உயர்தரப் பரீட்சை முடியும் வரை உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்துவது மற்றும் மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி நடுப்பகுதி வரை நடத்தப்படவுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் இந்த விடயத்தை முன்வைத்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், குறித்த காலக்கெடு நவம்பர் 30ஆம் திகதியிலிருந்து மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த காலக்கட்டத்தில் அபராதம் விதிக்கப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வருமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு ஆசிரியரின் சம்பளத்தில் 15 சதவீதம் கல்வி அமைச்சின் ஆடைக் குறியீட்டிற்கு இணங்க புடவைகள் மற்றும் அது தொடர்பான ஆடைகளை வாங்குவதற்கு செலவிடப்படுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானின் கியூஷூ பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டதாரியான லஸ்னி புத்திபாஷிகா ஜயசூரிய நடத்திய ஆய்வில், இலங்கையில் ஆசிரியர்கள் தங்களது சம்பளத்தில் கணிசமான பகுதியைத் தங்கள் ஆடைகளுக்காக மட்டுமே செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர்கள் சேலைக்காக நிறைய பணம் செலவழிக்கிறார்கள் என்றும் ஒரு ஆசிரியரின் சம்பளத்தில் 15வீதம் சேலை தொடர்பான செலவுகளுக்கு செலவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் இலங்கைப் பெண் ஆசிரியர்களின் ஆடைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். புடவை என்பது ஆறு யார் துணி மட்டுமல்ல அதற்கு புடவை ஜாக்கெட், லைனிங் துணி, தையல் கட்டணம், புடவைக்கு ஏற்ற கீழ்பாவாடை மற்றும் காலணிகள் என்பனவும் வாங்க வேண்டுமென அவர் விளக்கியுள்ளார். மேலும் புடவையை துவைப்பது,…
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு அல்-ஹஸன் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒமர் அல்-முஹாஜர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவின் போது, ‘கடவுளின் எதிரிகள்’ என்று அழைக்கப்படுபவர்களுடன் சண்டையிடும் போது கொல்லப்பட்டதாகக் கூறினார். ஆனால் அவர் மேலதிக விபரங்களைத் தெரிவிக்கவில்லை. ஒக்டோபர் நடுப்பகுதியில் தென்மேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர் சுதந்திர சிரிய இராணுவத்தின் நடவடிக்கையில் அபு அல்-ஹஸன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் வடமேற்கு சிரியாவில் அமெரிக்க படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது, ஐ.எஸ். அமைப்பின் அப்போதைய தலைவர் அபு இப்ராஹிம் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அபு அல்-ஹஸன் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார். இப்போது அவரும் கொல்லப்பட்டது அந்த அமைப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருடைய கொலைக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. அபு அல்-ஹாசனைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டது, அவர் தலைவராக தனது பெயரில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்தநிலையில், அமைப்பின் அடுத்த தலைவராக அபு அல்-ஹூசைன்…
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள் அந்த விடயத்தில் நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை தக்கவைத்துக்கொள்வதில் அச்சுறுத்தல் ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ‘கோப் 27’ உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியல்மயப்படுத்தலும் காலதாமதமுமே ‘கோப் 27’ மாநாட்டின் வெற்றிக்கு மிகப்பெரும் தடை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். மிகப்பெரிய சேதத்திற்கு வரலாற்று ரீதியாக பொறுப்புக்கூற வேண்டிய நாடுகள் மற்றும் அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கக்கூடிய நாட்டு தலைமைகள் சமூகமளிக்காமையானது, காலநிலை தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இடம்பெற்று வரும் பேரழிவுகளை வரும் முன்னரே தடுப்பதற்காக 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி எனும் இலக்கை அடைவதனை கருத்திற்கொண்டு நாம் முயற்சி செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய செயற்திட்டங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வருட பணிக்கான ஒப்புதல் முத்திரையாக…
நாட்டில் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை : காலியில் இருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என…
பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஒரக்சாய் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தில் 9 உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது சுரங்க இடிபாடுகளில் இருந்து 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கனிம வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழு, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த நிலையில், எரிவாயு தீப்பற்றியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் கூற்றுப்படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15.3வீதமாக அதிகரித்துள்ளது. கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் கௌசல்யா கஸ்தூரியாராச்சி இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளின் வளர்ச்சி குன்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, நாட்டில் 21 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்னதாக தெரிவித்திருந்தார். இந்த எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் உட்பட பல பிரிவுகளுக்கான வீசா கட்டணங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வீசாக்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட ஏனைய கட்டணங்களை அதிகரித்துள்ளது. அதன்படி, இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமை பெறும் 22 வயதுக்குட்பட்ட மனைவி அல்லது குழந்தைக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 500 டொலர்களாக திருத்தப்பட்டுள்ளது. குடியுரிமையின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்லைனில் மின்னணு பயண அங்கீகாரத்தைப் பெறுவதற்கான கட்டணம் 50 டொலராகவும் வணிகங்களுக்கு 55 டொலராகவும் திருத்தப்பட்டுள்ளது. இலங்கையர் அல்லாத வாழ்க்கைத் துணையை சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கான வீசா வழங்குவதற்கான கட்டணம் 150 டொலராக இருக்கும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்றது. இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் அதன் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஆளணிப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடிகள் தொடர்பில் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். கிடைக்கப்பெறும் வளங்களை திறம்பட பயன்படுத்தி அதிகபட்ச நன்மைகளை பெற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எழுந்துள்ள பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தியசாலையின் பணிகளை தொடர்வதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.