ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது, காயமடைந்த 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். அவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். https://youtube.com/shorts/tnI6bLwENH0
Author: admin
எரிபொருட்களின் விலை, கோதுமை மா உயர்வை கருத்திற்கொண்டு மதியநேர உணவுப்பொதி மற்றும் கொத்து ரொட்டியின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்த அதிகரிப்புடன் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படுமென உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை பாடசாலைக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்கள் கறுப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவிப்பதுடன் இடைவேளையின் போது பாடசாலைக்கு வெளியே சென்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுவார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
🔥 *Breaking news* 🔥 இன்று(19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேரூந்து கட்டணங்கள் 35% அதிகரிக்கப்படும், குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபா – தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம்
முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி ஆகியோர், இலங்கை மக்களின் நிதியைப் பயன்படுத்தி அமெரிக்காவில் சொத்துகளை சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அமெரிக்காவின் FBI (Federal Bureau of Investigation) நிறுவனத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களால் அவ்வாறு சேகரிக்கப்பட்ட சொத்துகளை நியாயப்படுத்த அவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதில்லை என்றும் எனவே, இந்த விடயம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு தெரிவித்து, FBI நிறுவனத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் முஷாரப் பதவியேற்பு. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்றையதினம் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம், நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் முஷாரப் நியமிக்கப்பட்டுள்ளார். பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்.கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். புதிய அமைச்சரவையை நியமிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என தாம் நம்பவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
🔥 *Breaking news* 🔥 மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 1 கிலோ பிரீமா கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும்இப்தார் நிகழ்வும் ( எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும், இப்தார் நிகழ்வும் கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் முர்ஷித் முபாரக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வினை ஆரம்பித்து வைக்கும் முகமாக முதலில் அமைப்பின் தலைவர் முர்ஷித் முபாரக்கின் தலைமை உரை இடம்பெற்றது. பின்னர் இப்தார் நிகழ்வு இடம்பெற்றதுடன், தொடர்ந்து, அதிதிகளின் உரை,பொருளாலரால் கணக்கறிக்கை சபையோர் முன்னிலையில் வாசிக்கப்பட்டதுடன், 2020 ஆம் ஆண்டு கல்முனை பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் முகமாக சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்க்கான புதிய நிருவாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது இதன் போது தலைவராக எல்.எம்.எம்.அன்சாப் அஹமட்,செயலாளராக எம்.எப்.ராசில் அஹமட், பொருளாலராக அஷ்ரப் முஹம்மட் வாபி உட்பட நிருவாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர் இறுதியாக அமைப்பின் புதிய செயளாலரால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு நிகழ்வுகள் முடிவடைந்தது. …
பாராளுமன்ற நுழைவு வீதி தியத்த உயனவிற்கு அருகில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத.