“ஜனாதிபதி கோட்டாபய வெளியேறினாலும் பிரச்சினைக்கு தீர்வு இல்லை” – முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Author: admin
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சேர்ந்து இராணுவ பைக் ரைடர்களின் வழியைத் தடுத்தனர். இராணுவத் தளபதி விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அவசரகால விதிமுறைகள் வர்த்தமானி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. https://twitter.com/SriLankaTweet/status/1511401952030392320?t=Kk1GTsg4oedf4xkv3pcXxg&s=19 #SriLanka #SriLankaCrisis
பொது அவசரநிலையை திரும்பப் பெற அரசாங்கம் பரிசீலித்து வருகிறது, பொது அவசரநிலையை அறிவிக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு திரும்பப் பெறப்படும். https://t.co/1goYAIpN0Z #LKA #SriLanka #SriLankaCrisis
பாராளுமன்ற போராட்டம் அருகே பதிவு செய்யப்படாத பைக்குகளில் ஆயுதம் ஏந்திய முகமூடி அணிந்தவர்களை போலீசார் எதிர்கொள்கிறார்கள் https://t.co/DoWNeWjEpx
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்ததற்காக பிரதமருக்கு அந்த அதிகாரத்தை வழங்கவும் முடியாது. ஒரு சமநிலையிலான அதிகார பகிர்வை இருவரும் கொண்டிருந்த வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த அரசாங்கத்தை தற்போது வீட்டுக்கு அனுப்புவதற்காகவே மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், மக்களின் ஆசிர்வாதத்துடனேயே ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருமெனவும் அவர் குறிப்பிட்டார். <iframe width=”713″ height=”401″ src=”https://www.youtube.com/embed/YXTto4ikQ_U” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என முன்னனி தமிழ் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென சொல்லப்படுகிறது. அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக சொல்லப்பட்டது. இதனடிப்படையில், பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கம் மற்றும் கட்சிகளுக்குள் உடனடி அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டை முன்னெடுப்பதற்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். இருப்பினும் ஜனாதிபதி அதை ஏற்கவில்லை!