Author: admin

பெண் ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தனுஷ்க்க குணதிலக்க கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து விளையாட்டு வீரர்களின் நடத்தைகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்

Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய யாசகர் ஒருவரின் இடுப்பில் இருந்து ஒரு இலட்சம் ரூபாய் கீழே விழுந்த சம்பவமொன்று ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அவருக்கு ஐந்து வங்கிகளில் கணக்கு இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த வங்கி புத்தகங்களும் அவரிமிருந்து மீட்கப்பட்டன. கொழும்பு-புத்தளம் பிரதான வீதியில் ஆராச்சிக்கட்டுவ ஆனவிழுந்தாவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் வைத்தே, மோட்டார் சைக்கிளுடன் அந்த யாசகர் மோதுண்டு, கீழே விழுந்துவிட்டார். அதன்பின்னர், தனது இடுப்பி​ல் வைத்திருந்த பணத்தாள்களும் கீழே விழுந்துவிட்டன. அவர் வைத்திருந்த பையை சோதனைக்கு உட்படுத்திய போது, ஐந்து வங்கிகளின் கணக்குப் புத்தகங்களும் இருந்துள்ளன. ​அவற்றை மீட்டெடுத்த அங்கிருந்த இளைஞர்கள், அனைத்தையும் ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். விபத்துக்கு உள்ளான 65 வயதான யாசகர் கடும் காயங்களுக்கு இலக்கான நிலையில் ஆனவிழுந்த வைத்தியசாலையில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் ஏனைய இளைஞர்களும் அனுமதித்துள்ளனர். அவரிமிருந்த நாணயக்குற்றிகள் உள்ளிட்ட நாணயத்தாள்களை எண்ணுவதற்கு இரண்டு மணிநேரம் எடுத்தது என இளைஞர்கள்…

Read More

முல்லைத்தீவில் அளம்பில் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தாத்தா முறையான ஒருவர் திருமணமான பெண்ணை காரில் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணொருவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. எனினும், சிறிது காலத்தில், குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தனது 23 வயதான மனைவிக்கும், மனைவியின் நெருங்கிய உறவினரான 63 வயதான தாத்தா முறையான நபருக்குமிடையில் காதல் தொடர்பு இருப்பதாக பெண்ணின் கணவன், சுமார் ஒரு மாதத்தின் முன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். கனடாவில் வசித்த அந்த முதியவர் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவின் பிறிதொரு பகுதியில் வசிப்பவர். கனடாவில் நீண்டகாலம் வசித்தவர், தற்போது முல்லைத்தீவில் வசித்து வருகின்றார் பொலிஸார் அந்த இளம்பெண்ணை அழைத்து விசாரித்த போது, 63 வயதான காதலனுடனேயே வாழப் போவதாக தெரிவித்தார். எனினும், பொலிஸார் அந்த பெண்ணிற்கு அறிவுரை கூறினர்.…

Read More

2021ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்த மாத இறுதிக்குள் பரீட்சை பெறுபேறுகளை வௌியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களில் 517,486 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

Read More

அரசியலமைப்பின் 44/3 சரத்தின்படி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அரசியலமைப்பின் 44/3 ஆவது சரத்தின் பிரகாரம் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். இதன்படி, பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள், தேசிய கொள்கை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு மற்றும் பல அமைச்சுக்களை ஜனாதிபதி தமது பொறுப்பில் வைத்திருப்பதற்கு 44/3 ஆவது பிரிவின் பிரகாரம் பிரதமரின் உடன்பாட்டைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி எழுத்து மூலம் கோரியுள்ளார். அதன்படி, அரசியலமைப்பின் 44/3 ஆவது பிரிவின்படி பிரதமர் அதற்கு தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

Read More

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் முன்னெடுக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த கடன் உதவி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தாமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவின் அடுத்த சந்திப்பு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ளமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது. அதுவரையான காலப்பகுதியினுள் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்திருக்க வேண்டும் என்பதுடன், அதன் முன்னேற்றத்தை இந்த சந்திப்பில் அறிவித்து, அனுமதியைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இடம்பெறாவிடின், இந்த உதவித் தொகையைப் பெறுவதில் மேலும் கால தாமதம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பேராதனை பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று சமூக வலைத்தளங்கள் ஊடாக புதிய மாணவர்களை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸாரும் பல்கலைக்கழக ஒழுக்காற்று திணைக்களமும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். புதிய மாணவர் ஒருவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதம ஒழுக்காற்று அதிகாரியிடம் செய்த முறைப்பாட்டையடுத்து,அவர் சம்பவம் தொடர்பில் நேற்று (05) பொலிஸில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். புதிய மாணவர்களின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு வட்ஸ்அப் குழுவை உருவாக்கி, ஆபாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் ஆபாச இணையத்தளங்களின் முகவரிகளை அனுப்புவதன் மூலம், புதிய மாணவர்கள் அவற்றைப் பார்க்கவும் பதிலளிக்கவும் வற்புறுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read More

வவுனியா – நொச்சிமோட்டையில் நேற்று (05) அதிகாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் மரணமடைந்துள்ளார். பருத்தித்துறை தம்பசிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (25) என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்தவராவார். வெளிநாட்டு பயண ஏற்பாட்டுக்காக குறித்த அதி சொகுசு பேரூந்தில் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேளையிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் இவ் இளைஞன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

அடுத்த வருடம் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். கால்நடை தீவன இறக்குமதி குறைவடைந்தமை மற்றும் கடந்த பருவத்தில் நிலவிய பொருளாதார சிரமங்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஒரு முட்டை 50 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலையில், தற்போது ​​ஒரு சில கடைகளில் 53 ரூபாய்க்கு முட்டை விற்கப்படுகிறது. இந்த நிலைமையை எதிர்கொண்டு நுகர்வோர் முட்டைகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி ஞாயிற்றுக்கிழமை (06) பயணித்துக்கொண்டிருந்த இரவு தபால் ரயிலின் உறங்கும் பெட்டிக்கு பொறுப்பாகவிருந்த ரயில் பணியாளர், மதுபோதையில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் ரயில் பாதுகாப்பு இராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ரயிலின் பிரதான கட்டுப்பாட்டாளர் அனுராதபுரம் ரயில் நிலைய கட்டுப்பாட்டு காரியாலயத்துக்கு அறிவித்ததன் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யும் போது அவரிடம் மதுபானம் நாற்றம் வீசியுள்ளது. கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை அனுராதபுரம் நீதிமன்ற வைத்தியரிடம் ஆஜர்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது மதுபானம் அருந்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ரயில் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

Read More