ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் கண்டி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட…
Author: admin
(எம்.என்.எம்.அப்ராஸ்,நூருல் ஹுதா உமர்) அண்மையில் வெளியாகிய க.பொ.த.(சா/த)ப் பரீட்சை பெறுபேறுகளின் அனைத்துப் பாடங்களிலும் 9A சித்திகளைப் பெற்ற கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவன் என்.எம். நப்றத் மற்றும் 7A,2B பெற்ற மாணவி எஸ்.எச்.எப்.ஹீறா ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்துக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் சஹுதுல் நஜீம் இன்று(28) நேரில் சென்று மாணவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்ததுடன் மலர் மாலை அணிவித்து கௌரவித்துப் பாராட்டினர். இதன் போது பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிஸாத்,பாடசாலையின் பிரதி அதிபர்,உதவி அதிபர், பகுதித் தலைவர்கள் சித்தி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். பாடசாலையில் முதன்முதலாக க.பொ.த சாதரண தரப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் (2021) மாணவன் என்.எம்.நப்றத் அனைத்துப் பாடங்களிலும்9A சித்தி பெற்று பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதோடு மற்றுமொரு மாணவி எஸ்.எச்.பாத்திமா ஹீறா 7A ,2B என்ற சித்தியயைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது குறித்த…
(யூ.எல்.அலிஜமாயில்) கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் இவ்வருடம் வெளியான க.பொ.த (சா/த) பரீட்சையில் 9A பெற்று வரலாறு சாதனை படைத்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (28) கல்முனை அல் பஹ்ரியா பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகவில் பாடசாலை அதிபர் எம்.எஸ் பைசால், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி(LLB),மற்றும் உறுப்பினர்கள் பாடசாலையின் பிரதி,உதவி அதிபர்கள்,ஆசிரியர்கள்,நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஊழியர்களுக்கு அண்மையிலுள்ள பணி இடங்களுக்கு இடமாற்றம் வழங்கும் முறையான செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக அகில விராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பம்பலப்பிட்டியில் உள்ள ATM இயந்திரமொன்றிலிருந்து 400,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபர் 10 ATM அட்டைகளுடன் வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ATM அருகே இருந்த சிசிடிவி கெமராவில் பதிவான காட்சிகள் மூலம் சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். தொம்பே பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் டிசம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகரை ஒரு இலட்சம் ரூபாயைஅபதாரமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல், உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நுகர்வேர் அதிகாரசபை உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையிலான குழுவினர் சம்பவதினமான வியாழக்கிழமை (24) திகதி திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது அரசாங்கம் அறிவித்த முட்டையின் விலை 50 ரூபாயாக இருந்தபோது அதனை மீறி வர்த்தகர் ஒருவர் 60 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்து வந்த நிலையில் அவரை பிடித்ததுடன் அவருக்கு எதிராக உடனடியாக அன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை அபதாரமாக ஒரு இலட்சம் ரூபாய் செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்தர்;. இதேவேளை முட்டையின் கட்டுப்பாட்டுவிலை 50 ரூபாயாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் மொத்த வியாபரிகளிடமிருந்து 58 ரூபாய்குத்தான் முட்டையை…
வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனக் கூறும் ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானது என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கக்கூடிய தீர்வு இதுவல்ல என குறிப்பிட்டுள்ள அவர், முதலில் நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமது வாழ்க்கை தற்போது பாரியதொரு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே நாட்டு மக்கள் போராடுகிறார்கள் என்பதை அரசாங்கமும் ஜனாதிபதியும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டால் ஹிட்லர் போன்று செயற்படுவது தீர்வாக அமையாது என குறிப்பிட்ட ஹிருணிகா, அவ்வாறு பயணித்தால் நீண்டகாலம் ஆட்சியை நடத்த முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
இன்று (28) மற்றும் நாளை நவம்பர் (29 ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, பிற்பகல் வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் ரத்நாயக்க கூறியுள்ளார்.
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தொன்று சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (27) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், வெலிகம, ரனாலல, திஸ்ஸமஹாராம, கனங்கே, தெலிஜ்ஜவில, வங்சாவல மற்றும் பெலியத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறி அம்பலங்கொடை பட்டபொல அளுத்வல பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஒருவரது மரணம் கொலை என தெரியவந்ததை அடுத்து, கொலையுடன் தொடர்புடைய அவரது ஒரே மகள் மற்றும் 23 வயதான இளைஞனை தாம் கைது செய்துள்ளதாக பட்டபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடல் அடக்கம் செய்யப்பட்டு 7 நாட்களில், பாடசாலை கல்விசார ஊழியரான பெண்ணே இவ்வாறு கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தையின் வங்கிக்கணக்குகளில் இருக்கும் சுமார் ஒரு கோடி ரூபா பணம் மற்றும் காணிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மகள், 23 வயதான இளைஞனை பயன்படுத்தி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தந்தை மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறி மகள், தந்தை இருதய நோய்க்காக எடுத்துக்கொண்ட மருந்துகள், ஆவணங்களை எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு வந்து அழுது புலம்பியவாறு கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் மரண பரிசோதனைக்கு சென்ற பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு ஏற்பட்ட…