(வீரகேசரி) மனைவி தன்மீது வீண்பழி சுமத்தினார் என்பதற்காக அவரது கணவன் தனது ஆணுறுப்பைக் கூரிய ஆயுதத்தால் அறுத்துக்கொண்ட சம்பவம் ஒன்று பொல்பித்திகமவில் இடம்பெற்றுள்ளது. பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த நபர், சனிக்கிழமை (நவ.26) மாலை வெளியே சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது அவரது மனைவி வழிதவறிய நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி கணவர் மீது குற்றம் சுமத்தியபோது அவர் வீண் பழி சுமத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். பின்னர் அவர் தனது ஆணுறுப்பை வெட்டியுள்ளார். இந்தநிலையில், வெட்டுக்காயங்களுடன் பொல்பிதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Author: admin
தமது கற்றல் கால எல்லையை கடந்துள்ள 05 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தங்கியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது சட்டவிரோத செயல் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அவ்வாறான மாணவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துணை வேந்தர்களுக்கும் அவர் குறிப்பிட்டார்.
(எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை வலயக்கல்வி பிரிவில் உள்ள கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்திலிருந்து கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் என்.எம்.நப்றத் என்ற மாணவன் 9A சித்திகளைப் பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் கடந்த வருடம்(2021ம் ஆண்டு) முதன்முதலாக க.பொ.த சாதரண தர பிரிவு ஆரம்பிக்கப்பட்டதுடன் அண்மையில் க.பொ.த சாதரண தர பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் மாணவன் என்.எம்.நப்றத் அனைத்து பாடங்களில் 9A சித்தி பெற்று பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதோடு மற்றுமொரு மாணவி எஸ்.எச்.பாத்திமா ஹிறா 7A ,2B என்ற சித்தியயைப் பெற்றதுடன் அதிகமான மாணவர்கள் திறமை மிக்க சித்திகளையும் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் தெரிவித்தார். க.பொ.த (சா/த) பிரிவை ஆரம்பிப்பதில் அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்கள் எடுத்தமுயற்சியும், அவரோடு இணைந்து இவ் வெற்றிக்காக அயராது உழைத்த, பாடசாலை ஆசிரியர்கள்,பாடசாலை…
(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்) டயக்கோனியா சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு மற்றும் குடும்பத்தில் பெண்கள், சிறார்கள் மத்தியில் தாக்கம் குறித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக செயற்பாட்டளர்களுக்கான பயிற்சி பட்டறை கல்முனையில் இன்று இடம்பெற்றது. முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் மாவட்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல். ஹபீலா இணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் வளவாளர்களாக சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.பி.அப்துல் சுக்கூர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேலும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அம்பாறை மாவட்ட கணக்காளர் ஆர். அனுஸ்கா உட்பட இளம் ஊடகவியலார்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் எதிர்கால நிகழ்வுகளை கருத்திற் கொண்டு இளம் ஊடகவியலாளர்கள் வலையமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின் ஐந்தாம் நாள் இன்று திங்கட்கிழமை நவம்பர் 28 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. வெளிவிவகார அமைச்சுக்கள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் ஆகிய அமைச்சுக்களின் செலவினம் குறித்து விவாதம் இடம்பெறவுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 23 புதன்கிழமை அன்று ஆரம்பமானது. கடந்த சனிக்கிழமை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் குறித்து விவாதம் இடம்பெற்றது. குழுநிலை விவாதம் டிசம்பர் 8 ஆம் திகதி வரை 13 நாட்கள் நடைபெறும் என்பதோடு இறுதிநாள் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
பாரியளவு பால்மாவை வெளியிடுவதற்கு சுங்கத் திணைக்களம் தடையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார். 4 இலட்சம் கிலோ கிராம் பால்மா அடங்கிய 17 கொள்கலன்கள் கடந்த ஒருமாதத்துக்கும் மேல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய அண்மையில் தெரிவித்திருந்தார். இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை சுங்கம் மறுத்துள்ளது. அந்நிய செலாவணியை சட்டவிரோதமாக கையாள்கின்றமை குறித்து பால்மா நிறுவனங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் தற்போதும் முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணையை சீர்குலைக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, டொலர் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளால் பால்மா இறக்குமதி…
ஹிட்லர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் ரணில் தன்னை ஹிட்லர் எனக் கூறுவதைப் பார்த்து மீண்டும் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையும் இருந்தாலும் கூட ரணிலுக்கு மக்கள் ஆதரவு இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் ரணில் எனவும் கடுமையாக சாடினார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் ஒரு ஹிட்லர் எனக் கூறும்போது உண்மையில் சிரிப்புதான் வருகிறது. பாராளுமன்றத்தில் எழுந்து காற்சட்டையை இரு தடவைகள் தூக்கிப்பிடித்துகொண்டு ஹிடலர் என கூறினால் சிரிப்பு வராமல் வேறு என்ன வரும்? எனவும் தெரிவித்தார். உண்மையில் ஹிட்லர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவர். ஹிட்லர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் மீண்டும் ஒருமுறை தன்னைத் தானே சுட்டுகொண்டு உயிரிழந்திருப்பார் எனவும் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி நாளை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
கல்வி பொதுத் தரா தர சாதாரணப் பரீட்சைக்கு முதன்முறையாகத் தோற்றிய மாணவர்களில் 75 சதவீமான மாணவர்கள் கல்வி பொதுத் தரா தர உயர்தரத்துக்கு தோற்ற தகுதியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். அதன்படி நாடளாவிய ரீதியில் முதற் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்பட்டியலை பரீட்சைகள் திணைக்களம் வௌியிடப்போவதில்லை. சாதாரணத்தரப் பரீட்சையில் எந்தவிதமானப் போட்டிகளும் இல்லை. அதனால் முதற் 10 இடங்களை பிடித்த மாணவர்களை அடையாளங்காண்பதற்கு அவசியம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.