தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான திருத்தப்பட்ட கட்டண முறை இன்று (01) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்காக 500 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது. தொலைந்துபோன தேசிய அடையாள அட்டையின் நகலை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். அத்தோடு முதல் தடவையாக தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 200 ரூபாவும், ஒரு நாள் சேவையின் ஊடாக தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 2,000 ரூபாவும் அறவிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருத்தப்பட்ட நகல் மற்றும் நகல்களை வழங்குவதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Author: admin
சிரேஷ்ட மாணவர்கள் குழுவினர் தனக்கு பகிடிவதை அளித்ததாக குறிப்பிட்டு களனி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர், கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று தனது விரிவுரைகளின் பின்னர் விளையாட்டுப் பயிற்சிக்காக பல்கலைக்கழக விளையாட்டு திடலுக்கு சென்று கொண்டிருந்தபோது, சிரேஷ்ட மாணவர்கள் குழுவினால் தான் தாக்கப்பட்டதாக குறித்த மாணவர் முறைப்பாடு செய்துள்ளார். தாக்குதலின் போது சம்பவ இடத்தில் 7 மாணவர்கள் இருந்ததாகவும், அவர்கள் பெயர் தெரியவில்லை எனவும், நேரில் பார்த்தால் அடையாளம் காண முடியும் எனவும் சம்பந்தப்பட்ட மாணவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மாணவனை ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை, தொடர்புடைய மாணவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுத்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
பயணிகள் போக்குவரத்தில் மாத்திரம் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டிற்கான பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடு முதற்கட்டமாக இன்று முதல் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://wptaxi.lk/ எனும் முகவரிக்குள் பிரவேசித்து, கூடுதல் எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோக ஒதுக்கீடு 5ல் இருந்து 10 லீற்றராக அதிகரிக்கப்பட்டதன் பின்னர் அனைத்து முச்சக்கர வண்டிகளும் மீள் பதிவு செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அதன்படி முச்சக்கர வண்டிகளுக்கான பதிவு இன்று முதல் இணையத்தளத்தின் ஊடாக இடம்பெறவுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், குறித்த திட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி முதல் ஏனைய மாகாணங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க…
அரச சேவையின் கெளரவத்தை பேணும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிக விலை கொடுத்து சேலைகளை வாங்குவதில் சிக்கல் நிலவி வருவதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்தோடு, போக்குவரத்து சிரமம் காரணமாக ஆசிரியர்கள் பலர் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் பாடசாலைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, புடவை அல்லது ஒசரியைவிட எளிதான எளிய உடையை அணிவதன் மூலம் ஆசிரியர்களால் மாணவர்களை கையாள்வதில் திறமையாக செயற்பட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு 43,200 கோடி ரூபாயும், கல்விக்காக 50,400 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார். இது தவிர பாதுகாப்புச் செலவுகளுக்காக 36,700 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார். மேலும், சமூகப் பாதுகாப்பிற்காக 57,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அரச வருமானத்தை 8.5 வீதத்தில் இருந்து 13 வீதமாக அதிகரிக்கவும், அரச வருமானத்தில் 90 வீதத்தை வரி மூலம் பெறவும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறினார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனங்கள் 788,500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2019 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த வழக்கில் இருந்து இராஜாங்க அமைச்சர் உட்பட 4 பேரையும் நேற்று (31) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் விடுவித்து விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியான ஆசாத்தின் உடற்பாகத்தை கள்ளியன்காடு இந்து மயானத்தில் பொலிஸாரால் புதைக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 திகதி இராஜாங்க அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டு கல்லடி பாலத்தினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்ப்பாட்கார் மீது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி அடித்து வெளியேற்றினர். இந்த…
தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்நிலப் பகுதிகளில் இருக்கின்ற மக்களின் வீடுகள் கடைகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதோடு உரிய வடிகாலமைப்பு இல்லாமையால் வெள்ளம் வடிந்தோடாமல் இருப்பதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உரிய வடிகாலமைப்பு இல்லாமையால் கடைகள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனை விட தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலை தொடருமானால் அதிக பாதிப்புகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது. இதனால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி நாளை (02) தெல்லிப்பழையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்பு போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், வடகிழக்கில் தொடர்சியாக காணி சுவீகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளது. இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். அந்தவகையில் வலி வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி போராடவேண்டிய தேவையுள்ளது. ஆகவே தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கூடிய மதகுருமார், சிவில் அமைப்புக்கள்,அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரையும் கட்சி பேதமின்றி பங்கெடுக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
13 பால்மா பொதிகளை திருடிய வெளிநாட்டவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறைத்தண்டனை பதினைந்தாயிரம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 13 பால்மா பொதிகளை திருடிய வெளிநாட்டவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவருக்கு 1500 ரூபா அபராதம் விதித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார். கொழும்பில் உள்ள தனியார் வர்த்தக வளாகத்தில் பால் மா பொதிகளை திருடிய குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சிய பிரஜையான குறித்த சந்தேகநபர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிவான் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.