நாடளாவிய ரீதியில் 300 சதொச கடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்க கலால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, கலால் அறிவிப்பு பிரிவு 902க்கு உட்பட்ட அனைத்து சதொச கடைகளுக்கும் உடனடியாக மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் மதுபான அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்த சில சதொச நிறுவனங்கள் உரிய தகுதிகளை பூர்த்தி செய்யாததாலும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாகவும் இந்த உரிமங்கள் வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த சில சதொச கடைகளுக்கு இந்த அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உரிய அனுமதிப்பத்திரங்களை அங்கீகரித்ததன் பின்னர், சதொச நிறுவனங்களில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் கலால் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Author: admin
சுற்றுலா வீசா மூலம், வீட்டு வேலை மற்றும் திறன்சாரா துறைகளில் தொழிலுக்காக, பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதேவேளை, சுற்றுலா வீசா மூலம், தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர். இந்த ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில், சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி, அவர்கள் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கு செல்ல முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரான மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. மொஹமட் நிசார், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் அஹ்மத்லுக்மான் தாலிப் மற்றும் துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபரான முசாப் துர்க்மென் ஆகியோருடன் இணைந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் அல்லது நிசார் இலங்கையை தளமாகக் கொண்ட தாலிபின் வர்த்தக பங்காளி என அமெரிக்க திறைசேரி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், தாலிப் மற்றும் நிசார் இருவரும் ஒரே வணிகத்தின் கூட்டு பங்காளிகளாக இருந்தனர். அத்துடன் நிசார் 2018இன் பிற்பகுதியிலிருந்து இலங்கையில் தாலிபின் வணிகப் பங்காளியாக செயற்பட்டு வந்துள்ளார். இலங்கையில் அவர்களின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் வருடத்திற்கு கிட்டத்தட்ட 200,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி குறிப்பிட்டுள்ளது. நிசார், தாலிபின் உறவினர் என்றும் திறைசேரி குறிப்பிட்டுள்ளது. பிரேசில், கொலம்பியா, இலங்கை, தன்சானியா, துருக்கி…
ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக திறைசேரியின் அனுமதியைப் பெற்றதன் பின்னர் இரண்டு பகுதிகளாக இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியின் காரணமாக திறைசேரி பணம் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஓய்வூதிய பணிக்கொடைக்காக ஏராளமானோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவெளை, 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அனைத்து கொடுப்பனவுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனவரி முதல் எஞ்சிய காலப்பகுதி வரை கொடுப்பனவுகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க திறைசேரி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இரத்தினக்கற்கள் என சந்தேகிக்கப்படும் கற்கள் பொதியுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்லேல்ல-தமன்கடுவ பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் களவாஞ்சிகுடி முகாமிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் காரைதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினங்கள் என சந்தேகிக்கப்படும் 188 கற்கள் மற்றும் இரத்தினக்கற்களை சோதனையிட பயன்படுத்திய கருவி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேநேரம், 14 மாவட்டங்களில் 620 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் 2 வீடுகள் முழுமையாகவும் 235 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடந்த ஆசிரியர் தகுதி விண்ணப்பித்த பெண் ஒருவர் தனது பரீட்சை அனுமதி அட்டையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக குறித்த அனுமதி அட்டையில் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அக்கல்லூரி முதல்வர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.. மேலும், இது குறித்து தேர்வு குழுவினர் விசாரித்த போது அந்த பெண் சிக்கமகளூருவை சேர்ந்தவர் என்றும், ஷிமோகாவில் தேர்வு மையம் இருந்ததால் தனது கணவரின் நண்பர் மூலமாக இணையத்தில் விண்ணப்பம் செய்ததில் அந்த நபர் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்திற்கு பதில், தவறுதலாக சன்னி லியோனின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த பிரீட்சை அனுமதி அட்டை சமூக இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று காலை 9 மணியளவில் ஆய்வரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. எகெட்( AHEAD) செயற்றிட்டத்தின் நிதி அனுசரணையுடன் நடைபெற்ற ஆய்வரங்கானது, “பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகளிடையே வழமைக்கு திரும்புதலும் மீண்டெழும் தன்மையைக் கட்டியெழுப்புதலும்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இவ் ஆய்வரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன் திறவுரையினை கொழும்புப் பல்கலைக்கழகப் பொருளியல்துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் ‘இலங்கையின் தற்போதய பொருளாதார நெருக்கடி’ எனும் கருப்பொருளில் மேற்கொண்டார். இவ் ஆய்வு மாநாட்டுக்கென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இளங்கலை மாணவர்களிடமிருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலமைந்த ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்ட்டு, அவற்றிலிருந்து 125 ஆய்வுக் கட்டுரைகள் தெரிவுசெய்யப்பட்டன. தெரிவுசெய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட எட்டு ஆய்வுத் தடங்களில் ஆய்வாளர்களால் அளிக்கை செய்யப்பட்டன.…
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், செல்லுபடியாகும் வீசாவை அவர் வைத்துள்ளாரா என்பதை உடனடியாக விசாரித்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, இன்று (10) உத்தரவிட்டார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (சீ.ஐ.டி) பொறுப்பதிகாரிக்கே மேற்குறிப்பிட்ட உத்தரவை நீதவான் பிறப்பித்தார். சம்பவம் தொடர்பில் சீ.ஐ.டியினர், நீதிமன்றில் தெரிவித்த உண்மைகளை கருத்திற்கொண்ட பிரதான நீதவான், வழக்கை டிசெம்பர் 15ஆம் திகதி அழைப்பதற்கு தீர்மானித்துடன், விசாரணை அறிக்கையை அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் திடீரென சொகுசு கார் ஒன்று தீப்பிடித்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை-கண்டி பிரதான வீதியில் ஆண்டாாங்குளம் பிரதேசத்தில் இன்று (10) பிற்பகல் 2 மணியளவில் குறித்த சொகுசு கார் தீப்பிடித்ததாக தெரியவருகின்றது. குறித்த காரில் சாரதி மாத்திரம் பயணித்திருந்ததாகவும் கார் தீப்பிடித்ததில் கார் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த காரில் ஏற்பட்ட தீப்பரவலை பொது மக்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த காரில் தீப்பரவியமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.