Author: admin

மழை காரணமாக விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. “நெற்செய்கையில் ஈடுபடும் போது சிறுநீரக நோயாளர்கள் மற்றும் கல்லீரலுடன் தொடர்புடைய நோய் தொற்றுக்குள்ளானவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். வயல்களை அண்மித்த பகுதிகளில் துப்பரவு பணிகளில் ஈடுபடும் போது அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர், குறித்த பகுதிகளிலுள்ள சுகாதார பணிமனைகளில் தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More

அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, எந்தவொரு பாடங்களிலும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக உள்ளதென தெரிவிக்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த 6 ஆயிரம் மாணவர்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியது யார் எனவும் சபையில் கேள்வி எழுப்பினார். கல்வி அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுகளுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் நேற்று (1) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும்போது பொறுத்தமான ஆசிரியர்களை மாற்றீடு செய்துவிட்டே இடமாற்றம் வழங்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் உரையாற்றும் அனைவரும் அதிபர், ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினை, கொடுப்பனவு பிரச்சினைகள் தொடர்பில் பேசுகிறார்கள். நடைபெற்று முடிந்த சாதாரணதரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாத 6 ஆயிரம் மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு யார் பொறுப்புக் கூறுவது? 11 வருடங்கள் பாடசாலைகளில் கற்று எந்தவொரு பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு?…

Read More

இந்தியாவின் இந்தூர், பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் வைத்தியசாலை அருகே வசிக்கும் அலோக் மோடி. என்பவர் பொலிஸ் நிலையத்தில் சேவல் மீது முறையாடு அளித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், எனது அயல் வீட்டில் உள்ள ஒரு பெண் ஒருவர் கோழி, சேவல் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அந்த சேவல் கோழிகள் தினமும் அதிகாலை தவறாது 5 மணிக்கெல்லாம் கூவுகிறது. இதனால் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்றபோது சேவல் கூவி தூக்கத்தைக் கலைத்து விடுகிறது. அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்நிலையில்,அலோக் மோடியின் முறைப்பாட்டை உறுதிபடுத்திய பலாசியா பொலிஸ் நிலைய பொறுப்பாளர், இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையைப் பின்பற்றுவோம். பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

Read More

பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த சட்டமூலத்தை உருவாக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், அரச மற்றும் தனியார் துறைகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய சட்டமூலத்தின் ஊடாக தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக் குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கையின் முதலாவது அரச சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2 வீதமாக இருந்ததாகவும், சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு 91 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.3 வீதம் மட்டுமே எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (01) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். 90 வருடங்களாக இரண்டு வீதத்தை…

Read More

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் உள்ள உக்ரைன் தூதரகத்தில் கடித வெடிகுண்டு வெடித்ததில் ஊழியர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் உள்துறை மற்றும் இராணுவ அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், நேற்று மேட்ரிட் நகருக்கு வெளியே உள்ள ஜாரகோசா நகரில் விமானப்படை தளத்தில் கடித வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தொழிற்சாலையில்தான் கையெறி குண்டு லோஞ்சர்கள் தயாரிக்கப்பட்டு உக்ரைனுக்கு அனுப்பப்படுகின்றன. உக்ரைன் தூதரகத்தில் வெடித்த கடித வெடிகுண்டும், விமானப்படை தளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கடித வெடிகுண்டும் ஒரே நபரால் அனுப்பப்பட்டது என தெரிய வந்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read More

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு Tik Tok காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இன்று (01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார். அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரை சேர்த்தனர்.

Read More

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 22 திகதி வரை இடம்பெறும். பின்னர், எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதேவேளை, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறும். தொடர்ந்து, ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.

Read More

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று(01) மாலை அல்லது நாளை(02) காலை வெளியிடப்படும் என்று உயர்க் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றியபோது இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுப் பெற்றுள்ளதாக அவர் கூறினார். வெட்டுபுள்ளிகளின் அடிப்படையில் சுமார் 44 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Read More

(மாளிகைக்காடு, கல்முனை நிருபர்கள்) பாடசாலையில் முதன்முதலாக க.பொ.த சாதரண தரப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அன்மையில் வெளியான க.பொ.த.(சா/த)ப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்துப் பாடங்களிலும் 9ஏ சித்தியை பெற்று கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவன் என்.எம். நப்றத் மற்றும் 7ஏ ,2பீ சித்தியை பெற்ற மாணவி எஸ். எச்.எப். ஹீறா ஆகியோர் சாதனை புரிந்திருந்தனர். இவர்களை பாராட்டி கெளரவிக்கும் ஊர்வலம் பாடசாலை அபிவிருத்தி குழு, முகாமைத்துவ குழு, பழைய மாணவர்கள் சங்கம், பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிஸாத் தலைமையில் இன்று (2022.11.30) இடம்பெற்றது. கல்முனை வலயக் கல்வி அலுவலக முன்றலில் இருந்து கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் மாணவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்து மலர் மாலை அணிவித்து கௌரவித்துப் பாராட்டி இந்த ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார். கல்முனை மாநகரப் பிரதேசங்களில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட மாணவர்களுக்கு முன்னாள் இராஜாங்க…

Read More