Author: admin

பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் நீண்ட வலுவாக தந்திரமான சக்தியினை உருவாக்க எதிர்காலத்தில் திட்டநடைமுறைகள் வரையப்பட்டு வருகின்றது. தன்னிறைவு அடைந்து வரும் இலங்கையில் தற்போதைய இரண்டு வருடகாலத்தில் கோவிட் தொற்று நிலைமை காரணமாக பாரிய பின்னடைவு சகல துறைகளிலும் காணபட்டுள்ளன. அவ்வாறான நிலையினை திறம்பட மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. அதற்கு எதிர்வரும் 03 வருடகாலப்பகுதி தேவையாக இருக்கின்றது என ஜனாதிபதியின் பாரியார் மைத்திரீ விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் ( Shaping the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சர்வதேச ஆய்வு மாநாட்டு தொடரில், பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையத்தினால் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு இன்று கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாலின…

Read More

இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை எனவும் சாப்பிடவும் குடிக்கவும் கேட்டு வீதியில் இறங்கும் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவின் நலன் அறிய நேற்று சென்றிருந்த போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா இதனை கூறியுள்ளார். வசந்த முதலிகே என்ற பல்கலைக்கழக மாணவன், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 90 நாட்கள் தடுப்பு காவல் அனுமதி பெற்று ஏற்கனவே இரண்டு மாதங்கள் தடுத்து வைத்துள்ளனர். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாட்டில் பயங்கரவாதம் இல்லை. நாட்டு மக்கள், சாப்பிடவும் குடிக்கவும் இல்லாத காரணத்தினால் குரல் எழுப்புகின்றனர். பயங்கரவாதத்தை உருவாக்கி, அப்படி குரல் கொடுக்கும் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி…

Read More

எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமாயின் அரசாங்கம் கவிழும் அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். 22 திருத்தத்திற்கு வாக்களிக்காத ஆளும்கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான நிலையில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு, அரசாங்கத்தைக் கலைக்க வற்புறுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேராசிரியர் சன்ன ஜயசுமண இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஒரு சிறிய பகுதியானாலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கினால், வரவு செலவுத் திட்டம் நிச்சயமாக தோற்கடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Read More

கொழும்பு கோட்டை மொத்த வியாபாரிகளால், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன, இன்று (29) தெரிவித்தார். திறந்த கணக்குகள் மூலம் கோதுமை மா இறக்குமதியை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கிடைத்தவுடன் கோதுமை மா இறக்குமதியை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அதிகளவான தொகை கோதுமை மா, இறக்குமதிக்காக முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாவும் செனவிரத்ன சுட்டிக்காட்டினார்.

Read More

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக விமர்சித்துள்ளார். இதையடுத்து, டுவிட்டரை வாங்கப்போவதாக கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் அறிவித்தார். இது தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் 44 பில்லியன் டொலர்களுக்கு டுவிட்டரை வாங்க ஒப்பந்தம் செய்தார். பின்னர் டுவிட்டரை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் டுவிட்டரில் இருக்கும் போலி கணக்குகள் குறித்த தகவல்களை நிறுவனம் வழங்க மறுப்பதாக கூறி ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக எலான் மஸ்க் அறிவித்தார். இதையடுத்து எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்த. வழக்கை விசாரித்த கோர்ட்டு ஒக்டோபர் 28-திகதிக்குள் (நேற்று) ஒப்பந்தத்தை இறுதிசெய்ய கெடு விதித்தது. இந்த சூழலில் அமெரிக்காவின் சென்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டுவிட்டர் தலைமையகத்துக்குள் எலான் மஸ்க் நேற்று முன்தினம் நுழைந்த போது அவர் கைக்கழுவ பயன்படுத்தப்படும் சிங்க் ஒற்றை கையில் எடுத்து சென்றார்.…

Read More

பாலியல் ஊக்க மருந்து பாவனையினால் ஏற்படும் உயிரிழப்புகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார். இதற்கு பல முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “பாலியல் உணர்வை ஊக்கப்படுத்தும் மருந்துகளின் பயன்பாட்டினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. தரமற்ற மருந்துகளின் பயன்பாடு, தவறான அளவு மற்றும் மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்துவதே இந்த உயிரிழப்புக்களுக்கு முக்கியக் காரணமாகும்.” “20-25 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 40-45 வயதிற்குட்பட்டவர்கள் இந்த நிலைமையை எதிர்நோக்குகின்றனர்.” “பல இளைஞர்கள் இந்த பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்துகளை பரிசோதனைக்காக அருந்தியுள்ளனர்.” “மாதமொன்றிற்கு இரண்டு அல்லது மூன்று சம்பவங்கள் பதிவாகின்றன. இது உண்மையில் அதிக எண்ணிக்கை, எனவே நாங்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவக் காப்புறுதித் தொகையை 10 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்கான யோசனையை முன்வைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் அவைக் குழுவில் விவாதிக்கப்பட்ட போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெற்றுக்கொண்ட மருத்துவக் காப்புறுதி இரண்டு இலட்சம் ரூபாயாகும். பொருளாதார சூழ்நிலை காரணமாக அனைத்து மருத்துவ சேவைகளும் அதிகரித்துள்ள நிலையில் காப்புறுதித் தொகை போதுமானதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

1997ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக முதலாம் ஆண்டில் கல்வி கற்ற செல்வநாயகம் வரப்பிரகாஷ் என்பவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், அப்போது இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கில் பிரதானமாவராக குற்றஞ்சாட்டப்பட்ட பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரனின் இருப்பிடம் தெரியாத நிலையில் அவர் ஆரம்பம் முதலே மன்றில் முன்னிலையாகாத நிலையிலேயே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. செல்வநாயகம் வரபிரகாஷ், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவராக இருந்தபோது, அவர் மீது மனிதாபிமானமற்ற வகையில் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டது. 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்று சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த அவர் 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மரணமானார். சாட்சியங்களின்படி, பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்களும், பகிடிவதையில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களும் பொறியியல் பீடத்தின் இரண்டாம்…

Read More

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்ப்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக திணைக்களம் பெருமளவிலான சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதை இடைநிறுத்தி, குறைந்த எண்ணிக்கையிலான பத்திரங்களை மாத்திரமே வழங்கி வருகிறது. அடுத்த வாரம் ஜேர்மனியில் இருந்து 500,000 அட்டைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது 600,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More

புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளை அரிசி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் 375 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை 350 ரூபாவாக குறைந்துள்ளது. அத்துடன் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை பருத்தியின் மொத்த விலை 225 ரூபாவாக குறைந்துள்ளதாக அத்தியாவசிய பண்ட இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை நேற்று 250 ரூபாவாக குறைந்துள்ளது. கோதுமை மாவின் விலை பல தடவைகள் குறைக்கப்பட்ட போதிலும், வெதுப்பக உரிமையாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலையை இதுவரை குறைக்கவில்லை.

Read More