குருநாகல் ரிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடலுபொல பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகனைக் கொலை செய்துள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வெள்ளிக்கிழமை (4) அதிகாலை குறித்த கொலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த 29 வயதுடைய நபர் உறங்கிக் கொண்டிருந்த போது, குறித்த இளைஞரின் தந்தை தனது மகனை கோடரியால் தாக்கிக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதையடுத்து குறித்த தந்தை பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ரிதிகம பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Author: admin
பொகவந்தலாவ,கெம்பியன் புதிய வீடமைப்புப் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று 50அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மூவர் படுகாயமடைந்த நிலையில், பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் பொகவந்தலாவ தெரிவித்தனர். பொகவந்தலாவையில் இருந்து பலாங்கொடை பகுதியை நோக்கி பணயனித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் காயங்களுக்குள்ளான மூவரில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முச்சக்கர வண்டிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவருகிறது. விபத்து எற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லையென தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
புஸல்லாவை, எல்பொட தோட்டப் பகுதியில் இன்று (05.11.2022) அதிகாலை ‘எரிபொருள் கொல்கலன்’ வாகனம் (சிபேட்கோ) விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.பி. துசிந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கம்பளை – புஸ்ஸலாவ எல்பொட தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு தேவையான 6600 லீற்றர் டீசலை வழங்கிவிட்டு, கம்பளை நோக்கி திரும்பும் வழியிலேயே அதிகாலை 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. எரிபொருள் பௌசருக்குள் சாரதியும், உதவியாளரும் இருந்துள்ளனர். சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால், வீதியில் ஏற்பட்ட வழுக்கல் தன்மையால் சாரதியின் கட்டுப்பாட்டைமீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த பௌசரில் 13200 லீற்றர் டீசல் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ –…
இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கமைய, பேலியகொட மெனிங் சந்தை நிலவரப்படி பொதுச்சந்தைகளில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு 330 ரூபாவாகவும், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் 480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனடிப்படையில் நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் பின்வரும் விலை நிர்ணய அடிப்படையில் விற்பனை செய்யப்படுக்கின்றன, 1kg கரட் 420 ரூபாய் 1kg போஞ்சி 520 ரூபாய் 1kg கோவா 360 ரூபாய் 1kg கத்தரிக்காய் 400 ரூபாய் 1kg பூசணி 280 ரூபாய் 1kg பச்சை மிளகாய் 400 ரூபாய் 1kg தேசிக்காய் 800 ரூபாய் 1kg தக்காளி 440 ரூபாய்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உடல்நிலை குறித்து முகிய செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது வலது காலில் துப்பாக்கி சூடு பட்டு படுகாயமடைந்த நிலையில் அவருக்கு சொந்தமான சவுக்கத் கானும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியர் தெரிவித்தார். எனினும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். இந்த நிலையில் இம்ரான்கான் நேற்று இரவு வைத்தியசாலையில் இருந்தவாறே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், என்னை கொல்ல திட்டமிட்டுள்ளனர் என்பது தாக்குதல் நடப்பதற்கு முந்தைய நாளே எனக்கு தெரியும். வெளியே செல்ல வேண்டாம் என்று என்னிடம் அறிவுறுத்தப்பட்டது. அன்று நான் கன்டெய்னரில் இருந்தபோது திடீரென என்…
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளதால் அதற்கமைய பொறுப்புகளை துறந்து , நிதி அமைச்சை வைத்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை அலி சப்ரிக்கு வழங்க விருப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. எனவே தற்போது ஜனாதிபதி பொறுப்பில் உள்ள நிதி அமைச்சு பதவியை அலி சப்ரிக்கு வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த யுவதியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (05) நள்ளிரவு 12.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உலகக் கிண்ணத் தொடருக்கான அணி தயார் நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அணி நிர்வாகத்துடனான சில கருத்து வேறுபாடுகளும் அவரது ராஜினாமாவுக்கு வழிவகுத்துள்ளதாக தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்திற்காக தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த குழுவின் உறுப்பினர்களாக ஜயலத் திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே. தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.