யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாண்டியன் தாழ்வு பகுதியை சேர்ந்த 21 வயனான வெற்றிவேல் டினோஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று (04) மதியம் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் , அரியாலை பூங்கன்குளம் பகுதியில் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளனர். அதனை அடுத்து குறித்த புகையிரதத்தில் படுகாயமடைந்த இளைஞனை ஏற்றி புகையிரதம் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு மீள திரும்பி , அங்கிருந்து நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி மாலை உயிரிழந்துள்ளார்.
Author: admin
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சிலஇடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்க முடியும். இதற்கமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சிக்கு மேலும் சில அமைச்சுப் பதவிகளை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்கள் பவித்ரா வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானும் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று நள்ளிரவு 12.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ், வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு குடைசாய்ந்துள்ளது. இதன்போது, பஸ்ஸின் சாரதி மற்றும் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளனர். இதேவேளை குறித்த பஸ்ஸில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில், நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஐந்து முட்டைகளை விற்ற வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமொன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது. ஐந்து முட்டைகளை கூடிய விலைக்கு விற்ற வீரகெட்டிய வர்த்தருக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டை 60 ரூபாய் என்றடிப்படையில் ஐந்து முட்டைகளுக்கு 300 ரூபாய் அறவிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கே, இந்த தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சீனா விண்வெளிக்கு அனுப்பிய 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட விண்கலத்தின் பாகங்கள் இன்று பூமியில் விழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து, 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட விண்கலம் ஒன்று கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் மூலம் சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் என்ற உபகரணங்களின் தொகுதி அனுப்பப்பட்டது. இதன்பின்னர், அந்த விண்கலம் இன்று பூமியை நோக்கி விழுகிறது. எனினும் லோங் மார்ச் 5பி என்ற இந்த விண்கலம் பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற விபரங்களை சீனா உறுதி செய்யவில்லை. இந்த விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் லோங் மார்ச் 5பி விண்கலம், சுமார் 108 அடி நீளமும், 22 ஆயிரம் கிலோ நிறையையும் கொண்டது. எனவே, இத்தகைய அளவு கொண்ட…
ஈரானில் கடந்த 6 வாரங்களாக இடம்பெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 277 பேர் உயிரிழந்துள்ளதோடு 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் இஸ்லாமிய மத சட்டங்களின் படி ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17 ஆம் திகதி உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரானில் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. குழுவைச் சேர்ந்த ஜாவத் ரஹ்மான் தெரிவிக்கையில், “கடந்த 6 வாரங்களாக ஈரானில் இடம்பெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சட்ட மாணவர்கள் என இதுவரை…
அரசு ஊழியர்கள் செய்யும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1905 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று (4) அறிவித்துள்ளது. மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் சேவையாற்றுவோரின் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும். மேலும், பதிவாளர் திணைக்களம் மற்றும் ஓய்வூதியத் திணைக்களத்தில் பணியாற்றுபவர்கள் செய்யும் இத்தகைய செயல்கள் குறித்த முறைப்பாடுகளையும் அதே எண்ணுக்கு அனுப்பலாம். மேலும், அரச நிறுவனங்களில் பொதுப் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் லஞ்சம் அல்லது ஊழல் நடவடிக்கைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவன பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் இலஞ்சம் அல்லது ஊழல் நடவடிக்கைகளை 1954 என்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும்…
ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை 4 ஓட்டங்களால் வெற்றி ஈட்டியமையால் இலங்கை நொக்கவுட் ஆனது அவுஸ்திரேலியா (168/8) ஆப்கானிஸ்தான் (164/7)
எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையான மின்வெட்டு விபரத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. மேற்குறித்த மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த தினங்களில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.