நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் தலைமையில் இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இலங்கை ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும் மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைக்கும் என நம்புவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரத்தை வலுப்படுத்தும் புதிய சட்டமூலமொன்றை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்த நிலையில், அமைச்சரவையின் அங்கீகாரம் விரைவில் பெறப்படும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
Author: admin
உலகில் மது அருந்துவது தொடர்பான தரவரிசையில் இலங்கை 79வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொருளாதார அழுத்தம் காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார். இலங்கையில் அண்மைக்காலமாக மது பாவனை மிகவும் குறைந்துள்ளது. மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வருமானம் குறைவடைந்தமையே இதில் பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
இலங்கையில் குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இவர் கடந்த முதலாம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பிய 20 வயதுடைய இலங்கையர் எனத் தெரிவிக்கப்படுகிறது. விரிவாக்கப்பட்ட நிணநீர் கணுக்கள் மற்றும் சோர்வு உள்ளிட்ட பிற அறிகுறிகளின் காரணமாக அந்த நபர் கொழும்பு ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போதே, அவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவர்களின் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனைகளின்படி, குரங்கு காய்ச்சலுக்கான குறிப்பிட்ட மரபணுக்களை அடையாளம் காண முடிந்ததாகவும் இதனையடுத்து, அவர் தற்போது ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் குறைந்தது 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த அலுவலகம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. இது நாட்டின் சனத்தொகையில் 26 வீதத்திற்கு சமம் எனவும் 96 வீதமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையைத் தயாரிக்க இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் 11 மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 871 குடும்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் 50 கிலோ கிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை வலித்தூண்டல் பகுதியில் உள்ள பற்றைக்காணியன்றில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினரிடம் கஞ்சாவை ஒப்படைத்து, நீதிமன்றின் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சில சீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கொமிஷன் இந்த முடிவை எடுக்க உள்ளது. அதன்படி, Huawei, ZTE, Hytera Communications Corp, Hangzhou Hikvision Digital Technology Co மற்றும் Zhejiang Dahua Technology Co ஆகியவற்றிலிருந்து கையடக்க தொலைப்பேசிகளை மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களின் விற்பனையை தடை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அந்தந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் தொடர்பாக அமெரிக்கா விசேட ஆய்வொன்றை நடத்தியதாகவும், அந்த ஆய்வின் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஊழல் எதிர்ப்பு முன்னணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவை வரக்காபொல பொலிஸார் கைது செய்துள்ளனர். நாமல் குமார ஒரு நாற்காலியில் கட்டப்பட்டிருப்பதைக் காட்டும் பல படங்கள் மற்றும் காணொளிகள்; சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அதே நேரத்தில் ஒரு பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டுவதையும் அந்த காணொளி காட்டுகிறது. பெண் ஒருவர் வரகாபொல பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாமல் குமார கைது செய்யப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது வீட்டிற்குள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார். பின்னர், மேலும் நான்கு பேர் அவரைத் தாக்கியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…
இலங்கையில், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கிரீம் வகைகள் சரும சிக்கல்களை ஏற்படுத்துவதாக தோல் நோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ ஹூலங்கமுன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், சமூகத்தில் பலர் இவ்வாறான முகப்பூச்சுக்களை பயன்படுத்துவதில் முனைப்புடன் இருக்கின்றனர். மேலும் இதுபோன்ற அழகுசாதனப் பொருட்களை முகத்தில் பயன்படுத்துவதால் பருக்கள் மற்றும் தேவையற்ற முடிகள் ஏற்படும். கண்களைச் சுற்றி இதுபோன்ற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் கண் அழுத்தத்தை அதிகரித்து கண்புரை கூட ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. TW முறையான வைத்திய தரத்தில் இல்லாத இவ்வாறான முகப்பூச்சுக்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் விஷத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்மிரர் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு சற்றுமுன்னர் (03) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியது.