ஒரு டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய கைதிகளைக் கண்டறிய உடனடியாக தேடுதல் குழு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.