Author: admin

நாட்டில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை உடனடியாக நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் உத்தரவின் பேரில் இடம்பெறும் இந்த பரீட்சையை அடுத்து 26,000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் இவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர மேலும் 6,000 கல்வி பீடத்தில் பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Read More

போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இன்று (திங்கட்கிழமை) கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை மீட்பது தொடர்பில் இங்கு விவாதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் 200 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அண்மையில், மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நோயாளிகளைப் பாதுகாப்பதற்காக இந்த வார ஆம்புலன்ஸ் வேலைநிறுத்தத்தின் போது போதுமான பணியாளர்கள் இருப்பதை தொழிற்சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும் என சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே தெரிவித்துள்ளார். ஊதியம் தொடர்பான சர்ச்சையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள தொழிலாளர்கள் நாளை மறு தினம் (புதன்கிழமை) வெளிநடப்பு செய்வார்கள், ஆனால் உயிருக்கு ஆபத்தான அவசரநிலைகளுக்கு பதிலளிக்கப்படும். பாதுகாப்பிற்கான விரிவான திட்டங்களை வரைவதற்கு ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகளுடன் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. ஆனால், உயிருக்கு ஆபத்தான அவசரநிலைகளின் போது, என்ன சேவைகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து தெளிவு இல்லை என சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே தெரிவித்துள்ளார். நெருக்கடியில் உள்ள மக்கள் தங்களுக்குத் தேவையான கவனிப்பைப் பெறுவதற்கு, அவசரகால பாதுகாப்புக்கான தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதை தொழிற்சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read More

தரம் 3இல் கல்விப்பயிலும் பிள்ளையொன்று குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கும் தனக்கும் இடையூறு விளைவித்து இடைஞ்சலாக இருப்பதாக பொலிஸ் அவரச சேவை தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பை எடுத்த அந்த பிள்ளையின் தாய், தனது பிள்ளைக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த முறைப்பாட்டுக்கு அமைய தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் இருவர், இரவு வேளையில் சுமார் ஒன்பதுக்கும் 15க்கும் இடைப்பட்ட கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் முறைப்பாட்டாளரின் வீட்டை தேடிச் சென்றுள்ளனர். தங்களுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திய பொலிஸார், சத்தம்போட்டு கூப்பிட்டபோதும், சில வினாடிகள் அந்த வீட்டிலிருந்து எவருமே வெளியே வரவில்லை. வீட்டின் கதவை தட்டிய போது அந்த வீட்டின் கதவை திறந்துகொண்டு பெண்ணொருவர் வெளியே வந்துள்ளார். “பிள்ளையினால் பெற்றோருக்கு கடுமையான தொந்தரவு என செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக வந்து​ள்ளோம்” என பொலிஸார் இருவரும் அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். “ஐயோ, நன்றாகவே சுணங்கிவிட்டது. அந்தப் பிள்ளை இப்போது…

Read More

வட கொரியா முக்கியமான, இறுதி கட்ட சோதனையை நடத்தியதாக, கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் வட பியோங்கன் மாகாணத்தில் உள்ள சோல்சானில் உள்ள சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த சோதனையை நடத்தியது. பல கேமராக்கள், இமேஜ் டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் ரிசீவர்கள், ஒரு கட்டுப்பாட்டு சாதனம் மற்றும் சேமிப்பக பேட்டரி உட்பட, சோதனை-துண்டு செயற்கைக்கோள் என்று விபரிக்கப்படும் ரொக்கெட், 500 கிமீ (311 மைல்) உயரத்திற்கு மாடப்பட்ட கோணத்தில் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையானது செயற்கைக்கோள் இமேஜிங் திறன்கள், தரவு பரிமாற்றம் மற்றும் தரைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ‘விண்வெளி சூழலில் கெமரா இயக்க தொழில்நுட்பம், தகவல் தொடர்பு சாதனங்களின் தரவு செயலாக்கம் மற்றும் பரிமாற்ற திறன், தரைக் கட்டுப்பாட்டு அமைப்பின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு துல்லியம்…

Read More

இந்த குளிர்காலத்தில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எதிர்பார்க்கப்படும் மூன்று அலைகளில் முதல் அலையை சீனா அனுபவித்து வருவதாக சீனாவின் உயர்மட்ட சுகாதார அதிகாரி ஒருவர், தெரிவித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் அதன் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதிலிருந்து நாடு தொற்றுகளின் அதிகரிப்பைக் காண்கிறது. சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான புதிய தினசரி தொற்றுகளைக் காட்டுகின்றன. இருப்பினும், கொவிட் பரிசோதனையில் சமீபத்திய குறைப்பு காரணமாக இந்த எண்கள் குறைத்து மதிப்பிடப்பட்டதாக கவலைகள் உள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 2,097 புதிய தினசரி கொவிட் தொற்றுகளை மட்டுமே அரசாங்கம் பதிவு செய்துள்ளது. தொற்றுநோய்களின் தற்போதைய அதிகரிப்பு ஜனவரி நடுப்பகுதி வரை தொடரும் என்று அவர் நம்புவதாகவும், இரண்டாவது அலை ஜனவரி 21ஆம் திகதி தொடங்கும் ஒரு வார கால சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களைச் சுற்றி ஜனவரி மாதத்தில் வெகுஜன பயணத்தால் தூண்டப்படும் என்றும் தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யூ கூறினார். குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க…

Read More

இந்த ஆண்டு 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இது வரலாற்றில் முதல் தடவை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒரு வருடத்திற்குள் 300,000 க்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற பதிவு செய்து வசதி செய்துள்ளது. இந்தநிலையில் இவ்வருடத்துக்கான இலக்கை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த SLBFE அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். நாடு தற்போது எதிர்நோக்கும் நெருக்கடியைத் தீர்க்க புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பங்களிப்பார்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலதிகமாக ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலைகளை வழங்குவதற்கு அமைச்சர் நாணயக்கார சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இதற்கிடையில்,…

Read More

( எம்.என்.எம்.அப்ராஸ்,நூருல் ஹுதா உமர்) டயக்கோனியா சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு மற்றும் குடும்பரீதியில் பெண்கள்,சிறார்கள் மத்தியில் தாக்கம் குறித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளம் ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வின் இரண்டாவது செயலமர்வு கல்முனையில்(18) இடம்பெற்றது. முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல்.ஹபீலா இணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வளவாலர்களாக சிரேஸ்ஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ்,உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.பி.அப்துல் சுக்கூர் ஆகியோர் கலந்து கொண்டதுடன்,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.எல்.எப்.சிபாயா, பி. ஜெனித்தா,பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான எஸ்.எம்.ஏ.நஜீப், எஸ்.நிஸாந்தினி மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அலுவலக கணக்காளர் ஆர்.அனுஸ்கா உட்பட இளம் ஊடகவியலார்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் பயிற்சி நெறியில் கலந்து கொண்ட இளம் ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Read More

கட்டாரில் இடம்பெற்ற உலகக் கிண்ண உதைபந்து தொடரின் இறுதி போட்டயில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது. இந்நிலையில், உலகக் கிண்ண உதைபந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து தங்கப் பாதணி “கோல்டன் ஷூ” விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார். அர்ஜென்டினா அணியின் மெஸ்சி தங்கப் பந்து “கோல்டன் போல்” விருதை வென்றார். சிறந்த இளம் வீரருக்கான விருதை அர்ஜென்டினாவின் மிட் பீல்டர் என்சோ பெர்னாண்டஸ் வென்றார், சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் க்ளோவ் விருதை எமி மார்டினெஸ் வென்றார்.

Read More

உணவகங்களில் சிற்றுண்டி மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் நேற்று(18) அறிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை குறைப்பிற்கு ஏற்ப இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கொத்து, மறக்கறி ரொட்டி, பராட்டா மற்றும் முட்டை ரொட்டியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது

Read More